Home /News /lifestyle /

காற்று பிரிவதை தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன..?

காற்று பிரிவதை தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன..?

காற்று பிரிவதை தடுக்கும் உணவுகள்

காற்று பிரிவதை தடுக்கும் உணவுகள்

ஒரு நபர் தினமும் சராசரியாக 0.6-1.8 லிட்டர் வாயுவை உருவாக்குகிறார். இது செரிமான செயல்முறையின் ஒரு பகுதியாக பெருங்குடல் பாக்டீரியாவால் ஏற்படுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India
  உடலில் இருந்து ‘காற்று பிரிவது’ என்பது விக்கல், தும்மல், வியர்வை போல இயல்பான விஷயம் தான். காலை முதல் வாயு நிறைந்த உணவுகளை அதிக அளவில் சாப்பிடும் போது, அது உடலுக்குள் சென்று காற்றை நிரப்புகிறது. அதனை மலக்குடல் வழியாக வெளியேற்றுவதைத் தான் ஃபார்டிங் எனப்படும் வாயு வெளியேற்றம் அல்லது காற்று பிரிவது எனச் சொல்கிறோம்.

  காஸ்ட்ரோ இன்டெஸ்டினல் சொசைட்டி இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு முடிவுகளின் படி, “ச்மேலும் ஆரோக்கியமான ஒருவர் தினமும் ஃபார்ட் அல்லது பர்ப் என இரண்டு வகைகளில் 12 முதல் 25 முறை வாயுவை வெளியேற்றுகிறார்கள்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  வாயு உருவாக காரணம் என்ன?

  கரையக்கூடிய அல்லது கரையாத நார்ச்சத்து நிறைந்த உணவுகள், கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை அளவை அதிகம் கொண்ட உணவுகள் உடலில் வாயு உற்பத்தியாக காரணமாக அமைகின்றன. இவை மட்டுமின்றி, கந்தகம் (சல்பர்) நிறைந்த உணவுகள், ஜீரணிக்க கடினமான ராஃபினோஸ் என்ற ஒருவகை சர்க்கரை ஆகியவையும் உடலில் அதிக அளவிலான வாயுவை உற்பத்தி செய்கிறது.  தவிர்க்க வேண்டிய உணவுகள்:

  நண்பர்களுடன் அல்லது உறவினர்களுடன் விசேஷத்தில் கலகலப்பாக பேசிக்கொண்டிருக்கும் போது “டர்ர்..டர்ர்...” என்ற சத்தத்துடன் வெளியேறும் காற்று, உங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தக்கூடும். காற்று பிரிவது உடலுக்கு ஆரோக்கியமான விஷயமாக இருந்தாலும் சுற்றியிருப்பவர்களின் பார்வை காரணமாக காற்றை வெளியேற்றத்தை நம்மால் சகித்துக்கொள்ள முடிவதில்லை.  இப்படி தர்மசங்கடமான நிலையை தவிர்க்க விரும்புவோர், பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள், கிழங்கு வகைகள், மாவுச்சத்து நிறைந்த உணவுகள், பிராக்கோலி, காலிபிளவர், லெட்டியூஸ், டர்னிப் உள்ளிட்ட சிலுவை காய்கறிகள், முழு தானியங்களை அதிக அளவில் உட்கொள்ளக்கூடாது. ஒயின் மற்றும் பீர் போன்றவற்றில் கந்தக சத்து அதிகம் இருப்பதால் இவற்றையும் அதிக அளவில் உட்கொள்வது வாயுக்களை உண்டாக்ககூடும்.

  நாள்பட்ட முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா..? காரணங்களும்... தீர்வுகளும்...

  வாயுவை குறைக்க உதவும் உணவுப்பழக்கம்:

  சுறுசுறுப்பான மற்றும் அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் ஆக்டீவான லைப் ஸ்டைலைக் கொண்டிருந்தால் காற்று பிரிவதால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் உணவை நன்றாக மென்று சாப்பிடுவதும் வாயு உருவாவதை தடுப்பதற்கான வழியாகும். வேக, வேகமாக சாப்பிடும் போது அதிக அளவிலான காற்றை உள்ளிழுக்க நேரும், இதுவே மெதுவாக மென்று சாப்பிடும் போது காற்றை உள்ளிழுக்கும் அளவு வெகுவாக குறைகிறது.  புரதச்சத்து நிறைந்த பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லதல்ல என்பதால், இவற்றை சமைப்பதற்கு முன்னதாக ஊறவைத்து பயன்படுத்துவது வாயு உற்பத்தியை குறைக்க உதவுகிறது. சூயிங்கம், கடினமாக மென்று சாப்பிடக்கூடிய மிட்டாய்கள், கூல்ட்ரிங்க்ஸ் போன்றவற்றை வாயு உற்பத்தியை குறைக்க உதவும்.

  மார்பக முலைக்காம்புகளுக்கு அருகில் சின்ன சின்ன கொப்புளங்கள் இருந்தால் அது சாதாரணமா..? மருத்துவரின் விளக்கம்

  வாயு உற்பத்தியை குறைக்க உதவும் உணவுகள்:

  உடலில் உருவாகும் வாயுவை குறைக்க நாம் தினந்தோறும் எடுத்துக்கொள்ள வேண்டிய சில உணவு வகைகள் உள்ளன. முட்டை, மீன், கீரை, சீமை சுரைக்காய், தக்காளி, திராட்சை, முலாம்பழம், லீன் இறைச்சி வகைகள், புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது கூடுமான வரையில் வாயு உற்பத்தியாவதை தடுக்க உதவுகிறது. அடிக்கடி காற்று பிரிவதால் அவதிப்படும் நபர்கள், கெமோமில் பூ டீ (சாமந்தி), பெப்பர் மின்ட் டீ (புதினா) ஆகியவற்றை பருகலாம்.

   
  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Food, Gas Problem

  அடுத்த செய்தி