முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கோவிட்-19க்குப் பிறகு ஆண்கள் மலட்டுத்தன்மை , விந்தணு எண்ணிக்கை குறைபாட்டால் பாதிப்பு - மருத்துவர்கள் விளக்கம்..!

கோவிட்-19க்குப் பிறகு ஆண்கள் மலட்டுத்தன்மை , விந்தணு எண்ணிக்கை குறைபாட்டால் பாதிப்பு - மருத்துவர்கள் விளக்கம்..!

நாட்டமின்மை : ஒரு குறிபிட்ட காலத்துக்குப் பிறகு இருவருக்கும் உடலுறவில் நாட்டம் இருக்காது. கள்ளக்காதல் அல்லது முறையற்ற தொடர்பால் இந்த நாட்டமின்மை ஏற்படாது. இயல்பாகவே தம்பதிகளுக்குள் உடலுறவில் ஈர்ப்பு இருக்காது. இருவரும் வெளிப்படையாக பேசி வைத்துக் கொண்டு, அப்படி இருக்கமாட்டார்கள். இருவருக்கும் இடையில் இருக்கும் புரிதலின் அடிப்படையிலேயே நாட்டமின்மை இருக்கும்.

நாட்டமின்மை : ஒரு குறிபிட்ட காலத்துக்குப் பிறகு இருவருக்கும் உடலுறவில் நாட்டம் இருக்காது. கள்ளக்காதல் அல்லது முறையற்ற தொடர்பால் இந்த நாட்டமின்மை ஏற்படாது. இயல்பாகவே தம்பதிகளுக்குள் உடலுறவில் ஈர்ப்பு இருக்காது. இருவரும் வெளிப்படையாக பேசி வைத்துக் கொண்டு, அப்படி இருக்கமாட்டார்கள். இருவருக்கும் இடையில் இருக்கும் புரிதலின் அடிப்படையிலேயே நாட்டமின்மை இருக்கும்.

அனைத்து விந்தணு பாதிப்பு அல்லது ஆண் மலட்டுத்தன்மை சிக்கல்களும் தானாகவே சரியாகிவிடும் மற்றும் மருத்துவ நிபுணரால் சிகிச்சையளிக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்றாலும், சில வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் இயற்கை வைத்தியங்கள், விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தும்.

மேலும் படிக்கவும் ...

இன்று டாக்டர் ஜெயின் எழுதிய கட்டுரையில், கோவிட் தொற்றுக்குப்பின் ஆண் மலட்டுத்தன்மை ஏற்படும் சாத்தியம் உள்ளது என்பது குறித்து பாலியல் நிபுணர் மற்றும் பேராசிரியரான மருத்துவர் சரண்ஷ் ஜெயின் விவரித்துள்ளார். அதற்கான மருத்துவ ஆலோசனை மற்றும் உதவிகள் விவரத்தோடு, இயற்கையான சப்ளிமென்ட்கள் பற்றியும் தெரிவித்துள்ளார்.

செக்ஸ் நம்முடைய கலாச்சாரத்தில் பரவலாக ஊடுருவியுள்ளது, ஆனால் அதைப் பற்றிய பேசுவதோ, சந்தேகங்கள் இருந்தால் தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதோ இந்திய வீடுகளில் இன்றும் பெரிய களங்கம் விளைவிப்பவை மற்றும் அவமானத்துடன் தொடர்புடையவை. இதன் விளைவாக, பெரும்பாலான நபர்கள் பாலியல் ரீதியான சுகாதார பிரச்சினைகளை கையாள அல்லது தகவல்களைக் கண்டுபிடிக்க சுயமாகவே முயற்சிக்கின்றனர். இந்நிலையில், பாலியல் ஆரோக்கியம் குறித்து, பெரும்பாலும் சரிபார்க்கப்படாத ஆன்லைன் தரவுகளின் நாடுகிறார்கள் அல்லது தங்கள் நண்பர்களின் ஆதாரமில்லாத ஆலோசனையைப் பின்பற்றுகிறார்கள்.

பாலியல் ஆரோக்கியம் குறித்து பரவியிருக்கும் தவறான தகவல்களை சரி செய்ய, News18.காம் ஒவ்வொரு வாரமும் ‘லெட்ஸ் டாக் செக்ஸ்’ என்று தலைப்பில் இந்த வாராந்திர பகுதி ஒன்றை இயக்குகிறது. இந்த பகுதி மூலம் பாலியல் பற்றிய உரையாடல்களைத் தொடங்கலாம் மற்றும் பாலியல் நுண்ணறிவு மற்றும் நுணுக்கத்துடன் பாலியல் ரீதியான சுகாதார பிரச்சினைகளை நிவர்த்தி செய்வோம் என்று எதிர்பார்க்கிறோம்.

கோவிட் -19 சுவாச மண்டலத்தை மட்டும் பாதிக்கிறது என்ற கண்ணோட்டத்தில், ஆரம்ப காலஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்ததை, ஒரு ஆராய்ச்சிக் குழு தவறு நிரூபித்துள்ளது. கோவிட்-19 நோய்த்தொற்றின் விளைவாக பல விதமான உறுப்பு சேதம் அல்லது பாதிப்பு மற்றும் உடல் ரீதியாக பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று உடலியல் நிலையை சுட்டிக்காட்டுகிறது. இதை உறுதிப்படுத்தும் சரியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றாலும், கோவிட்-19 காரணமாக ஆணின் கருவுறும் தன்மை பாதிக்கப்படுவதைக் குறிக்கிறது. எனவே, கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை விரைவில் ஃபெர்டிலிட்டி பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பல மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கோவிட்-19 நோய்த்தொற்று ஆண்களின் விந்தணுக்களின் செயல்பாட்டை சேதப்படுத்தியுள்ளது மற்றும் விந்தணுக்களின் உற்பத்தியை பாதிக்கிறது அல்லது ஆண் பாலியல் ஹார்மோன்களின் உருவாக்கத்தை பாதிக்கறது என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும், நீண்ட கால தனிமைப்படுத்தல், மருந்து மற்றும் துன்பம் ஆகியவற்றின் காரணமாக கோவிட்-19 மனச்சோர்வு மற்றும் மன அழுத்தமும் ஆண் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் அல்லது விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைத்து ஆண்களின் பாலியல் வலிமையை பாதிக்கும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

விந்தணுக்களின் அளவுருக்கள் தற்காலிகமாக மோசமடையக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்த சிக்கல்கள் நிரந்தரமா அல்லது தீர்வுகள் இருக்கிறதா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

கோவிட் -19 ஆண் கருவுறுதலை நான்கு வழிகளில் அச்சுறுத்துகிறது:

இலக்கு வைக்கப்பட்ட படையெடுப்பு

டெஸ்டிஸில் ஏற்படும் ACE2 ஏற்பிகளின் உயர்நிலை வெளிப்பாடு – இது வைரஸ்களுக்கு மிகவும் விருப்பமான நுழைவு இடம். ஆண் பிறப்புறுப்பு அமைப்பில் கிருமி செல்கள், லேடிக் (Leydig) செல்கள் மற்றும் செர்டோலி செல்கள் ஆகியவற்றில் ACE2 ஏற்பி இருப்பது SARS-CoV-2 நோய்த்தொற்றின் சாத்தியமான இலக்காக அமைகிறது.

கோவிட் -19 லேடிக் செல்களைக் குறைத்து, அதே நேரத்தில் செர்டோலி செல்கள் வீக்கமடையச் செய்து, பிரிக்கலாம். இந்த செல்கள் தான் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் விந்து உற்பத்திக்கு முக்கியமானவை.

டெஸ்டிஸில் ACE2 ஏற்பிகளின் உயர் வெளிப்பாடு - வைரஸின் பிடித்த நுழைவு புள்ளி - ஒரு கவலை. ஆண் பிறப்புறுப்பு அமைப்பில் கிருமி செல்கள், லேடிக் செல்கள் மற்றும் செர்டோலி செல்கள் ஆகியவற்றில் ACE2 ஏற்பி இருப்பது SARS-CoV-2 நோய்த்தொற்றின் சாத்தியமான இலக்காக அமைகிறது. கோவிட் -19 லேடிக் செல்களைக் குறைக்கிறது, அதே நேரத்தில் செர்டோலி செல்கள் வீக்கமடைந்து பிரிக்கப்படலாம். இந்த செல்கள் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் விந்து உற்பத்திக்கு முக்கியமானவை.

அழற்சி

கோவிட் -19 பாதிப்புக்குப் பின் ஏற்படும் வீக்கம், இனப்பெருக்க திசுக்களுக்கு தற்காலிகமான அல்லது நிரந்தரமான சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற சந்தேகமும் உள்ளது. இதயம் மற்றும் சுற்றியுள்ள தசைகளைச் சுற்றி ஏற்படும் ஹைப்பர் வீக்கம், ஆணுறுப்புக்கு இரத்த ஓட்டத்தைத் தடுக்கலாம் அல்லது குறைக்கலாம். இதனால் விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படுகிறது.

ஜூலை மாதம் வெளியிடப்பட்ட ஆய்வு, கோவிட் -19 இருதய நோய்களை அல்லது குறைபாடுகளை அதிகரிக்கச் செய்வதாகவும், விறைப்புத்தன்மை குறைப்பாடின் அபாயத்தை அதிகரிப்பதாகவும், பாலியல் மற்றும் இனப்பெருக்க ரீதியான பிரச்சினைகளை உருவாக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என்றும் கூறுகிறது.

ஆர்கிடிஸ் எனப்படும் ஒரு விந்தணுக்கள் முழுமையாக வீங்கும் தன்மை பொதுவாக எல்லா இடங்களிலும் காணப்படுவதில்லை. இருப்பினும், அதிக காய்ச்சலுடன், சைட்டோகைன் ஸ்டார்ம்ஸ் எனப்படும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் அதிகப்படியான எதிர்வினை, ஆர்க்கிடிஸுக்கு வழிவகுக்கும் என்று அறிக்கை விளக்குகிறது. இது நிரந்தரமாக, இனப்பெருக்க செயல்பாடு சேதத்தை ஏற்படுத்தும்.

குறிக்கீடு

கோவிட் -19 தொற்று பாதிப்பின் விளைவாக, எண்டோகிரைன் அமைப்பில் மட்டுமே வீக்கம் மற்றும் அழற்சி ஏற்படக்கூடும். இதையொட்டி, ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் பிற பாலியல் ஹார்மோன் அளவுகள் சீர்குலைந்து, கருவுறுதலை பாதிக்கலாம்.

Breast Cancer in Men : ஆண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய்..! ஆரம்பகால அறிகுறிகளும்..சிகிச்சை முறைகளும் என்ன..?

மன அழுத்தம்

தொற்றுநோய் தொடர்பான மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஆகியவை நம்முடைய ஒட்டுமொத்த உடல் மற்றும் மனநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். இது பாலியல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மலட்டுத்தன்மைக் கொண்ட நபர்களில் 25 முதல் 60 சதவீதம் வரை அதிக கவலை மற்றும் மனச்சோர்வு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முதலில் எந்த பாதிப்பு ஏற்பட்டது மன அழுத்தம் அல்லது மலட்டுத்தன்மை என்று விஞ்ஞானிகளுக்குத் தெரியவில்லை.

அவ்வப்போது மன அழுத்தம் தோன்றி மறைவது இயல்பு. ஆனால் மன அழுத்தத்துடன் வாழ்வது அல்லது அதிக மன அழுத்தமுள்ள வாழ்க்கை நிகழ்வுகளை கையாள்வது டோபமைன் மற்றும் செரோடோனின் உற்பத்தியில் குறைபாட்டை ஏற்படுத்தும். இது உங்கள் பாலியல் ஆரோக்கியத்தையும் விந்தணுக்களையும் எதிர்மறையாக பாதிக்கும்.

விந்தணுக்களின் எண்ணிக்கையை எவ்வாறு மீட்டெடுப்பது அல்லது அதிகரிப்பது?

அனைத்து விந்தணு பாதிப்பு அல்லது ஆண் மலட்டுத்தன்மை சிக்கல்களும் தானாகவே சரியாகிவிடும் மற்றும் மருத்துவ நிபுணரால் சிகிச்சையளிக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்றாலும், சில வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் இயற்கை வைத்தியங்கள், விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தும் ஹார்மோன்களை ஆதரிக்கக்கூடும். இது விந்தணுக்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும் மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கையையும் மேம்படுத்தக்கூடும்.

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த, ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிகல்ஸ் (உங்கள் விந்தணுக்களை சேதப்படுத்தும் மூலக்கூறுகள்) குறைக்க உதவுகின்றன. எனவே, உங்கள் உணவில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உணவுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது விந்தணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்த உதவும்.

போதுமான வைட்டமின் சி மற்றும் டி பெறுவதும் அவசியம். வைட்டமின் சி மற்றும் டி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த ஊட்டச்சத்து விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது, அதே நேரத்தில் சிதைந்த விந்து செல்களை குறைக்கிறது (எலுமிச்சை, கிவிஃப்ரூட் போன்றவை). தக்காளியில் லைகோபீன் நிறைந்துள்ளது, இது விந்தணுக்களின் தரம் மற்றும் உற்பத்தியை மேம்படுத்துகிறது. COQ-10 ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, காலிஃபிளவர் மற்றும் கொட்டைகள் ஆகியவற்றில் காணப்படுகிறது, மேலும் சக்கரை வள்ளிக்கிழங்கு, கேரட் மற்றும் கீரைகளில் உள்ள பீட்டா கரோட்டின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவுகின்றன.

பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகளில் காணப்படும் ஒமேகா 3-கொழுப்பு அமிலங்களும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பயனுள்ளதாக இருக்கும். பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட மருத்துவ மூலிகையான அஸ்வகந்தாவும் இதற்கு மிகவும் உதவியாக இருக்கும். இது கவலை மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும், மேலும் மனச்சோர்வை எதிர்த்துப் போராடவும், ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கவும் உதவும்.

ஜன்க் உணவை குறைப்பது, தவிர்ப்பது மற்றும் புதிய பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானிய அடிப்படையிலான உணவுகளை உண்ணுவது அவசியம். அக்ரூட் பருப்புகள், சிட்ரஸ் பழங்கள், பெரும்பாலான மீன் வகைகள், டார்க் சாக்லேட், பூண்டு, வாழைப்பழங்கள், ப்ரோக்கோலி, மஞ்சள், கீரைகள், மற்றும் கொட்டைகள் மற்றும் விதைகள் போன்ற உணவுகள் விந்தணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்த உதவி செய்கிறது.

First published:

Tags: CoronaVirus, Low Sperm Count, Male infertility, Post Corona Symptoms