கொரோனா வைரஸ் பரவல் நம்மை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டி படைத்து கொண்டிருந்த நிலையில், தற்போது மங்கி பாக்ஸ் வைரஸ் அந்த இடத்தை பிடித்து கொண்டது. கொரோனா வைரஸ் பரவல் எந்த அளவிற்கு நம்மை பயம்கொள்ள வைத்ததோ அதே அளவிற்கு தற்போது இந்த மங்கி பாக்ஸ் வைரஸும் நமக்கு அதிக பயத்தை தந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு (WHO) ஜூன் 23 ஆம் தேதி அவசரநிலைக் குழுவின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இது குரங்கு காய்ச்சலை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக வகைப்படுத்த முடியுமா இல்லையா என்பதை குறித்த கூட்டமாக இருக்க உள்ளது.
இதுவரை 39-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 1,600 பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட நபர்களும், 1,500 சந்தேகத்திற்கிடமான நபர்களும் மற்றும் 72 இறப்புகழும் நிகழ்ந்துள்ளது. உலக சுகாதார அமைப்பு மங்கி பாக்ஸை "கிரேடு 3 அவசரநிலை" என்று வகைபடுத்தி உள்ளது. இது உள் அமைப்பில் மிக உயர்ந்த மட்டமாக கருதப்படுகிறது. "கிரேடு 3 அவசரநிலை என்றால், நாட்டின் அலுவலகங்கள், பிராந்திய அலுவலகங்கள் மற்றும் தலைமையகம் ஆகிய மூன்று நிலைகளிலும் பதிலை ஒருங்கிணைத்து வழங்க உள்ள நிலையாகும்" என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.
மேலும் இது குறித்த பல்வேறு தகவல்களையும் வழங்கி வருகிறது. மங்கி பாக்ஸ் காய்ச்சலின் பரவல் என்பது அசாதாரணமானது மற்றும் கவலைக்குரியது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவரான டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார். இந்த பரவல் என்பது பொது சுகாதாரத்தை பிரதிபலிக்கிறதா என்பதை மதிப்பிடுவதற்கு, “சர்வதேச சுகாதார விதிமுறைகளின் கீழ் அடுத்த வாரம் அவசரக் குழுவை சுகாதார அமைப்பு கூட்டவுள்ளது." என்றும் அவர் தெரிவித்து கொண்டார்.
இதற்கடுத்த ட்வீட்டில், உலக சுகாதார அமைப்பின் குறிக்கோளானது, இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளை ஆதரிக்கவும் மற்றும் சோதனை செய்யப்பட்ட பொது சுகாதார கருவிகள் மூலம் பரவலை தடுக்கவும் வழி செய்ய உள்ளது. இதில் கண்காணிப்பு, தொடர்புத் தடமறிதல் மற்றும் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தல் ஆகிய வழிமுறைகளும் அடங்கும்.
இந்த வகை இரத்தம் உள்ளவர்களுக்கு இதய பாதிப்பு நிச்சயம் வருமா..? என்ன காரணம்..?
மேலும், ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் மற்றும் அவர்களது நெருங்கிய தொடர்புகள் உட்பட, மிகவும் ஆபத்தில் உள்ள குழுக்களுக்கு இந்த மங்கி பாக்ஸ் வைரஸ் பரவுவதைக் குறைப்பதற்கான வழிகள் மற்றும் செயல்கள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பது அவசியம்" என்றும் சர்வதேச சுகாதார அமைப்பு கூறியுள்ளது. குரங்குப் காய்ச்சலுக்கு பெரியம்மை தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதற்கான இடைக்கால வழிகாட்டுதலையும் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
மங்கி பாக்ஸ் காய்ச்சலுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசிகளைப் பயன்படுத்துவது குறித்த முடிவுகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எந்த அளவிற்கு ஆபத்தானவை என்றும் மேலும் அதன் நன்மைகள் குறித்தும் ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த காய்ச்சலுக்கு எதிராக பெருமளவிலான தடுப்பூசிகளை உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கவில்லை என்றும் கூறியுள்ளனர். இந்த மங்கி பாக்ஸ் என்பது ஒரு ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் ஆகும், இது பெரியம்மையை போன்ற வைரஸ் வகையாகும். ஆனால் இது குறைவான அளவிலும் கடுமையான அறிகுறிகளுடன் நோயை ஏற்படுத்துகிறது. இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய் வகையை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.