• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • போதைப்பொருள் பயன்படுத்த காரணம் என்ன ? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன ?

போதைப்பொருள் பயன்படுத்த காரணம் என்ன ? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன ?

காட்சி படம்

காட்சி படம்

போதைப்பொருட்களின் பயன்பாடு இன்றைய இளம் வயதினரிடையே அதிகளவு காணப்படுகிறது.

  • Share this:
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் தலைப்பு செய்தி ஆனது. என்.சி.பி கொடுத்துள்ள அறிக்கையின் படி, ‘பிரபல நடிகரின் 23 வயது மகன் ஒரு கப்பலில் விருந்தில் இருந்தார். அந்த இடத்தில் என்சிபி சோதனை செய்தபோது 3 கிராம் கோகோயின், 21 கிராம் சரஸ், 22 எம்.டி.எம்.ஏ மாத்திரைகள் மற்றும் 5 கிராம் எம்.டி’ கிடைத்தது என்று வெளியிட்டிருந்தார்கள்.

போதைப்பொருட்களின் பயன்பாடு இன்றைய இளம் வயதினரிடையே அதிகளவு காணப்படுகிறது. அடிக்கடி போதைப்பொருள் பயன்பாடு குறித்த பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. ஒருவர் ஏன் போதை மருந்துகளை தேடி போகிறார் என்பதற்குப் பின்னால் உள்ள அறிவியல் ரீதியான தகவல்கள் இல்லை என்றாலும், இதற்கு சில மன ரீதியான அழுத்தங்களும் காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.

மதுவுக்கு அடிமை :

யுனைடெட் ஸ்டேட்ஸ் ஃபெடரல்-அரசாங்க ஆராய்ச்சி நிறுவனமான (NIDA), போதைப்பொருள் பயன்பாடு சட்டவிரோத மருந்துகளின் பட்டியலில் உள்ளது. ஹெராயின்,கோகோயின் போன்ற மருந்துகளும் அப்பட்டியலில் அடங்கி இருக்கிறது. ஆல்கஹால் போன்ற மது வகைகளை அருந்திய நபர்கள், மேலும் தன்னுடைய மன அழுத்தத்தை குறைப்பதற்கு போதைப்பொருள் பழக்கத்தில் ஈடுபட தொடங்குகின்றனர். இது உடலுக்கு பல்வேறு வகையான தீங்குகளை விளைவிக்கிறது. மேலும் இதற்கு அடிமையானவர்களால் இப்பழக்கத்தினை கட்டுப்படுத்த முடியாமல் போகிறது என்று நிடா குறிப்பிட்டுள்ளது.

போதை மருந்துகளை எடுக்க காரணம் :

மக்கள் ஏன் போதை மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள் என்பதற்குப் பின்னால் சில உளவியல் காரணங்களும் இருக்கின்றன என்கிறார்கள் மருத்துவர்கள். அடிப்படையில், போதை என்பது ஒரு நபர் மிகவும் மகிழ்ச்சியான ஒரு செயலில் ஈடுபடும்போது, ​​அது அன்றாட செயல்பாடுகளை சீர்குலைக்கும். உடல் மற்றும் மன நலனை எதிர்மறையாக பாதிக்கிறது.

ஒருவர் முதலில் இதனை செய்து பார்க்கலாம் என்று போதை பொருள் பழக்கத்தை தொடங்குகின்றனர். நாளடைவில் இது அந்த நபரின் சுய கட்டுப்பாடு மற்றும் யோசிக்கும் திறன்களை எதிர்மறையாக குறைக்கிறது. மேலும் சிலர் மன அழுத்தத்திலிருந்து திசைதிரும்ப போதைப்பொருளை பயன்படுத்த தொடங்குகிறார். சிலர் அதில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பதால், அதிலிருந்து அவர்களால் மீள முடிவதில்லை. இளைஞர்களிடையே இப்பழக்கம் அதிகளவில் அதிகரித்து வருகிறது என்று மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது.

also read : கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு ஏற்படும் ’கோவிட் டோ’ என்றால் என்ன?

போதை மருந்துகள் எப்படி வேலை செய்கிறது? :

நரம்பியல் சம்பந்தமான அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, போதை மருந்துகள் மூளையின் பாகங்களை உற்சாகப்படுத்துகிறது. போதை மருத்துங்கள் எடுத்து கொண்ட பிறகு உங்கள் மூளையின் பகுதிகள் அதற்கேற்ப பழகிவிடும். மீண்டும் அதே உணர்வை பெற போதை மருந்தை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றி கொண்டே இருக்கும்.

தற்காலிக நிம்மதியை தரும் போதை மருந்துகள் :

மூளையில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் எண்ணற்ற போதை மருந்துகள் உள்ளன. நிபுணர்களின் கூற்றுப்படி, ‘போதை மருந்துகள் நம் மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கின்றன, நாம் எண்ணங்கள், உணர்வுகளை இது பாதிக்கிறது.

இவை மனச்சோர்வு ஏற்படுத்தும். இந்த மனசோர்வு தற்காலிக நிம்மதியை ஒருவருக்கு கொடுக்கும். அதிக அளவு மனச்சோர்வு குமட்டல், மயக்கம் மற்றும் சில சமயங்களில் மரணம் கூட ஏற்படலாம். ஆல்கஹால், கஞ்சா, ஓபியேட் போன்ற ஹீரோயின், மார்ஃபின், GHB ஆகியவை மனச்சோர்வை ஏற்படுத்தும் போதை மருந்துகளாகும்.

also read : இந்த பழக்கங்கள் மூளை பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்குமாம் ..

ஹாலுசினோஜன்கள் - ஹாலுசினோஜென்ஸ் ஒருவரின் யதார்த்த உணர்வை மறைக்கும் விஷயம் ஆகும். எளிதாக சொல்லவேண்டும் என்றால், நீங்கள் கற்பனையான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். இத்தகைய நிகழ்வுகள் சித்தப்பிரம்மை, பீதி, பயம் கலந்த உணர்ச்சிகளை ஏற்படுத்தும்.

எல்எஸ்டி, கஞ்சா, மேஜிக் காளான் மற்றும் கெட்டமைன் ஆகியவைகளும் இதே நிலையை தான் ஏற்படுத்தும். இது இதய துடிப்பு அதிகரிப்பது, உயர் இரத்த அழுத்தம், காய்ச்சல் மற்றும் தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். இதனை , பெரிய அளவில் எடுத்துக் கொள்ளும்போது வலிப்பு, வயிற்றுப் பிடிப்பு போன்றவற்றினை ஏற்படுத்தும். காஃபின், நிகோடின், கோகோயின் மற்றும் எக்ஸ்டஸி (MDMA) ஆகியவை இதில் அடங்கும்.

பாதிப்புகள் என்ன?

போதை மருந்துகளின் தொடர்ச்சியான பயன்பாடு நீண்ட கால அபாயங்களை ஏற்படுத்தும். சித்தப்பிரமை, மனச்சோர்வு, கவலை,மாயத்தோற்றம் போன்ற மனநலப் பிரச்சனைகள், இருதய நோய்கள், சுவாச நோய்கள், சிறுநீரக பாதிப்பு போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தும். போதை மருந்துகள் சில நேரங்களில் மரணத்திற்கு வழிவகுக்கும்.

நீண்ட கால விளைவுகளில் இதயம் அல்லது நுரையீரல் நோய், புற்றுநோய், மனநோய், எச்.ஐ.வி / எய்ட்ஸ், ஹெபடைடிஸ் ஆகிய நோய்களுக்கு வழிவகுக்கும். போதைப்பொருளைப் பயன்படுத்துபவர் அடிமையாகிவிடுவார். அவர்களை அதிலிருந்து மீட்பது கடினமான காரியமாகும்.

போதை பழக்கத்தை குணப்படுத்த முடியுமா?

போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து மீள்வதற்கு முயற்சியும்,அதற்கென காலமும் தேவை. பாதிக்கப்பட்ட ஒருவரின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவது அவசியம். மருத்துவ மேற்பார்வையிலோ அல்லது வீட்டிலோ வாழ்க்கை மற்றும் நடத்தை சார்ந்த சிகிச்சைகளை கொடுத்து குணப்படுத்தலாம்’ என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: