ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மெனோபாஸ் அடைந்த பெண்கள் ஒவ்வொரு வருடமும் மருத்துவ பரிசோதனை செய்வது அவசியம் : ஏன் தெரியுமா..?

மெனோபாஸ் அடைந்த பெண்கள் ஒவ்வொரு வருடமும் மருத்துவ பரிசோதனை செய்வது அவசியம் : ஏன் தெரியுமா..?

மெனோபாஸ் அறிகுறிகள்

மெனோபாஸ் அறிகுறிகள்

மாதவிடாய் சுழற்சியில் ஏற்படக்கூடிய மாற்றம் பெண்ணை பல்வேறு வழிகளிலும் பாதிக்கிறது. உடல் ஆற்றல், கொழுப்பு செல்களில் ஏற்படும் மாற்றம் காரணமாக உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மெனோபாஸ் (Menopause) என்பது ஒரு பெண்ணுடைய மாதவிடாய் சுழற்சியின் முடிவை குறிக்கும் ஒரு இயற்கையான உயிரியல் (biological process) செயல்முறையாகும். இது கருப்பை மற்றும் கருமுட்டை வெளிப்பாடு நின்று போவதைக் குறிக்கிறது. பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்படுகிறது.

மாதவிடாய் காலத்தில் இருந்ததில் விடவும், மெனோபாஸ் காலக்கட்டத்தை அடையும் போது பெண்கள் தங்களைத் தங்களே கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். மாதவிடாய் நின்று போன பிறகு பெண்களுக்கு ஏராளமான உடல் நலப்பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், ஆண்டுதோறும் குறிப்பிட்ட சில பரிசோதனைகளை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். அப்படி பெண்களுக்கான வருடாந்திர ஸ்கிரீனிங் பற்றி விரிவாக பார்க்கலாம்..

மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஸ்கிரீனிங் அவசியமா?

மாதவிடாய் சுழற்சியில் ஏற்படக்கூடிய மாற்றம் பெண்ணை பல்வேறு வழிகளிலும் பாதிக்கிறது. உடல் ஆற்றல், கொழுப்பு செல்களில் ஏற்படும் மாற்றம் காரணமாக உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

புனேவில் உள்ள மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் பத்மா ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “மாதவிடாய் சுழற்சி முற்றிலுமாக நின்ற பிறகு எலும்பு அல்லது இதய ஆரோக்கியம், உடல் வடிவம், அமைப்பு அல்லது உடல் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும். எனவே, மெனோபாஸ் ஸ்கிரீனிங் டெஸ்ட் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமான சோதனைகளில் ஒன்றாகும்” என்கிறார்.

மாதவிடாய் நிற்கும் போதோ அல்லது அதற்குப் பிறகோ ஒவ்வொரு பெண்ணுக்கும் உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் FSH (ஃபோலிக்கிள்-ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன்) அளவைக் கண்காணிக்க மருத்துவர்கள் மூலமாக சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் அந்த பரிசோதனையானது, கருப்பை, கருப்பை வாய் (யோனியிலிருந்து கருப்பை வரை திறப்பு), யோனி (கருப்பை வாயில் இருந்து லேபியா வரை நீண்டு செல்லும் தசைக் கால்வாய்), கருப்பைகள் (முட்டைகளை உருவாக்கும் சுரப்பிகள்), ஃபலோபியன் குழாய்கள் ஆகியவற்றில் உள்ள பிரச்சனைகளைக் கண்டறிய உதவுகிறது.

மெனோபாஸுக்குப் பிறகு செய்ய வேண்டிய பரிசோதனைகள்:

1. ரத்த அழுத்தம்:

மாதவிடாய் நின்ற பெண்களுக்கு அவ்வப்போது இரத்த அழுத்தத்தை பரிசோதிப்பது அவசியம். இது இதய பிரச்சனைகளைத் தடுக்கவும், கண்டறியவும் உதவுகிறது. பெண்களுக்கு நீரிழிவு நோய், இதய நோய், சிறுநீரக பிரச்சனைகள் அல்லது பிற நிலைமைகள் இருந்தால் மாதவிடாய் நின்ற பிறகு தவறாமல் ரத்த அழுத்ததை பரிசோதிக்க வேண்டும்.

Also Read : தொடை கொழுப்பை குறைக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா..? இந்த 5 விஷயங்களை பின்பற்றுங்கள்..!

2. மார்பக புற்றுநோய்:

மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் பெரும்பாலான பெண்களுக்கு மெனோபாஸ் நிலை ஆரம்பித்த பிறகே அதிகமாக உள்ளது. எனவே பெண்கள் மாதந்தோறும் தங்களது மார்பகங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மார்பில் ஏதேனும் அசாதாரண மாற்றம் தென்பட்டால் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லது. 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் ஒவ்வொரு வருடமும் மேமோகிராம் பரிசோதனை செய்து கொள்வது முக்கியமாகும்.

3. கர்ப்பப்பை வாய் புற்றுநோய்:

கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க விரும்பும் பெண்கள் 21 வயதில் இருந்தே பரிசோதனை செய்து கொள்வது நல்லது. 30- 65 வயதிற்குட்பட்ட பெண்கள் ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் ஒரு பேப் சோதனை அல்லது ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை HPV சோதனை செய்து கொள்ள வேண்டும்.

Also Read : பெண்களே உஷார்... பிறப்புறுப்பு சுகாதாரத்தில் இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்..!

4. கொலஸ்ட்ரால் அளவு:

45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். குறிப்பாக மாதவிடாய் சுழற்சி நின்ற பிறகு, மகளிர் நல மருத்துவரின் ஆலோசனையின் படி கொலஸ்ட்ரால் அளவை பரிசோதிக்க வேண்டும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Menopause