கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்குப் பின் ஏற்படும் உடல் மற்றும் மனதில் ஏற்படும் மாற்றங்களை ஆயுர்வேத வழியில் எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்று பிர்லா ஆயுர்வேதாவின் ஆயுர்வேத மருத்துவர், அங்கீதா குப்தா, BAMS, விளக்கியுள்ளார். அதுகுறித்து இங்கு காண்போம்.
ஆயுர்வேதம், பல பாரம்பரிய மற்றும் வீட்டு சிகிச்சை முறைகளைப் போலவே மிகவும் பாரம்பரியமான, எளிமையான மருத்துவ முறை. ஒரு பெண்ணின் கர்ப்ப காலத்திலும், மகப்பேறுக்குப் பின்பும் உடலை ஆரோக்கியமாக்க, அசாதாரணமான நுண்ணறிவைக் கொண்டுள்ளது. கர்ப்ப காலத்தில் உங்களை அனைவரும் பராமரித்து பார்த்துக் கொள்வார்கள். உங்களைச் சுற்றி குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் போன்ற அன்புக்குரியவர்களால் நீங்கள் தொடர்ந்து மகிழ்ச்சியாக, மன உறுதியுடன் இருப்பீர்கள். நீங்கள் ஒரு உயிரை கருவில் சுமந்து கொண்டிருக்கிறீர்கள்.
இருந்தாலும் கூட, குழந்தை பிறந்த பிறகு, மொத்த கவனிப்பும், பராமரிப்பும், குழந்தை மேல் திரும்புகிறது. ஆனால், அதே நேரத்தில் உங்கள் குழந்தை ஆரோக்கியமாக வளர, உங்களை சார்ந்துள்ளது; குழந்தை பெற்ற பின்பு ஏற்படும் மாற்றங்கள் உங்களை மன, உடல் ரீதியாக சோர்வடையச் செய்யாமல் இருக்க, நாங்கள் சமீபத்தில் ஒரு அற்புதமான வழியைக் கண்டறிந்துள்ளோம்.
ஆயுர்வேதம் ஒரு ஒருங்கிணைந்த மருத்துவ முறை. உடல் மட்டுமின்றி மனதையும் மேம்படுத்துவது முக்கியமானது. எனவே, கர்ப்ப காலத்தில் தாயின் மன ஆரோக்கியத்துடன் தொடங்குவது மிகவும் முக்கியம். கர்ப்பம் என்றாலே மகிழ்ச்சியாகக் கருதப்படுகிறது எனும்போது, பல பெண்களுக்கு புதிய மாற்றங்களை சரிசெய்வதற்கான போராட்டங்கள் ஏற்படுகிறது. அவர்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு தேவையானதை செய்கிறார்கள் என்று அவர்கள் உணர வேண்டும் என்கிறார்.
மேலும் 5000 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுர்வேத சிகிச்சை முறைப் பற்றிய விவரங்கள், கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆயுர்வேதத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த சில உதவிக்குறிப்புகளை எங்களுக்குக் கொடுத்துள்ளது என்று விளக்கிய அவர், கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்குப் பின் ஏற்படும் ஏற்ற தாழ்வுகளை ஆயுர்வேத வழியைப் பின்பற்றி எவ்வாறு சுலபமாக எதிர்கொள்ளலாம் என்று பகிர்ந்துள்ளார்.
ஆயர்வேத முறைப்படி என்ன செய்யலாம்?
*யோகா பயற்சி
*முறையான உணவுப் பழக்கம்
*ஆயுர்வேத சிகிச்சை மற்றும் வாழ்க்கை முறை
*அனலோம் விலோம் மற்றும் பிற போன்ற யோகா பயிற்சிகள் மன அழுத்ததிற்கு நிவாரணமாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன.
*ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு உதவக்கூடிய தாதுக்கள், வைட்டமின்கள் பெற உதவும் ஒரு சீரான உணவில் ஷத்ராஸ் போன்ற உணவு எடுக்கப்பட வேண்டும்.
*ஆயுர்வேத சிகிச்சைகளான நசியம், ஸ்னேக பஸ்தி, மாத்ர பஸ்தி
இந்த சிகிச்சை கர்ப்ப காலத்தில் மட்டுமல்லாமல், குழந்தை பெற்ற பின்பும் உதவியாக இருக்கும்.
கர்ப்பகாலத்தில் யோகா செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா..?
கர்ப்ப காலத்திலும், குழந்தை பிறந்த பின்னும், பெண்களுக்கு கொடுப்பதற்கு பல மருந்துகள் உள்ளன. மருந்துகள் வழியே மகப்பேறு காலத்தை சீர் செய்வதற்காக ஒரு மாத கால சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வாழ்க்கை முறையில் மாற்றங்கள் :
கர்ப்பம் மற்றும் பிரசவத்திலும், அதற்குப் பிறகும், ஒரு பெண்ணின் வாழ்வில் பல்வேறு வாழ்க்கை முறை மாற்றங்கள் ஏற்படக்கூடும். இந்த மாற்றங்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆயுர்வேத நூல்களில் கூறப்பட்ட காலநிலை மாற்றங்களின்படி, ஒரு பெண்ணின் உடல் மற்றும் வாழ்க்கை முறையும் மாற்றங்களை எதிர்கொள்கிறது. இவற்றை எளிதில் எதிர்கொள்ள, பிரசவத்திற்குப் பிறகான ஆயுர்வேத சிகிச்சை உதவுகிறது.
இது குணப்படுத்துதல், சரிசெய்தல், மற்றும் உடல் தோஷ அமைப்புக்கு, குறிப்பாக மிகவும் சமரசம் செய்யப்பட்ட (காற்று / உலர்) தோஷ அமைப்புக்கு, மிகவும் மென்மையான தன்மை தேவைப்படுகிறது. உங்களுக்கு ஏதேனும் கவலைகள் இருந்தால், உங்களை அல்லது குழந்தையை கவனித்துக்கொள்வதற்கு உங்கள் மனநிலை ஆதரவு அளிக்காததாக இருப்பதாக உணர்வது, அல்லது உங்களை பயமுறுத்தும் உணர்வுகள் அல்லது எண்ணங்கள் இருந்தால், உங்கள் மருத்துவருடன் தொடர்பு கொண்டு ஆலோசனை இது சரியான நேரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.