ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

30 வயதிற்குப் பின் நம் உடலில் கார்போ ஹைட்ரேட், கொழுப்பு சத்துகள் நன்மை செய்யுமா?

30 வயதிற்குப் பின் நம் உடலில் கார்போ ஹைட்ரேட், கொழுப்பு சத்துகள் நன்மை செய்யுமா?

30 வயதினை தொட்டவர்களுக்கு கார்போஹைட்ரேட்டுகளும் கொழுப்பும் தேவையா?

30 வயதினை தொட்டவர்களுக்கு கார்போஹைட்ரேட்டுகளும் கொழுப்பும் தேவையா?

குறைந்த அளவிலான கார்போஹைட்ரேட் கொண்ட உணவு பழக்கத்தை மேற்கொள்வோருக்கு பொதுவாகவே உடல் சோர்வு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொதுவாகவே கார்போஹைட்ரேட்டுகளும் கொழுப்பு சத்தும் உடலுக்கு தீங்கை விளைவிப்பதாகவே ஒரு பிம்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு ஊட்டச்சத்து நிபுணர்களும், மருத்துவர்களும், பொதுமக்களும் கொழுப்பு என்றாலே அதனை கெடுதல் தரும் ஒன்றாகவே பார்க்கின்றனர். ஆனால் 30 வயதோ அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு உடலில் கார்போஹைட்ரேட்டுகளும் கொழுப்பு சத்தும் போதுமான அளவில் இருப்பது அவசியமாகும்.

அனைத்து விதமான கொழுப்புகளும் கார்போஹைட்ரேட்டும் உடலின் எடையை அதிகரிப்பதில்லை. உண்மையாக சொல்லப்போனால் நம்மில் அனைவருக்குமே குறிப்பிட்ட அளவிலான கொழுப்புச்சத்தும் கார்போஹைட்ரேட்களும் உடல் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு தேவைப்படுகிறது.

30 வயதிற்குப் பின் நம் உடலுக்கு என்ன நடக்கும்?

ஒருவர் முப்பது வயதில் எட்டிய நிலையில் ஆண் பெண் என வித்தியாசம் இன்றி இரு பாலினத்தோருக்குமே சில ஹார்மோன்கள் சுரக்க ஆரம்பிக்கின்றன. பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் சுரக்க ஆரம்பித்து 35 வயதில் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். இதன் காரணமாக பெண்களின் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. இதேபோல ஆண்களை எடுத்துக் கொண்டால் வயது அதிகரிக்க அதிகரிக்க அவர்களின் டெஸ்ட்ரோஸ்டோன் அளவுகள் குறையும். இதன் காரணமாக ஆண்களுக்கு உடல் எடை அதிகரிப்பதும், தொப்பை போடுவதும், வலுவான தசைகளை பெறுவதும் கடினமானதாக மாறுகிறது.

வளர்ச்சிதை மாற்றம் குறைதல்:

நம் உட்கொள்ளும் உணவினை, சக்தியாக மாற்றி உடலுக்கு தேவையான எரிபொருளாக மாற்றும் வேலை வளர்சிதை மற்றம் என அழைக்கப்படுகிறது. 30 வயதிற்கு பிறகு வளர்ச்சிதை மாற்றம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். இதன் காரணமாகவே பலருக்கு கொழுப்பு சத்துக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளத் தேவையில்லை என்ற தவறான கருத்து நிலவி வருகிறது. உண்மையில் மிகக் குறைந்த அளவு கார்போஹைட்ரேட்டுகளையும் கொழுப்புக்களையும் நாம் எடுத்துக் கொள்ளும் போது அவை நீண்ட கால அடிப்படையில் தொடர்ந்தால் உடலளவிலும் மனதளவிலும் அவை பயங்கர விளைவுகளை உண்டாக்கலாம்.

குறைந்த அளவு கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்களால் என்ன பாதிப்பு ஏற்படும்?

தேவையான அளவுக்கு குறைவாக கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புச்சத்து நாம் எடுத்துக் கொள்ளும் போது அவை நாளடைவில் தசைகளில் வலிமையை குறைத்து வளர்ச்சிதை மாற்றத்தையும் குறிக்கிறது. குறைந்த அளவிலான கார்போஹைட்ரேட் கொண்ட உணவு பழக்கத்தை மேற்கொள்வோருக்கு பொதுவாகவே உடல் சோர்வு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் இருக்கிறது. அதேபோலவே ஒமேகா 3 போன்ற கொழுப்பு அமிலங்களும் நரம்பு மண்டலத்திற்கும் கண்களுக்கும் மிக முக்கிய சத்தாக விளங்குகிறது. மேலும் இவை இதய பாதிப்புகள் ஏற்படாமலும் ரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைத்தும் நம்மை பாதுகாக்கிறது.

உடற்பயிற்சியும் அவசியம்:

30 வயதை நெருங்கும் வேளையில் உடலில் உள்ள தசைகளின் வலிமையை தக்க வைத்துக் கொள்வதற்கும், எலும்புகளின் ஆரோக்கியத்தை பேணிக் காப்பதற்கும் உடற்பயிற்சி செய்வது என்பது அவசியமாகிறது. மேலும் ஆரோக்கியமான உடல் எடையை பேணி காப்பதற்கும் உடற்பயிற்சி மிகவும் அவசியம். ஆனால் குறைந்த அளவிலான கார்போஹைட்ரேட்டுகளையும் கொழுப்புச் சத்துக்களையும் கொண்ட உணவுகளை உட்கொள்ளும் போது அவை நேரடியாக நமது உடல் இயக்கங்களில் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும்.

என்ன விதமான கொழுப்பு சத்துக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்?

நம் உடல் ஆரோக்கியமாக இயங்குவதற்கு குறிப்பிட்ட அளவிலான கொழுப்பு சத்தும் கார்போஹைட்ரேட்டுகளும் அவசியம். எந்த விதமாக நாம் எடுத்துக் கொள்கிறோம் என்பதும் முக்கியமானது. உதாரணத்திற்கு ஓட்ஸ், தானியங்கள், பழுப்பு அரிசி ஆகியவற்றில் இருக்கும் கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு நன்மை அளிக்க கூடியவை. அதுபோலவே ஒமேகா 3 அதிகம் நிறைந்த பிளாக்ஸ் சீட்ஸ், மீன், ஆலிவ் எண்ணெய், அவகடோ ஆகியவையும் நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Also Read : 30 வயதை கடந்த பெண்களே... உங்களுக்கு இனிமேல் வரப்போகும் உடல் நலப் பிரச்சனைகளை தெரிந்துகொள்ளுங்கள்...

உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் கொழுப்பு சத்தும் கார்போஹைட்ரேட்டுக்களையும் சரியான அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது அவை உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைக்க உதவும் என்பதில் சந்தேகம் இல்லை.

First published:

Tags: Carbohydrate Food, Diet, Protein Diet