முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மாதவிடாய்க்கு முன்பு சோர்வாக உணர்கிறீர்களா ? இதுதான் காரணம்..!

மாதவிடாய்க்கு முன்பு சோர்வாக உணர்கிறீர்களா ? இதுதான் காரணம்..!

மாதவிடாய்

மாதவிடாய்

Reason For Sickness Before Periods : மாதவிடாய் நேரத்தில் நோயெதிர்ப்பு அமைப்பு மாறக்கூடும் என ஆய்வு கூறுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பீரியட் ஃப்ளூ என்பது சில பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் சில நாட்களுக்கு முன் ஏற்படும் பல அறிகுறிகளை குறிக்கிறது. மாதவிடாய் சுழற்சியின் போது ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்களுடன் தொடர்புடையது. உடல்வலி, சோர்வு மற்றும் காய்ச்சல் வருவது போன்ற சில அறிகுறிகளை உணர வைக்கும்.

மாதவிடாய் சுழற்சியின் சில நேரங்களில் பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறதா?

மாதவிடாய்க்கு முன் அல்லது மாதவிடாய் நேரத்தில் ஒருவர் நோய்வாய்ப்படும் வாய்ப்புகள் அதிகம் என்பதை நிரூபிக்க போதுமான தரவு இல்லை என்றாலும், அது சாத்தியம் என்பதற்கான சில குறிப்புகள் உள்ளன என்கிறார்கள் நிபுணர்கள். மாதவிடாய் நேரத்தில் நோயெதிர்ப்பு அமைப்பு மாற கூடும் என ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. சில சமயங்களில் அடிப்படை நாள்பட்ட நோய் அறிகுறிகளை அதிகரிப்பதை சில பெண்கள் ஒரு புதிய நோயின் அறிகுறிகளாக தவறாக கருதலாம் என்கிறார்கள்.

அதே போல மாதவிடாய்-க்கு சற்று முன் ஏற்படும் பீரியட் ஃப்ளூ, உண்மையான நோய் கிருமியால் ஏற்படுவதில்லை. ஆனால் இது கருப்பை பிடிப்புகள் போன்ற இயற்கையான அழற்சிக்கு எதிராக ஒரு பெண் உடல் வீக்கத்தை எவ்வாறு உணர்கிறார் என்பதற்கான நோயெதிர்ப்பு மறுமொழியின் விளைவாக இருக்கலாம். மேலும் இந்த அறிகுறிகளுக்கு ஹார்மோன்களும் காரணமாக இருக்கலாம் என்னும் நிபுணர்கள், லுடினைசிங் ஹார்மோன் எனப்படும் L.H அளவுகள் மாறும் போது மாதவிடாய்க்கு முன் சில பெண்கள் சோர்வு, வயிற்று உப்புசம், தலைவலி மற்றும் குமட்டல் உள்ளிட்ட அறிகுறிகளை அனுபவிக்கலாம். சில பெண்கள் ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியிலும், ஒவ்வொரு மாதமும் மிகவும் ஆக்ரோஷமான இந்த அறிகுறிகளுடன் கடக்கிறார்கள்.

also read : மன அழுத்தத்திற்கு சோஷியல் மீடியாதான் காரணம்.. ஒரு வாரம் யூஸ் பண்ணாம இருங்க உங்களுக்கே தெரியும்..!

அதே போல் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் ஏற்படும் ஹார்மோன்கள் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு மாற்றங்களின் விளைவாக சில அடிப்படை நோய்களைக் கொண்ட பெண்களுக்கு அழற்சி குடல் நோய்கள் மற்றும் தன்னுடல் தாக்கக் கோளாறுகள் போன்ற நோய்களுடன் தொடர்புடைய அறிகுறிகள் சில சமயங்களில் அண்டவிடுப்பின் போது மோசமடைந்து, ஒரு வாரம் கழித்து மேம்பட்டு, மாதவிடாய் காலத்தில் மீண்டும் மோசமடைவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இது தவிர ஆஸ்துமா உள்ள பெண்களில் 19 - 40% பேர் மாதவிடாய்க்கு முன் அல்லது காலப்போக்கில் மிகவும் தீவிர ஆஸ்துமா பாதிப்புகளை எதிர்கொள்வதாக சில ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன. மாதவிடாய் சுழற்சியின் பரிணாம செயல்பாடு பெண்களுக்கு கர்ப்பமாகும் வாய்ப்பளிப்பதாக கூறும் நிபுணர்கள், கருத்தரித்தல் நிகழும்போது, ​​உடல் கருவை நிராகரிக்காதபடி, நோயெதிர்ப்பு மண்டலத்தின் சில பகுதிகள் ஒடுக்கப்படுகின்றன என்று குறிப்பிடுகின்றனர்.

also read : வைட்டமின்கள், ஊட்டச்சத்து சப்ளிமென்ட்களை எடுத்துக் கொள்வது கொரோனாவை எதிர்கொள்ள உதவுமா..?

மாதவிடாய் சுழற்சியின் போது, கருப்பைகள் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஆகியவற்றை சுரக்கின்றன. இதில் குறிப்பாக புரோஜெஸ்ட்டிரோன், கர்ப்ப காலத்தில் போன்ற உடலில் அதிக அளவில் இருக்கும்போது, நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்.

மாதவிடாய் சுழற்சி எவ்வாறு நோய் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நன்கு புரிந்துகொள்ள கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுவதாக கூறும் நிபுணர்கள், சுழற்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் நீங்கள் தொடர்ந்து நோய்வாய்ப்பட்டால், அதை புறக்கணிக்க வேண்டாம் என்கிறார்கள். அதே போல மாதவிடாய் வருவதற்கு முன்பே சரியாக தூங்குவது, ஆரோக்கியமான மற்றும் சமசீரான உணவுகளை சாப்பிடுவது உள்ளிட்ட நல்ல பழக்கங்களை பின்பற்ற மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

First published:

Tags: Periods, Periods pain