குழந்தையின்மை பிரச்சினை என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவானது. ஒரு ஆணுக்கு குழந்தையின்மை பிரச்சினை இருக்கிறது என்றால், அவருடைய பெண் துணை கர்ப்பம் அடைவதற்கான வாய்ப்பு குறையும். குழந்தையின்மை பிரச்சினையை சந்திக்கும் மக்களில் 3இல் ஒரு பங்கு மக்கள் ஆண்கள் ஆவர். ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
ஆணிடம் இருந்து எந்த அளவுக்கு விந்தணு வெளியேறுகிறது, விந்தணு உற்பத்தி தரம் என்ன என்பதெல்லாம் மிக முக்கியமான விஷயங்கள் ஆகும். விந்தணு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அதன் தரம் மேம்பட்டதாக இருப்பது அவசியம். ஒரு ஆணின் விந்தணு எண்ணிக்கை என்பது சராசரி அளவை ஒட்டி அமைந்தால் தான் அவர் ஒரு பெண்ணை கருத்தரிக்க வைக்க முடியும். இல்லையேல் அவர் மலட்டுத்தன்மை கொண்ட ஆணாக கருதப்படுவார்.
கருத்தரிக்கும் திறனோடு சேர்த்து, பொதுவாக ஆண்கள் எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்சினை ஆண்மை குறைபாடு அல்லது விரைப்புதன்மை இல்லாமை என்பதாகும். அதாவது, ஒரு ஆண் திருப்திகரமான பாலியல் வாழ்க்கையை நடத்த முடியாதவராக இருப்பார். இதனால், கவலையும், மன உளைச்சலும் உண்டாகும். இந்தப் பிரச்சினைக்கு ஏராளமான சிகிச்சை முறைகள் இருக்கின்றன.
எந்த மருத்துவரை சந்திக்க வேண்டும்
ஒரு ஆணுக்கு மலட்டுத்தன்மை அல்லது ஆண்மை குறைபாடு போன்ற பிரச்சினை இருக்கிறது என்றால், அதை அவர் தன் மனதுக்குள் பூட்டி வைத்துக் கொண்டிருக்க கூடாது. மருத்துவ துறையில் சிறுநீரகவியல் (யூராலஜி பிரிவு மருத்துவரை சந்தித்து ஆலோசனை செய்ய வேண்டும். மலட்டுத்தன்மை குறித்து அதிக ஆய்வுகள் செய்யப்படவில்லை. ஆகவே, ஒரு ஆணுக்கு எதனால் மலட்டுத்தன்மை பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டறிவது சற்று சிக்கலுக்கு உரிய விஷயம் ஆகும்.
தந்தைகளுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு பற்றித் தெரியுமா?
பிரச்சினை குறித்து ஆண்கள் பேச தயங்குவது ஏன்
சமூகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுப்பாடுகள் காரணமாக தன்னுடைய பிரச்சினை குறித்து ஒரு ஆண் பேசுவதற்கு தயங்குகிறார். குறிப்பாக, சமூகத்தில் தன்னுடைய அந்தஸ்து என்ன ஆகுவது என்ற தயக்கம் ஆண்களுக்கு இருக்கிறது. பொதுவாக, மலட்டுத்தன்மையை எதிர்கொள்ளும் ஒரு ஆணின் பாலின உறுதி குறித்து சர்ச்சை எழுவதால் அது பிரச்சினைக்கு வழிவகை செய்கிறது.
சில சமயம் குடும்பத்தினர் கூட ஆண்களுக்கு துணையாக நிற்பதில்லை. இதனால் மிகுந்த அவமானகர சூழலை ஒரு ஆண் உணருகிறார். குறிப்பாக எல்லா தவறும் உன் மீது தான் என்று குற்றம்சாட்டப்படுவதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்.
பிரச்சினையை கையாளுவது எப்படி
மிகவும் உணர்ச்சிகரமான இந்த பிரச்சினையை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் மருத்துவரை அணுக வேண்டும். ஆண் மலட்டுத்தன்மைக்கு தீர்வு காண முடியும் என்ற விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். குழந்தையின்மை பிரச்சினை என்பது பெண்களுக்கானது மட்டுமல்ல. ஆண்களுக்கும் இந்தப் பிரச்சினை உண்டு என்பதை புரிந்து கொண்டு உரிய முறையில் தீர்வு காண வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Male infertility