பிரியா தன்னுடைய முதல் கர்ப்பத்தில் இருக்கிறார். திருமணமாகி பூனாவில் வசிக்கிறார். தன்னுடைய முதல் குழந்தையை கருவில் தாங்கி இருக்கிறார். பிரசவத்திற்கு இங்கு தான் வருவார் என்பதால் அவ்வப்போது இணையம் மூலமாக ஆன்லைன் கன்சல்டேஷன் செய்து கொள்வது வழக்கம். அன்றும் அது போல தொடர்பு கொண்டார்.
பிரியாவின் சந்தேகங்களும் என் பதிலும்.
சிபிசி(CBC)என்றால் என்ன ?
முழுமையான ரத்த எண்ணிக்கை(complete blood count) பரிசோதனை.
கர்ப்ப காலத்தில் (CBC) பரிசோதனை தேவையா? இதன் முக்கியத்துவம் என்ன?
கர்ப்ப காலத்தில் செய்யப்படும் ரத்த பரிசோதனைகளில் முக்கியமானது முழு ரத்த பரிசோதனை. அதில் ரத்தத்தில் உள்ள பல்வேறு செல்கள் குறித்த விபரங்கள் நமக்கு கிடைக்கும். குறிப்பாக சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள் மற்றும் ரத்த தட்டுகள்.
பொதுவாகவே கர்ப்ப காலத்தில் எந்த ரத்த பரிசோதனை செய்தாலும் அவை கர்ப்ப காலத்தில் உள்ள அளவு பிரங்னன்சி ஸ்பெசிவிக் ரேஞ்ச் (pregnancy specific range) என்ற அளவோடு ஒப்பிடப்பட வேண்டும்.
சிவப்பணுக்களைப் பொறுத்தவரை ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சரியாக இருக்கிறதா?என்பது முக்கியமான பரிசோதனையாகும். ஹீமோகுளோபின் குறித்த கட்டுரை இரண்டு வாரங்களுக்கு முன்பே வெளிவந்துள்ளது.
மற்ற ரத்த சிவப்பணு பரிசோதனைகளான ரத்த சிவப்பணுக்களின் பருமன் ,எம் சி வி( MCV) ,சிவப்பணுவில் உள்ள ஹீமோகுளோபின் செறிவு( MCHC) போன்ற நுண்ணிய பரிசோதனைகள் அரிவாள் செல் அல்லது சிக்கில் செல் ( sickle cell anaemia), தலசீமியா(thalassemia) போன்ற ரத்த செல் மாறுபாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை குறிப்பிட்ட மத்திய தரைக்கடல் நாடுகளை சேர்ந்த மக்களுக்கு அதிகமாக இருக்கும் .
கர்ப்ப காலத்தில் வெள்ளை அணுக்களின் (WBC)மொத்த எண்ணிக்கை அதிகரிக்கும். அதில் உள்ள பல்வேறு எதிர்ப்பு சக்தி வெள்ளை அணுக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நியூட்ரோபில்( neutrophil) எனப்படும் உடனடி எதிர்ப்பு சக்தி வெள்ளையணுக்கள்,
லிம்போசைட்( lymphocyte) எனப்படும் உடனடி மற்றும் நீண்ட கால எதிர்ப்பு சக்தி வெள்ளை அணுக்கள்.
ஈசனோப்பில் (eosinophil)எனப்படும் அலர்ஜிக்கு உண்டான வெள்ளை அணுக்கள் போன்றவையாகும்.
Also Read : கர்ப்ப காலத்தில் சுகர் வருமா? டெஸ்ட் தேவையா?
கர்ப்ப காலத்திலும் பிரசவ நேரத்திலும் வெள்ளை அணுக்களுடைய எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அது எந்த நோயையும் குறிப்பது அல்ல.ரத்த தட்டுகள்( platelets) எனப்படும் ப்ளேட்லெட்ஸ் ,கர்ப்ப காலத்தில் பார்ப்பது மிக மிக அவசியமாகும்.
ரத்த தட்டுகளைப் பொறுத்தவரை பொதுவாகவே கர்ப்ப காலத்தில் குறையும். இதை கர்ப்பகால ரத்தத் தட்டு குறைவு (gestational thrombocytopenia) என்று கூறுவர். இது குறிப்பாக ஒன்றரை லட்சம் வரை( 1,50000) இருக்கலாம் .இதைவிட குறைவாக இருப்பின் அவர்களுக்கு வேறு சில ரத்தத் தட்டு குறைபாட்டுக்கான நோய்கள் இருக்கலாம். கர்ப்ப காலத்தில் உண்டாகும் உயர் ரத்த அழுத்த நோயிலும் ரத்தத் தட்டுகளின் அளவு குறைந்து காணப்படும். ஆனால் ரத்த தட்டுகள் குறைவாக இருப்பின் பிரசவ சமயத்தில் அவர்களுக்கு அதிக இரத்தப்போக்கு ஏற்படலாம்.
எனவே அவர்களுக்கு ரத்தத் தட்டு ஏற்றுவதற்கு உரிய வசதி உள்ள மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்கப்படும் . ஒரு சில ரத்த தட்டு பிரச்சினைகள் கர்ப்ப காலத்தில் கண்டுபிடிக்கப்படலாம். பொதுவாக இந்த மாறுதல்களால் குழந்தைக்கு பாதிப்பு உண்டாகாது.
Also Read : கர்ப்ப காலத்தில் தைராய்ட் டெஸ்ட் தேவையா? மாத்திரை எடுக்கலாமா.?
ESR என்பது வழக்கமாக பார்க்கப்படும் ஒரு பரிசோதனையாகும். அதில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பரிசோதனை குழாயில், ரத்தத்தில் உள்ள செல்கள் படிந்து ஊனீர் மட்டும் தனியாக பிரிந்து மேல நிற்கின்ற உயரம் எவ்வளவு என்பதை பார்ப்பதாகும். இது ஒரு சில நோய்களில் மிகவும் அதிகமாக இருக்கும் . ரத்தம் குறைவாக இருப்பவர்களுக்கு அதிகமாக இருக்கும். கர்ப்ப காலத்தில் அதிகமாக இருக்கும்.
பிரியா,
"மிக்க நன்றி, டாக்டர்! தெளிவாக புரிந்தது . மிகவும் பொறுப்புடன் விரிவாக கூறினீர்கள். மிக்க நன்றி. நான் தைரியமாக இந்த கர்ப்ப காலத்தையும் பிரசவத்தையும் உங்கள் உதவியோடு எதிர்கொள்வேன். எனக்கு முழுமையாக நம்பிக்கை வந்து விட்டது" என்று கூறி ஆலோசனையை முடித்துக் கொண்டார்.
கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.