மாதவிடாயின் போது மார்பகங்களில் வலி உண்டாக என்ன காரணம்..?

மார்பக வலி

மாதவிடாய் வருவதற்கு முன்பே அதற்காக நம் உடல் தயார் நிலையில் இருக்கவே இந்த அறிகுறிகள்.

 • Share this:
  மாதவிடாய் வருவதற்கு 3 நாட்களுக்கு முன்னரே தொடை வலி, இடுப்பு வலி, கோபம் , மற்றவர்கள் மீது காரணமே இல்லாத வெறுப்பு , அடி வயிற்று வலி போன்றவை உண்டாகும். அதில் மார்பக வலியும் அடங்கும். மார்பகங்களில் கனத்த வலி இருக்கும். வீங்கியது போல் வலி உண்டாகும். சிலருக்கு கை வைக்க முடியாதபடியும் வலிக்கலாம். இப்படி வலி உண்டாவதற்கு என்ன காரணம் என்பது பற்றி தெரியுமா..?

  மாதவிடாய் வருவதற்கு முன்பே அதற்காக நம் உடல் தயார் நிலையில் இருக்கவே இந்த அறிகுறிகள். அதாவது மாதவிடாய்க்கு முன்பே நம் உடலில் புரோஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஆகிய இரு ஹார்மோன்கள் சுரக்கத் தொடங்குகின்றன. இந்த ஹார்மோன்களின் ஏற்ற இறக்கம்தான் இதுபோன்ற அறிகுறிகளுக்கு காரணம். இதை ப்ரீ மென்ஸ்டுரல் சிண்ட்ரோம்  (premenstrual syndrome) என்று அழைப்பார்கள். இந்த அறிகுறிகள் மாதவிடாய் வந்து இரண்டு மூன்று நாட்களில் சரியாகிவிடும். ஆனால் சில நேரங்களில் இந்த அறிகுறிகளை சாதாரணமாகவும் கருதிவிடக் கூடாது.  அப்படி உஷாராக இருக்க வேண்டிய அறிகுறிகள் என்னென்ன பார்க்கலாம்.  மார்பகங்களில் அல்லது அக்குள் பகுதியில் கட்டி வளர்ச்சி , வீக்கம் , வலி போன்றவை இருந்தால் சாதாரணமாக கருத வேண்டாம்.

  மார்பகங்களின் முளைக் காம்புகளில் இரத்தமோ, திரவமோ கசிந்தால் அலட்சியப்படுத்த வேண்டாம்.

  மார்பகங்களில் எப்போதும் ஒருவிதமான அசௌகரியம். இதனால் உங்கள் வேலைகள் தடைபடுகின்றன. இதனால் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறீர்கள் எனில் உடனே மருத்துவரை அனுகவும்.

  உங்கள் உடல் ஆரோக்கியம் கெடுவதற்கு நாக்கும் காரணமாக இருக்கலாம்..? பராமரிப்பு மற்றும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

  மாதவிடாய் முடிந்த பின்பும் மார்பகங்களில் கடுமையான வலி இருந்தாலும் மருத்துவரை நாடுங்கள்.

  மார்பகங்களில் திடீர் மாற்றம், சிவந்து போதல், அரிப்பு, முளைக்காம்புகள் உள்ளே சென்று குழி விழுதல், போன்ற இதுவரை காணாத அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை நாடுங்கள்.  மாதவிடாய் மார்பக வலியின் போது செய்ய வேண்டியவை :

  அந்த மாதிரியான நேரத்தில் இறுக்கமான உள்ளாடைகள் அணியாதீர்கள். இரவில் தூங்கும்போது உள்ளாடைகளை கழற்றிவிட்டு சௌகரியமாக துங்குங்கள்.

  கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிறுங்கள்.டீ, காஃபி குடிக்க வேண்டாம். இவை தவிர்த்து வேர்க்கடலை, பசலைக்கீரை, ஆலிவ் , சோளம், வாழைப்பழம், கேரட், பழுப்பரிசி ஆகியவை சாப்பிடலாம்.

  தினமும் மூட்டு வலி, கை கால் வலியால் அவஸ்தை படுகிறீர்களா? இந்த 5 வாழ்க்கை முறை பழக்கங்களை மாற்றுங்கள்

  நடைபயிற்சி , வெதுவெதுப்பான நீரில் குளியல் போட்டால் வலிக்கு இதமாக இருக்கும்.

  உடற்பயிற்சி செய்வது தவறாமல் பின்பற்றுங்கள்.

   
  Published by:Sivaranjani E
  First published: