காலையில் நீங்கள் குடிக்கும் காஃபியில் நெய் கலந்து குடித்தால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரியுமா?

காஃபி

உங்கள் காபி கப்பின் அளவை பொறுத்தும் 1/2 அல்லது 1 டீஸ்பூன் நெய்யைச் சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் காபி நுரைக்கும் வரை ஸ்பூனை வைத்து நெய்யை காபியில் நன்றாக கலக்க வேண்டும். பின்னர் இந்த உற்சாக பானத்தை பருக துவங்குங்கள்.

  • Share this:
கடந்த சில ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகளில் பிரபலமாக இருப்பது புல்லட் ப்ரூஃப் காபி. காய்ச்சிய காபியில் சால்ட் இல்லாத வெண்ணை மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற MCT (medium chain triglyceride) ஆயில் சேர்த்து தயாரிக்கப்படுவதே புல்லட் ப்ரூஃப் காபி எனப்படுகிறது. இது மிகவும் பிரபலமான ஒரு காபி வகையாக இருக்கிறது.

காய்ச்சிய காபியுடன் தயாரிக்கப்படும் இந்த அதிக கலோரி கொண்ட காஃபினேட் பானம் மேற்கத்திய நாடுகளில் விரைவில் வெற்றி பெற்று மக்களை வெகுவாக ஈர்த்தது. புல்லட் ப்ரூஃப் காபி, பட்டர் காபி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பானம் குறைந்த கார்போஹைட்ரேட் டயட்டர்கள் (carb dieters) மற்றும் கெட்டோஜெனிக் உணவு திட்டங்களை (ketogenic eating plans) பின்பற்றுபவர்களிடையே பிரபலமான ஒன்றாக இருக்கிறது.

சிற்றுண்டி அல்லது பேஸ்ட்ரிகள் போன்ற பல அதிக கார்போஹைட்ரேட் கொண்ட பதப்படுத்தப்பட்ட காலை உணவுகள் விரைவான ஆற்றல் மற்றும் ஊக்கத்தை அளித்தாலும் ரத்த சர்க்கரையை சீர்குலைத்து சில சிக்கல்களுக்கு வழிவகுக்கின்றன.

காலை உணவாக புல்லட் ப்ரூஃப் காபியை பருகுவது நாளை உற்சாகமாக துவக்க மிகச்சிறப்பான ஆற்றலை உடலுக்கு வழங்குவதாக புல்லட் ப்ரூஃப் டயட்டை கண்டறிந்த டேவ் ஆஸ்ப்ரே குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த புல்லட் ப்ரூஃப் கையில் வெண்ணை அல்லது MCT ஆயிலுக்கு பதில் நெய் சேர்த்து குடிக்கும் பழக்கம் புல்லட் ப்ரூஃப் டயட்டை பின்பற்றுபவர்கள் இடையே அதிகரித்து வருகிறது. காபியில் நெய்யைக் கலப்பது எப்படி சிறந்த வழியாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.



அசிடிட்டி:

பொதுவாக காபி குடிப்பதால் அசிடிட்டி சிக்கல் எழுவதாக பலர் கூறுவர். இந்த அசிடிட்டி பிரச்சனை குடல் மற்றும் செரிமான அமைப்பை பாதிக்கிறது. காபியில் நெய் சேர்த்து குடிப்பது இந்த சிக்கலுக்கு எளிய தீர்வாக இருக்கிறது. காபியில் நெய்யை சேர்த்து குடித்தால் அசிடிட்டி மற்றும் வீக்கத்தை இரு வழிகளில் குறைக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, நெய்யில் இருக்கும் அதிகமான கால்சியம் உள்ளடக்கம் அசிடிட்டியினால் ஏற்படும் விளைவுகளை நடுநிலையாக்க உதவுகிறது. மேலும் நெய்யில் காணப்படும் ப்யூட்ரேட் எனப்படும் குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலம் (short chain fatty acid) அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சுக்கு மல்லி காஃபி பொடி : எப்படி அரைப்பது..?

பட்டர் காபியை விட நெய் காபி ஏன் சிறந்தது?

நெய்யில் தூய கொழுப்பு மற்றும் வைட்டமின்கள் ஏ, டி மற்றும் கே, ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 உள்ளிட்டவை நிறைந்துள்ளதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். புல்லட் ப்ரூஃப் காபியில் வெண்ணெய்க்கு பதிலாக நெய்யை பயன்படுத்த பரிந்துரைக்க முக்கிய காரணம் நெய் வெண்ணெயிலிருந்து பெறப்படுகிறது, தவிர அதிலிருக்கும் நீர் உள்ளடக்கம், புரதங்கள் மற்றும் சர்க்கரைகள் குக்குட் அவுட் (cooked out) செய்யப்பட்டு விடுகின்றன.



வெண்ணெய் பயன்படுத்துவது காபிக்கு ஈரப்பதம் அளித்து சுவையில் சிறிதளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தவிர வெண்ணெயில் இருக்கும் சர்க்கரைகள் மற்றும் புரதங்கள் சிலருக்கு ஜீரணிக்க கடினமாக இருக்கும். ஆனால் நெய்யில் அடங்கி இருக்கும் கொழுப்புகள் காபியை ஜீரணிக்க உதவுகின்றன.

எப்போதும் போல காபியை ரெடி செய்து கொண்டு உங்கள் காபி எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதற்கேற்பவும், உங்கள் காபி கப்பின் அளவை பொறுத்தும் 1/2 அல்லது 1 டீஸ்பூன் நெய்யைச் சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் காபி நுரைக்கும் வரை ஸ்பூனை வைத்து நெய்யை காபியில் நன்றாக கலக்க வேண்டும். பின்னர் இந்த உற்சாக பானத்தை பருக துவங்குங்கள்.

 
Published by:Sivaranjani E
First published: