• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Ferritin Blood Test : கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஃபெரிடின் ரத்த பரிசோதனை பரிந்துரைப்பது ஏன்..? தெரிந்துகொள்ளுங்கள்..!

Ferritin Blood Test : கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஃபெரிடின் ரத்த பரிசோதனை பரிந்துரைப்பது ஏன்..? தெரிந்துகொள்ளுங்கள்..!

ஃபெரிடின் ரத்த பரிசோதனை

ஃபெரிடின் ரத்த பரிசோதனை

உடலில் உள்ள இரும்பு சத்தின் அளவையும், இரும்பு சத்து சேமிப்பில் ஏற்படும் அசாதாரணங்களின் விளைவுகளையும் தெரிந்து கொள்ளவே ஃபெரிடின் சோதனை பெரும்பாலும் எடுக்கப்படுகிறது.

  • Share this:
கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பலவிதமான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அதில் முக்கியமாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவது ஃபெரிடின் ரத்த பரிசோதனை ஆகும். இது எதற்காக எடுக்கப்படுகிறது, இதன் முக்கியத்துவம் என்ன என்பதை பற்றி பார்க்கலாம். ஃபெரிடின் என்பது இரும்பு சத்து கொண்ட ஒரு ரத்த புரதம். நம் உடல் எவ்வளவு இரும்பு சத்தை சேமிக்கிறது என்பதை பற்றி அறிந்து கொள்ள மருத்துவருக்கு இது உதவுகிறது. பொதுவாக ஃபெரிடின் உடலின் உயிரணுக்களில் வாழ்கிறது, ரத்தத்திலும் கலந்து உள்ளது.

போதுமான இரும்பு சத்து இன்றி சிவப்பு ரத்த அணுக்கள் நமக்கு போதுமான ஆக்ஸிஜனை வழங்க முடியாது. உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனை அனைத்து உயிரணுக்களுக்கும் கொண்டு செல்ல நமது உடல் சிவப்பு ரத்த அணுக்களில் உள்ள இரும்பை சார்ந்துள்ளது.
எனவே ஒரு நபரின் ரத்த ஓட்டத்தில் உள்ள ஃபெரிடினின் அளவை அளவிட ஆய்வக ரத்த பரிசோதனை மிகவும் உதவியாக உள்ளது.

உடலில் உள்ள இரும்பு சத்தின் அளவையும், இரும்பு சத்து சேமிப்பில் ஏற்படும் அசாதாரணங்களின் விளைவுகளையும் தெரிந்து கொள்ளவே ஃபெரிடின் சோதனை பெரும்பாலும் எடுக்கப்படுகிறது. ஒரு நோயாளி இரும்புச்சத்து குறைபாடு அல்லது அதிக இரும்பு சத்து கொண்டுள்ளதாக மருத்துவருக்கு சந்தேகம் ஏற்பட்டால், குறிப்பிட்ட நபருக்கு ஃபெரிடின் ரத்த பரிசோதனை செய்ய மருத்துவர் பரிந்துரைப்பார். நோயாளி உடலில் இருக்கும் ஒட்டுமொத்த இரும்புச்சத்து அளவைப் பற்றிய விவரங்களும் டெஸ்ட் முடிவில் தெரிந்து விடும்.

ரத்த ஃபெரிடினுக்கான இயல்பான வரம்பு:

* ஆண்களுக்கு ஒரு லிட்டருக்கு 24 முதல் 336 மைக்ரோ கிராம்

* பெண்களுக்கு ஒரு லிட்டருக்கு 11 முதல் 307 மைக்ரோ கிராம்

குறைந்த ஃபெரிட்டின் ரத்த அளவுக்கான காரணங்கள்:

ஃபெரிடின் ரத்த சோதனையானது மேற்கண்ட இயல்பான ரேஞ்சை விட குறைவாக இருந்தால் உடல் இரும்பு சத்தை சேமித்து வைக்கும் திறன் மற்றும் உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருப்பதையும் குறிக்கிறது. இதன் விளைவாக ரத்த சோகை ஏற்படலாம். சில அறிகுறிகள் பின்வருமாறு:



* மயக்கம், பலவீனம் மற்றும் சோர்வாக உணருவது

* தலைவலி

* மூச்சு திணறல்

* இயல்பை விட வேகமான இதய துடிப்பு

* வெளிறிய தோற்றம்

CoronaVirus : கோவிட் வைரஸ் எச்சரிப்பது என்ன? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது!

அதிக ஃபெரிட்டின் ரத்த அளவுக்கான காரணங்கள்:

ஃபெரிடின் ரத்த சோதனை இயல்பான அளவை விட அதிகமாக இருந்தால், குறிப்பிட்ட நபரது உடல் அதிக இரும்புச்சத்தை சேமித்து வைக்கும் நிலையில் இருப்பதை குறிக்கலாம். இது கல்லீரல் நோய், முடக்கு வாதம், ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் மற்றும் மிக முக்கியமாக இந்த தொற்றுநோயிலும் சுட்டி காட்டக்கூடும். பொதுவாக உடலில் ஃபெரிடின் அளவு உயர உடல் பருமன், வீக்கம் மற்றும் தினசரி ஆல்கஹால் எடுத்து கொள்வது உள்ளிட்டவை காரணங்களாக உள்ளது. அதிக ஃபெரிட்டின் ரத்த அளவுக்கான வேறு சில அறிகுறிகள் பின்வருமாறு:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

* சோர்வு

* இதய பிரச்சினைகள்

* மூட்டு வலி

* வயிற்று வலி

* குறைந்த எனர்ஜி

* எடை இழப்பு

* முடி உதிர்வு

* அடிவயிறு வலி



குறிப்பாக இந்த கோவிட் 19 தொற்று நோய் காலத்தில் ஃபெரிடின் அளவு குறிப்பிடத்தக்க முன்கணிப்பு மதிப்பைக் கொண்டுள்ளது. நிலைமையை தீர்மானிக்க ஒரு ஃபெரிடின் சோதனை போதாது. தொற்று வைரஸ் மற்றும் கரும்பூஞ்சை ஆகியவை இயல்பை விட அதிகமான இரும்பு சத்து சேமிப்பு இருக்கும் உடல்களில் எளிதில் அழியாமல் வாழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தான் கோவிட் நோயாளிகளுக்கு ஃபெரிடின் ரத்த பரிசோதனை எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: