அர்ஜுனா என்று சொன்னாலே நம்மில் பலருக்கு மகாபாரதத்தில் போர்வீரன் மற்றும் இளவரசன் கதாபாத்திரத்தில் வரும் அர்ஜுனனே நினைவுக்கு வருவார். ஆனால் ஆயுர்வேத மருத்துவத்தை நன்கு அறிந்தவர்களுக்கு இது ஒரு பயனுள்ள மூலிகை மருந்து என்பது நன்றாக தெரியும். டெர்மினாலியா அர்ஜுனா (Terminalia arjuna) என்பது டெர்மினாலியா இனத்தைச் சேர்ந்த ஒரு மரம். இது பொதுவாக அர்ஜுனா அல்லது அர்ஜுன் மரம் என்று அறியப்படுகிறது. அர்ஜுனா ஒரு பாரம்பரிய ஆயுர்வேத மூலிகையாக இருந்து வருகிறது.
அர்ஜுனா மரத்தில் கார்டனோலைடு, டானின்கள், ஃபிளாவனாய்டுகள், ட்ரைடர்பெனாய்டு சபோனின்கள், எலாஜிக் ஆசிட் மற்றும் கேலிக் ஆசிட் போன்ற உயிர்வேதியியல் கலவைகள் உள்ளன. இது அற்புதமான குணப்படுத்தும் பண்புகளை வழங்குகிறது.இந்த மரத்தின் சிவப்பு நிறப் பட்டை அதன் மருத்துவ குணங்களுக்காக மிகவும் மதிக்கப்படுகிறது. இந்த அர்ஜுனா மரத்தின் மரப்பட்டைகள் கிட்டத்தட்ட சிவப்பு ரோஜா நிறத்தில் காணப்படுகின்றன. இந்த மரத்தின் பட்டை இதய திசுக்களை வலுப்படுத்துவதோடு, மன மற்றும் உணர்ச்சிக் கூறுகளை மேம்படுத்தும் என நம்பப்படுகிறது.
ஏற்கனவே இருக்கும் பல ஆயுர்வேத தாவரங்கள் இதய ஆரோக்கியத்திற்கு பெரும் உதவியாக இருந்தாலும் இந்த அர்ஜுனனை இதய ஆரோக்கியத்தின் மூலிகை நாயகன் (heart’s herbal hero) என்று அழைக்கலாம். அந்த அளவிற்கு பல இதய ஆரோக்கிய நன்மைகளை அள்ளி தருகிறது.
அர்ஜுனா இதய தசைகளை வலுப்படுத்தவதோடு கரோனரி தமனி இரத்த ஓட்டத்தின் சுழற்சியை மேம்படுத்தவும் மற்றும் இதய தசையை இஸ்கிமிக் சேதத்திலிருந்து தடுக்கும் ஆற்றல் கொண்டது. அர்ஜுனா மூலிகையை பாலுடன் சேர்த்துக் குடிப்பது மிகவும் பிரபலமான இதய டானிக் ஆகும். இதய ஆரோக்கிய பண்புகளைத் தவிர இந்த மரத்தின் சிவப்பு நிற பட்டை பிற சிகிச்சை பண்புகளுக்காக மிகவும் போற்றப்படுகிறது.
அர்ஜுனாவில் உள்ள கார்டனோலைடு, டானின், ஃபிளாவனாய்டு, எலாஜிக் மற்றும் கேலிக் ஆசிட் போன்றவை நம்பமுடியாத மருத்துவ மற்றும் சிகிச்சை குணங்களைக் கொண்டுள்ளன. கபம், பித்தம் உள்ளிட்ட குறைபாடுகளால் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சையளிக்க முக்கிய ஆயுர்வேத மருந்தாக இந்த மூலிகை இருக்கிறது.
அர்ஜுனா மூலிகையின் மற்ற சில ஆரோக்கிய நன்மைகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்..
ரத்த அழுத்த கட்டுப்பாடு..
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த அர்ஜுனா மரப்பட்டை மற்ற மருத்துவ மூலிகைகளுடன் பயன்படுத்தப்படுகிறது. இதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் சிஸ்டாலிக் ரத்த அழுத்தத்தை மேம்படுத்த இது உதவுகிறது.
கற்றாழையை அதிகமாக பயன்படுத்துகிறீர்களா..? அதனால் வரும் பக்கவிளைவுகளை தெரிந்துகொள்ளுங்கள்...
செரிமான ஆரோக்கியம்..
வயிற்றில் செரிமானத்திற்கு பயன்படும் சுரப்பியில் ஸ்திரத்தன்மையை உருவாக்கவும், அதை பாதுகாக்கவும் அர்ஜுனா மூலிகை உதவுகிறது. அமில அலைகளுக்கு எதிராக செயல்பட்டு நெஞ்செரிச்சல் உள்ளிட்ட கோளாறுகளால் செரிமான மண்டலம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கிறது
இதய ஆரோக்கியம்:
அர்ஜுனா பட்டை இதய நோய்க்கான இரண்டு முக்கிய ஆபத்து காரணிகளான கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் BP-யை குறைக்கிறது. ஆக்ஸிஜனேற்றம் மற்றும் உறைதல் எதிர்ப்பு பொருளாக செயல்படுவதன் மூலம் பக்கவாதம், மாரடைப்பு மற்றும் வயது தொடர்பாக ஏற்படும் இதய ஆபத்துகளில் இருந்து பாதுகாக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிவப்பு நிறத்திலான பழங்களும், காய்கறிகளும் ஏன் அவசியம்?
நுரையீரலுக்கு நன்மை..
ஆயுர்வேதத்தின் படி அர்ஜுனா மூலிகை இருமல், ஆஸ்துமா மற்றும் சில நோய்த்தொற்றுகள் உள்ளிட்ட நுரையீரல் கோளாறுகளில் இருந்து விடுபட உதவும். இதன் கபா (இருமல்) பேலன்ஸிங் பண்புகள் இருமல், ஆஸ்துமா உள்ளிட்டவற்றை குறைக்க உதவுகிறது.
நாள்பட்ட அழற்சி..
சக்தி வாய்ந்த மூலிகை என்பதால் அர்ஜுனா நாள்பட்ட அழற்சியை எதிர்த்து போராட உதவுகிறது. மேலும் பொது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.