நகைச்சுவையாளரும், நடிகருமான ராஜு ஸ்ரீவத்ஸவா அண்மையில் ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போதே ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு உயிரிழந்து விட்டார். இதுபோல பயிற்சி செய்யும்போதே மரணங்கள் ஏற்படுவது குறித்த செய்தி என்பது முதல்முறை அல்ல.
பயிற்சி செய்யும்போது அல்லது கால்பந்து, கபடி போன்ற விளையாட்டுகளின் போது கூட திடீரென்று சிலருக்கு இறப்பு ஏற்பட்டது குறித்த செய்திகள் நிறைய வந்திருக்கின்றன. குறிப்பாக, மிக கடினமான உடற்பயிற்சிகள் அல்லது டிரெட்மில் பயிற்சிகளை செய்பவர்களும் கூட உயிரிழந்தது குறித்து அண்மைக் காலங்களில் நிறைய செய்திகள் வந்துள்ளன.
முரண்பாடாக நடக்கும் நிகழ்வு
பொதுவாக உடற்பயிற்சி செய்தால் ஹார்ட் அட்டாக், கார்டியாக் அரெஸ்ட் போன்றவற்றை தடுத்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியும் என்ற தகவலை பரவலாக அறிந்து வைத்திருப்பீர்கள். ஆனால், உடற்பயிற்சி செய்தால் மரணம் ஏற்படுகிறது என்பது இதற்கு முரண்பாடான விஷயமாக இருக்கிறது அல்லவா?
ஆம், உடலில் ஏற்கனவே சில கோளாறுகள் இருப்பின், உடற்பயிற்சி செய்யும்போது அரிதிலும், அரிதாக இதுபோன்ற நிகழ்வுகள் நடக்க வாய்ப்பு உண்டு.
ரத்த நாள பாதிப்புகள் என்றால் என்ன
நம் இதயத்திற்கு தேவையான ரத்தத்தை விநியோகம் செய்யக் கூடிய ரத்த நாளங்களில் திடீரென்று அடைப்பு ஏற்படுவதன் காரணமாக இதுபோன்ற ஹார்ட் அட்டாக் ஏற்படக் கூடும். ரத்த நாளங்களில் நீண்ட காலமாக தடை ஏற்பட்டு சுமார் 70 சதவீத அடைப்பு ஏற்படும் பட்சத்தில் ஆன்ஜைனா அல்லது நெஞ்சுவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படக் கூடும்.
ரத்த நாளங்களில் நீண்ட நாட்களாகவே மெல்லிய தட்டுக்கள் படிந்து வரும், அவை ஒரு பெரும் கட்டியாக உருவாகும்போது ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது. பெரும்பாலும் இது முன் அறிகுறிகள் இல்லாமல் திடீரென்று பாதிப்பை ஏற்படுத்தும்.
உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்தால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துமா..?
தட்டுக்குள் எப்படி உருவாகிறது
ரத்த நாளச் சுவர்களில் ஏற்படக் கூடிய காயம் அல்லது அழற்சி ஆகியவை காரணமாக இது ஏற்படுகிறது. இது தவிர புகைப்பிடிப்பது, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, ஆரோக்கியமற்ற உணவு முறை, மன அழுத்தம், போதுமான தூக்கமின்மை போன்ற காரணங்களால் இது ஏற்படலாம்.
காயங்கள் ஏற்பட்ட இடத்தில் ரத்தத்தில் உள்ள கொழுப்பு படியத் தொடங்கும்போது அது தட்டுக்களாக உருவெடுக்க தொடங்கும். மிக கடுமையான, கடினமாக உடற்பயிற்சிகளை செய்யும்போதும் இதேபோன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
அதிகாலையில் நடக்கும் நிகழ்வுகள்
பெரும்பாலும் உடற்பயிற்சியின்போது நடக்கும் ஹார்ட் அட்டாக் என்பது அதிகாலையில் நடக்கக் கூடியதாக இருக்கிறது. ஏனென்றால் இந்த சமயத்தில் அதிக ரத்த அழுத்தம், ரத்தம் உரைவதற்கான அதிக வாய்ப்பு போன்றவை இருக்கிறது.
கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 5 உணவுகள்...
உடற்பயிற்சி கெட்டதல்ல
சிலருக்கு பிரச்சனை ஏற்படுகிறது என்பதால் ஒட்டுமொத்தமாக உடற்பயிற்சி என்றாலே கெட்டது என்று முடிவு செய்துவிடக் கூடாது. யாருக்கெல்லாம் ரத்த நாளங்களில் பிரச்சினை இருக்கிறதோ, அவர்கள் அதை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கார்டியாக் மரணங்கள்
தங்களுடைய ரத்த நாளங்களில் பிரச்சினை இருப்பதை அறியாமல் மிகக் கடுமையான உற்பயிற்சிகளை செய்யக் கூடியவர்களுக்கு தான் பெரும்பாலும் இது ஏற்படுகிறது. அதே சமயம், முறையான சிகிச்சை மற்றும் ஓய்வு எடுத்துக் கொள்பவர்கள் இதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Exercise, Heart attack