• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • நுரையீரல் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதை சிக்கலாக்கிய கொரோனா பெருந்தொற்று : மருத்துவர்கள் விளக்கம்

நுரையீரல் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதை சிக்கலாக்கிய கொரோனா பெருந்தொற்று : மருத்துவர்கள் விளக்கம்

நுரையீரல்

நுரையீரல்

சுமார் 90 சதவீத நோயாளிகள் நுரையீரல் புற்றுநோய் சிகிச்சைக்காக மிக தாமதமாக வருகிறார்கள். பெரும்பாலான சமயங்களில், சிலரில் புற்றுநோய் குணப்படுத்த முடியாத அளவுக்கு சென்றிருக்கும். எனவே இந்த சந்தர்ப்பங்களில் குணப்படுத்தும் விகிதம் மிகக் குறைவு.

  • Share this:
COVID-19 தொற்று பல வழிகளில் நுரையீரல் புற்றுநோய் அறிகுறிகளைப் பிரதிபலிப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர். இதன் காரணமாக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது சுகாதார வல்லுநர்களுக்கு ஒரு சவாலாக இருக்கிறது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். உதாரணத்திற்கு, பாகல்கோட்டைச் சேர்ந்த 65 வயதான சபீனா என்ற நோயாளிக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு சபீனாவுக்கு கடுமையான இருமல் மற்றும் காய்ச்சல் பிரச்சனை இருந்தது. ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்ததில் அவருக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவரை குணப்படுத்தும் செயல்முறையின் சில வாரங்களுக்குப் பிறகு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா இல்லை என அறிக்கை வெளியானது. ஆனால் அவருக்கு இருமல் தொடர்ந்து இருந்தது. தொடர்ச்சியான இருமலுக்கான காரணத்தை அடையாளம் காண அவரது மருத்துவர் சிடி ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார். அதன்பிறகு தான் அவரது நுரையீரலில் வீரியம் மிக்க கட்டி இருப்பதைக் மருத்துவர் கண்டறிந்துள்ளார்.

ஆரம்பத்தில், அந்த கட்டி கொரோனா காரணமாக ஏற்பட்ட பின்விளைவு என்று நிராகரிக்கப்பட்டது. அவருக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும், சரியாகாத காரணத்தினால் சபீனாவின் மகன் தாயை பெங்களூரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட மேம்பட்ட பரிசோதனையில் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.இதுகுறித்து கிட்வாய் மெமோரியல் இன்ஸ்டிடியூட் ஆப் ஆன்காலஜி இயக்குனர் டாக்டர் சி ராமச்சந்திரா கூறியதாவது, "பெரும்பாலான நுரையீரல் புற்றுநோயாளிகளின் நிலை இதுதான். நுரையீரல் புற்றுநோய் பொதுவாக மிகவும் தாமதமாக கண்டறியப்படுகிறது. அதற்குள் அந்த நோய் ஒருவரில் தீவிரமாக முன்னேறுகிறது. அறிகுறிகள் மற்றும் மேம்பட்ட நிலைக்கு இடையிலான நேர இடைவெளியும் குறைவாக உள்ளது. சுமார் 90 சதவீத நோயாளிகள் நுரையீரல் புற்றுநோய் சிகிச்சைக்காக மிக தாமதமாக வருகிறார்கள். பெரும்பாலான சமயங்களில், சிலரில் புற்றுநோய் குணப்படுத்த முடியாத அளவுக்கு சென்றிருக்கும். எனவே இந்த சந்தர்ப்பங்களில் குணப்படுத்தும் விகிதம் மிகக் குறைவு" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமும் காலையில் ஊற வைத்த வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் : மிஸ் பண்ணிடாதீங்க...

அந்த வகையில், COVID-19 தொற்றுநோய் நுரையீரல் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதை மோசமாக்கியுள்ளது. பாதி நேரம், மக்கள் இருமல் மற்றும் பிற அறிகுறிகளைக் கொண்டிருந்தாலும் கூட மருத்துவரைப் பார்க்க அவர்கள் விரும்பவில்லை. மேலும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் சிரப் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எடுத்துக்கொண்டு புற்றுநோய்க்கு எதிரான சிகிச்சையில் பின் தங்கியுள்ளனர். நுரையீரல் புற்றுநோயை எக்ஸ்-ரே அல்லது சிடி ஸ்கேன் மூலம் மட்டுமே கண்டறிய முடியும. எனவே நுரையீரல் பாதிக்கப்பட்ட பெரும்பாலான கொரோனா நோயாளிகளில் சிடிஸ்கேன் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்யப்பட வேண்டும் என்று டாக்டர் சி ராமச்சந்திரா தெரிவித்துள்ளார்.நுரையீரல் புற்றுநோயின் மூன்றாவது மற்றும் நான்காவது நிலைகளில் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை தற்போது நகர மருத்துவமனைகள் அதிகம் பார்த்து வருகின்றன. துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலானவை குணப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது என மருத்துவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இது எல்லா வயதினரிடமும் காணப்படுகிறது. இருப்பினும், ஒரு சிறிய அளவிலான மக்கள் சிடி மற்றும் எக்ஸ்-ரே மூலம் கட்டியைக் கண்டறிந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்குத் தெரியாத புற்றுநோயைக் கண்டறிய கோவிட் அவர்களுக்கு உதவியது என்றும் சில மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு ஸ்பூன் சீரகத்தில் இத்தனை நன்மைகளா ? தெரிந்துக்கொள்ளுங்கள்..

ஆனால் கிராமப்புற பகுதிகள் மற்றும் டவுன்களில் உள்ள மக்களில் எடுக்கப்படும் தவறான நோயறிதல் விஷயங்களை இன்னும் மோசமாக்குகிறது என்று புற்றுநோயியல் நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இருப்பினும், இதுவரை, COVID-19 நுரையீரல் புற்றுநோய் அல்லது கட்டியை ஏற்படுத்துகிறது என்பதை உறுதிப்படுத்த எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, நீங்கள் கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகும் உங்களில் கொரோனா அறிகுறிகள் தொடர்ந்தால், சிடி ஸ்கேன் கட்டாயம் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: