முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / நள்ளிரவு அல்லது அதிகாலையில் கடுமையான பசி ஏற்படுகிறதா? காரணம் இதுதான்...

நள்ளிரவு அல்லது அதிகாலையில் கடுமையான பசி ஏற்படுகிறதா? காரணம் இதுதான்...

பசி

பசி

சர்காடியன் ரிதம் (Circadian Rhythm)  உடலின் பசி உணர்வைத் தூண்டக்கூடிய ஹார்மோன்களைச் சுரப்பதால்தான் பசி ஏற்படுகிறது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ஒருவருக்கு நள்ளிரவிலோ ,  அதிகாலையிலோ அல்லது படுக்கையிலிருந்து எழுந்த உடனேயோ பசி ஏற்படுகிறது எனில் உங்களின் அன்றாட நடைமுறையில், உடலளவில் ஏதோ மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

அந்த மாற்றத்தால் சர்காடியன் ரிதம் (Circadian Rhythm)  உடலின் பசி உணர்வைத் தூண்டக்கூடிய ஹார்மோன்களைச் சுரப்பதால்தான் உங்களுக்கு  பசி ஏற்படுகிறது. இதை ’ஒபேசிட்டி’ (Obesity) என்னும் தலைப்பில் சில்வர் ஸ்பிரிங் வெளியிட்ட ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.

எந்த மாதிரியான மாற்றங்கள் உங்கள் அன்றாட நடவடிக்கைகளிலிருந்து மாறுபட்டால் பசி நிகழும் என்பதைக் காணலாம்.

போதுமான உணவு உட்கொள்ளாமை

டயட்ரி கைட்லைன் 2015 - 2020 படி ஒரு நாளைக்கு பெண் 1,600 - 2400 கலோரிகளும் ஒரு ஆண் 2000 - 3000 கலோரிகளும் உண்ண வேண்டும் என்று குறிப்பிடுகிறது. இந்த கலோரி படி பார்த்தால் இன்று டயட் என்கிற பெயரில் பலரும் உணவை தவிர்க்கின்றனர்.

வேலை காரணமாகவும் உணவைத் தவிர்க்கின்றனர். இப்படி உணவை உட்கொண்டால் அவர்களுக்கு பசி உணர்வு ஏற்படலாம். அதேபோல் பசி என்பது வயிற்றுக்கு மட்டுமல்ல. உடல் ஆற்றல் தன்மை இழக்கும்போது அதை வெளிப்படுத்தும் ஒரு அறிகுறிதான் பசி. ஆதலால், இனியாவது உணவை சரியான நேர்த்திற்கு உடலின் தேவைக்கு ஏற்ப உட்கொள்ளுங்கள்.

உடற்பயிற்சிகளில் மாற்றம் 

நீங்கள் வழக்கத்திற்கு மாறாக கூடுதலாக உடற்பயிற்சி மேற்கொள்கிறீர்கள் எனில் உடலின் அதிக கலோரிகள் எரிக்கப்படும். உடற்பயிற்சியின் போது அதிக ஆற்றலும் வெளியேறும். இதை சரிசெய்ய போதுமான கலோரிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கு இரவிலோ, அதிகாலையிலோ பசி ஏற்படலாம்.

போதுமான தூக்கமின்மை 

அமெரிக்க நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் வெளியிட்டல் ’ஸ்லீப் ’ என்கிற ஆய்வில் தூக்க முறையில் மாற்றம், போதுமான தூக்கமின்மை இருந்தால் பசியின்மைப் பிரச்னை ஏற்படும் என்று கூறுகிறது. பசியின்மையால், நீங்கள் நாள் முழுவதும் உண்ணாமல் இருந்தாலும், போதுமான உணவு உண்ணாமலும் இருந்தால் நடு இரவிலோ, அதிகாலையிலோ பசி உணர்வு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

இரவில்லோ, அதிகாலையிலோ பசி ஏற்படுவது நோய் அறிகுறி  

ஒருவருக்கு இரவிலோ அதிகாலையிலோ பசி உணர்வு ஏற்படுவதற்குக் பெரும் முக்கியக் காரணம் தூக்கமின்மை, போதுமான உணவு உட்கொள்ளாமை என்கிறது National Eating Disorders Association . இதை உணவுக் கோளாறு ( Eating Disorder ) நோய் எனவும் குறிப்பிடுகிறது. இதை உடனடியாக சரிசெய்யாவிட்டால் அது எந்தவிதமான ஆபத்தையும் ஏற்படுத்தலாம் எனவும் எச்சரிக்கிறது.

இதை எவ்வாறு சரி செய்யலாம்

இந்த பிரச்னையை உடனடியாக சரி செய்துவிட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இதை மாற்ற முடியும்.

பசி, hungry
பசி

நீங்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு கலோரிகள் எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை கவனிக்க வேண்டும். பின் டயட்ரி கைட்லைன் குறிப்பிட்டபடி கலோரிகள் எடுத்துக் கொள்கிறீர்களா? என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்ப உணவை உட்கொள்ள வேண்டும். சீக்கிரமாக உணவு உட்கொள்ள வேண்டும். நேரம் தாழ்த்தி உணவு உட்கொள்வதும் தவறு.

குறைந்தது ஏழு மணி நேரமாவது தூங்க வேண்டும். இது மனித ஆரோக்கத்தை தக்க வைக்க மருத்துவர்கள் வகுத்து வைத்துள்ள குறைந்த அளவிலான உறக்கமே. நீங்கள் உடம்புத் தேவையைப் பொருத்து உங்கள் தூக்க நேரத்தைக் கூட்டிக் கொள்ளுங்கள்.

சிறந்த வழி உங்கள் மருத்துவரை அணுகியும் சில வழிமுறைகளைக் கடைபிடிக்கலாம்.

First published:

Tags: Health tips