• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போடப்படும் தடுப்பூசிகள் : போலியோ போன்ற நோய்கள் தாக்கும் அபாயம்..!

கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போடப்படும் தடுப்பூசிகள் : போலியோ போன்ற நோய்கள் தாக்கும் அபாயம்..!

கொரோனாவால் தள்ளிப்போக்கும் தடுப்பூசிகள்

கொரோனாவால் தள்ளிப்போக்கும் தடுப்பூசிகள்

தடுப்பூசி தயாரிப்பிற்கு நிதியளிப்பதை உறுப்பு நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார் டெட்ரோஸ்.

  • Share this:
    உலகம் முழுவதும் கொரோனாவால் தடுப்பூசி போடுவது தள்ளிப்போடப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் போலியோ போன்ற பிற கொடிய நோய்களுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

    கொரோனா பரவலால் பல நாடுகள் ஊரடங்கை அறிவித்துள்ளன. அதில் இந்தியாவும் அடக்கம். இதனால் பயணங்கள், ஏற்றுமதி, இறக்குமதியும் தடைபட்டுள்ளது. இதன் விளைவாக குறைந்தது 21 நாடுகள் தடுப்பூசி தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

    இந்த தட்டுப்பாட்டால் குழந்தைகள் இறக்கும் அபாயத்தில் உள்ளனர். இது உலக அளவில் துன்பகரமான செய்தி என்றும் கூறியுள்ளார்.

    தாய்க்கு கொரோனா அறிகுறி இருந்தால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா..?

    இதனால் போலியோ, மலேரியா என தடுப்பூசிகள் மூலம் கட்டுப்படுத்தி வந்த நோய்கள் மீண்டும் தலை தூக்கும் நிலை வரும் என்றும் எச்சரித்துள்ளார்.



    எனவே தடுப்பூசி தயாரிப்பிற்கு நிதியளிப்பதை உறுப்பு நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும். 2025 ஆம் ஆண்டில் 300 மில்லியன் குழந்தைகளுக்கு 18 வகையான தடுப்பூசிகளுடன் நோய்த்தடுப்பு மருந்துகளை தயாரிக்க 7.4 பில்லியன் டாலர் தேவைப்படும் என்று கூறியுள்ளார்.

    கொரோனா வைரஸ் கொடிய நோய் என்பது உண்மைதான் .இருந்தாலும் அவசர நிலைக் கருதி உலக நாடுகள் உதவ முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    பார்க்க :

     

     

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: