ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

எச்சரிக்கை... இருமலுக்காக கொடுக்கும் இந்த மருந்து உங்கள் குழந்தையின் உயிருக்கே ஆபத்து விளைவிக்கலாம்.!

எச்சரிக்கை... இருமலுக்காக கொடுக்கும் இந்த மருந்து உங்கள் குழந்தையின் உயிருக்கே ஆபத்து விளைவிக்கலாம்.!

இருமல் மருந்து

இருமல் மருந்து

Cough Syrups for Kids | மருத்துவரின் அனுமதியில்லாமல் கடைகளில் விற்கப்படும் இருமல் மருந்துகளை வாங்கிக் கொடுப்பது என்பது கண்டிப்பாக கூடாது. இவ்வாறு செய்ததினால் பல்வேறு குழந்தைகள் பலவிதமான நோய்களால் பாதிக்கப்பட்டதற்கு பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவை சேர்ந்த ஃபார்மா கம்பெனி ஒன்று தயாரித்த இருமல் மருந்தால் காம்பியாவில் உள்ள 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் அந்த கம்பெனியின் இருமல் மருந்துகளை வாங்குவதற்கு தடை விதித்து உலக சுகாதார அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

காம்பியாவில் 66 குழந்தைகள், இருமல் மருந்து உட்கொண்டதினால் இறந்து விட்டனர். இதனை தொடர்ந்து அந்த மருந்தை ஆய்வுக்கு உட்படுத்திய உலகம் சுகாதார மையம் அக்டோபர் 5ம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் இந்திய ஃபார்மா நிறுவனமான மெய்டன் ஃபார்மாசீயுடிகல்ஸ் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இருமல் மற்றும் ஜலதோஷத்துக்காக கொடுக்கப்படும் நான்கு வகை சிரப்-களையும் தடை செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கோஃபெக்ஸ்மெளின் பேபி சிரப், புரோமெதசின் ஓரல் சொல்யுஷன், மேகாஃப் பேபி சிரப், மேகிரிப் கோல்ட் சிரப் என்று நான்கு மருந்துகளையும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த மருந்துகளை ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்திய போது, அதில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக டைஎத்திலீன் கிளைக்கால், மற்றும் எத்திலீன் கிளைக்கால் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

அதிகபட்ச வேதிப்பொருட்கள் இந்த மருந்துகளில் இருப்பதால் இவை தேவையற்ற எரிச்சல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, சிறுநீர் கழித்தல் பிரச்சனை, தலைவலி, சிறுநீரக சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் உளவியல் ரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். சில நேரங்களில் மரணத்தையே கூட ஏற்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் இந்த அறிவிப்பால் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனெனில் நம்மில் பலரும் சாதாரண இருமல் அல்லது ஜலதோஷம் போன்ற விஷயங்களுக்கு மெடிக்கல் கடைகளில் மருத்துவரிடம் ஆலோசனை கேட்காமலேயே மருந்துகளை எடுத்து கொள்பவராகவே இருக்கிறோம்.

Also Read : முதன்முறையாக தாய்ப்பாலில் மைக்ரோபிளாஸ்டிக் கண்டுபிடிப்பு!

ஆகாஷ் ஹெல்த் கேரில் குழந்தைகள் நல மருத்துவராக வேலை பார்க்கும் டாக்டர் மீனா ஜெயராமிடம் இதைப்பற்றி பேசிய போது, குழந்தைகளுக்கு இருமலுக்கான மருந்துகளை கொடுப்பது என்பது கூடவே கூடாது. அதிலும் முக்கியமாக மருத்துவரின் அனுமதியில்லாமல் கடைகளில் விற்கப்படும் மருந்துகளை வாங்கிக் கொடுப்பது என்பது கண்டிப்பாக கூடாது. இவ்வாறு செய்ததினால் பல்வேறு குழந்தைகள் பலவிதமான நோய்களால் பாதிக்கப்பட்டதற்கு பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. மேலும் இப்படி குழந்தைகளின் உடல்நிலைக்கு ஒத்து வராத மருந்துகளை அவர்களுக்கு கொடுக்கும் பொழுது அவர்களின் உடல் ஆரோக்கியத்தை அவை பல விதங்களில் பாதிக்கின்றன என்று இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சர்தா மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராக இருக்கும், டாக்டர் ரஞ்சித் குலியானிடம் இதைப் பற்றி பேசும்போது, குழந்தைகளுக்கு மருந்துகளை கொடுக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். இருமலுக்காக தயாரிக்கப்படும் ஒவ்வொரு விதமான மருந்திலும் ஒவ்வொரு விதமான வேதி பொருட்கள் கலக்கப்படுகின்றன. அவற்றில் சிலவற்றில் ஆன்ட்டி ஹிஸ்டமின்ஸ் மற்றும் ஆன்ட்டிடுஸ்ஸிவ் என்ற மருந்துகள் காணப்படுகின்றன. இவை மூளையின் மத்திய பகுதியை மட்டுப்படுத்தி இருமலை கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த வகை மருந்துகள் பலவும் இரண்டு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்றதல்ல என்று தெரிவித்துள்ளார்.

Also Read : வாடகை தாய் முறையில் குழந்தை பெற்ற நயன்-விக்கி தம்பதி? - அது என்ன வாடகை தாய் முறை?

இவற்றை எடுத்துக் கொண்டால் பக்கவிளைவாக, அதிகப்படியான தூக்கம் வருவதற்கான அறிகுறிகள் பல்வேறு குழந்தைகளிடம் காணப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் வலிப்பு நோய், சிறுநீரகத்தில் காயம் மற்றும் பல செரிமான கோளாறுகளும் இந்த மருந்துகளால் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by:Selvi M
First published:

Tags: Children, Cough, Health, WHO