Home /News /lifestyle /

குழந்தைகளுக்கு ஒமைக்ரான் வேரியன்ட் அதிக பாதிப்பை உண்டாக்குமா..? மருத்துவர்களின் பதில்

குழந்தைகளுக்கு ஒமைக்ரான் வேரியன்ட் அதிக பாதிப்பை உண்டாக்குமா..? மருத்துவர்களின் பதில்

ஒமைக்ரான்

ஒமைக்ரான்

கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட 5% குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
ஓமைக்ரான் வேரியன்ட் காரணமாக நாடு முழுவதும் கொரோனா மீண்டும் வேகெமெடுத்துள்ள நிலையில், 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தொற்றால் பாதிக்கப்படுவது தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் டிவி பிரபலம் கிஷ்வர் மெர்ச்சன்ட்டின் 4 மாத மகன் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டான். அதற்கு சில நாட்களுக்கு முன்பு, நகுல் மேத்தா - ஜான்கி பரேக் ஆகியோரது 11 மாத குழந்தைக்கு தொற்று ஏற்பட்டது. இதனிடையே அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் (AAP) வெளியிட்டுள்ள தரவுகளின் படி, மொத்த COVIDபாதிப்புகளில் 17.4% குழந்தைகள். அமெரிக்காவில் ஒவ்வொரு 1 லட்சம் குழந்தைகளில் சுமார் 11,255 குழந்தைகள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை இந்த தரவு காட்டுகிறது.

ஜனவரி 6-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 5,80,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது பதிவாகியுள்ளது. டிசம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பதிவான பாதிப்புகளை விட தற்போது அங்கு 78% அதிகரித்துள்ளது.

குழந்தைகளில் கோவிட்-19 எவ்வளவு தீவிரமானது.?

பெரியவர்களை விட குழந்தைகளுக்கு கடுமை குறைவான தொற்று உள்ளது. பெரும்பாலான குழந்தை பாதிப்புகளில் தொற்று அறிகுறியற்றது அல்லது லேசான அறிகுறி கொண்டது. கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட 5% குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. குழந்தைகளில் தொற்றின் தீவிரம் குறித்து கூறும் மருத்துவர்கள் குழந்தைகள் தொற்றால் இறந்ததற்கான அறிக்கைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. எனினும் இதில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குழந்தைகளுக்கு முன்பே தீவிர நோய் இருந்ததும் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

2 வயதுக்குட்பட்ட குழந்தைகளால் தொற்று அறிகுறிகளை வெளிப்படையாக வெளிப்படுத்த முடியாது. ஏனென்றால் குழந்தைகள் சாதாரணமாக ஜலதோஷத்திற்கு ஆளாவது இயல்பு. கோவிட் அறிகுறிகள் பொதுவான சளி அறிகுறிகளை போலவே இருப்பதால் அவர்கள் எப்போது தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள் பெறுகிறார்கள் என்பதை கூறுவது கடினம். பெரியவர்களுடன் குழந்தைகள் இருப்பதால் வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இருந்தாலும் கூட குழந்தைகள் சில நேரங்களில் நோய் தொற்றின் முரண்பாடுகளிலிருந்து தப்பிக்க முடிவதில்லை.



பொதுவான அறிகுறிகள் : 3 நாட்களுக்கு மேல் நீடிக்கும் அதிக காய்ச்சல், குழந்தை வாய்வழியே உட்கொள்வது குறைதல், சோர்வு, சுவாச வீதம் அதிகரிப்பு, ஆக்ஸிஜன் செறிவு 95%-ற்கும் குறைவாவது போன்ற அறிகுறிகள் குழந்தைகளிடம் காணப்பட்டால் உடனடியாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும். உதாரணமாக 0-2 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளின் சுவாசம் நிமிடத்திற்கு 60 breaths-களுக்கு மேல் இருந்தால் ஒருவர் மருத்துவரை நாட வேண்டும். அதேபோல, 2-12 மாதங்கள் மற்றும் 12-59 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளின் சுவாசம் நிமிடத்திற்கு 50 மற்றும் 40 சுவாசங்களுக்கு (breaths) மேல் இருந்தால் மருத்துவர்களின் உதவியை பெற வேண்டும்.

சிறுவர்களுக்கு கோவிட் தடுப்பூசியால் உண்டாகும் பக்கவிளைவுகளை எதிர்கொள்வது எப்படி..?

குழந்தைகளுக்கு Omicron எவ்வளவு தீங்கு..?

இந்த கேள்விக்கு இதுவரை கலவையான பதில்கள் கிடைத்துள்ளன். ஒருபுறம் Omicron கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று கூறினாலும், வைரஸின் விளைவுகளைத் தவிர்ப்பதற்கு ஏற்ற வகையில் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் வலுவானது என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒரு சில நிபுணர்கள் இந்த வேரியன்ட் முதன்மையாக மேல் சுவாசக் குழாயைப் பாதிப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது என்றும் கூறியுள்ளனர். இந்த நிலைமை கவலைக்குரியதாக இருக்கலாம், ஆனால் பெரியவர்களை விட ஆபத்தானது அல்ல என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.



தடுப்பு நடவடிக்கை : தொற்று பாதிக்காமல் தடுக்கும் வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்ற குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கற்று தர வேண்டும். குழந்தைக்கு உணர்ச்சி ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கோவிட் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வீட்டிலேயே சமைக்கப்பட்ட உணவை கொடுத்து வைட்டமின் சி, ஜிங்க், வைட்டமின் டி, கால்சியம் போன்ற ஊட்டச்சத்து சத்துக்களை அளித்து அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்ய வேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Baby Care, Kids Care, Omicron

அடுத்த செய்தி