பற்கள் மஞ்சளாக இருப்பது ஒன்றும் புதிய பிரச்சனையல்ல. பல்வேறு கால கட்டங்களில் அனைவரும் இத்தகைய பிரச்சனையை எதிர்கொண்டிருப்போம். பற்கள் வெள்ளையாக இருப்பது என்பது நம்மின் அழகின் ஒருபகுதியாக இருப்பது மட்டுமல்லாமல், சுகாதாரத்தின் ஒருபகுதியாகவும் உள்ளது.
இதனால் பற்களை வெள்ளையாக வைத்திருக்க வேண்டும் என பலரும் முயற்சி செய்கிறார்கள். ஒரு சிலர் பற்களை வெள்ளையாக்க முயற்சி செய்தால், பற்களில் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நினைத்துக்கொண்டு அத்தகைய முயற்சியை தவிர்க்கிறார்கள். முதலில் பற்களை மஞ்சளாக மாறுவதற்கான காரணங்களை தெரிந்து கொண்டால், அவற்றை எளிதாக வெள்ளையாக்கலாம்.
பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவது ஏன்?
1. ஆரோக்கியமற்ற வாழ்க்கை நடைமுறைகளை கடைபிடித்தல். அதாவது புகைப்படித்தல், மது அருந்ததுதல்
2. காஃபி மற்றும் கார்ப் அடங்கிய உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ளுதல்
3. தடிமனான நரம்புகளை உடைய பிரஷ்ஷை பயன்படுத்துவதால், பற்களின் மீது இருக்கும் எனாமலில் ஏற்படும் சேதம்
4. ப்ளூரைடு நிறைந்த தண்ணீரை குடிநீராக பயன்படுத்துதல்
5. உடல் பிரச்சனைகளால் அதிகப்படியான மருந்துகளை எடுத்துக்கொள்ளுதல்
6. வயதான பற்கள் நாட்கள் செல்லும்போது அதன் பொலிவை இழத்தல் போன்ற காரணங்களால் பற்கள் மஞ்சள் நிறத்தில் மாறுகின்றன.
உங்கள் பற்களை ஆரோக்கியமான முறையில் எளிமையாக வெள்ளையாக்குவதற்கான டிப்ஸ்கள்...
1. ஆப்பிள் சைடர் வினிகர்
பப்மெட் சென்ட்ரல் (PubMed Central) என்ற இதழில் வெளியான ஆய்வுகளின் படி வினிகரை பயன்படுத்தி பற்களை வெள்ளையாக்கலாம். Effects of vinegar on tooth bleaching and dental hard tissues in vitro என்ற தலைப்பில் வெளிவந்த ஆய்வில், குறைந்த அளவு வினிகரை பயன்படுத்தி பற்களை வெண்மையாக்கலாம் என தெரிவித்துள்ள நிபுணர்கள், அதிகப்படியாக பயன்படுத்தும்போது பற்களின் மேற்பரப்பு சேதமாக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளது.
வாய் புற்றுநோயால் 3.5 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவது ஏன்..? தடுக்கும் வழிமுறைகள் என்ன?
2. பல் துலக்குதல்
ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது துலக்குவதை உறுதிசெய்து கொள்ளுங்கள். 2 முதல் 3 நிமிடங்களில் பற்களை துலக்கலாம். அப்போது, வாயின் அனைத்து பகுதிகளையும், நாக்கையும் முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். அவற்றின் மீது படிந்திருக்கும் அழுக்குகளும் பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு காரணமாக இருக்கின்றன. மேலும், பற்களை துலக்கும்போது அதிக அழுத்தம் கொடுத்து துலக்கக் கூடாது. தடிமனான நரம்புகளை உடைய பிரஷ்ஷையும் பயன்படுத்துவதை தவிர்ப்பது பற்களின் ஆரோக்கியத்துக்கு சிறந்தது.
3. ஆரோக்கியமான உணவுமுறை
வைட்டமின் சி, ஃபைபர், பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த உணவை உட்கொள்ளுங்கள். இது உங்கள் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், ஒட்டுமொத்த உடலையும் பராமரிக்க உதவும். பெர்ரி, காபி, பீட்ரூட் போன்ற உணவுகளைத் தவிர்க்கவும், அவை பற்களில் நிறமாற்றத்தை ஏற்படுத்தும்.
4. கரி
பல்துலக்குவதற்கு பயன்படுத்தும் பற்பசைகளை சரியாக தேர்தெடுக்க வேண்டும். உங்களின் பற்களின் தன்மைக்கு ஏற்ப பற்பசைகளை உபயோகித்தால், பற்கள் தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். பற்பசை நிறுவனங்கள் பற்பசை கரியை கேப்சூல்களாக விற்பனை செய்கின்றன. பற்களில் இருக்கும் மஞ்சள் நிறத்தை போக்குவதற்காக விற்பனை செய்யப்படும் அவற்றை வாங்கி பற்களை வெண்மையாக்கலாம்.
5. ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் பேக்கிங் சோடா
மஞ்சள் பற்கள் மற்றும் கறைகளை அகற்ற ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் பேக்கிங் சோடா ஆகியவற்றின் கலவை பயனுள்ளதாக இருக்கும். சந்தைகளில் ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் பேக்கிங் சோடா கொண்ட பற்பசை கிடைப்பதால் அதனை வாங்கி பயன்படுத்தலாம், அல்லது 1 தேக்கரண்டி பேக்கிங் சோடாவுடன் 2 தேக்கரண்டி ஹைட்ரஜன் பெராக்சைடு கலந்து வீட்டிலேயே பேஸ்ட் தயாரித்து பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை போக்கலாம்.