Home /News /lifestyle /

மார்ச் 2020-க்கு பிறகு முதல் முறை குறைந்த கொரோனா மரணங்கள் : எனினும் எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தும் WHO!

மார்ச் 2020-க்கு பிறகு முதல் முறை குறைந்த கொரோனா மரணங்கள் : எனினும் எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தும் WHO!

கொரோனா

கொரோனா

குறைவான மரணங்கள் பதிவாகி உள்ளதன் மூலம் கொரோனா தொற்று முடியும் தருவாயை நெருங்கி விட்டதாக நாம் கருதினாலும், அது இன்னும் முற்றிலும் ஒழியவில்லை. எனவே உலக நாடுகள் வழக்கம் போல தங்கள் விழிப்புணர்வு நடவடிக்கையை பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
புதிதாக பதிவாகி இருக்கும் COVID-19 பாதிப்புகளின் எண்ணிக்கை வியத்தகு அளவில் குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு (WHO), எனினும் 60 லட்சத்திற்கும் அதிகமான மக்களை பலி கொண்டுள்ள தொற்று நோய்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகளை தொடர வேண்டும் என்று உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளது.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய WHO-வின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், மார்ச் 2020-க்கு பிறகு உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் நிகழ்ந்த இறப்புகளின் எண்ணிக்கை கடந்த வாரம் தான் மிக குறைவாக பதிவாகியுள்ளது. பெருந்தொற்று காரணமாக ஏற்படும் மரணங்கள் குறைய தொடங்கி இருப்பது இது உலகளாவிய தொற்று வெடிப்பில் ஒரு திருப்புமுனையாக இருக்க கூடும் என்பதை குறிப்பதாக கூறினார்.ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய டெட்ரோஸ் அதானோம், குறைவான மரணங்கள் பதிவாகி உள்ளதன் மூலம் கொரோனா தொற்று முடியும் தருவாயை நெருங்கி விட்டதாக நாம் கருதினாலும், அது இன்னும் முற்றிலும் ஒழியவில்லை. எனவே உலக நாடுகள் வழக்கம் போல தங்கள் விழிப்புணர்வு நடவடிக்கையை பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தொற்றை ஒரு மராத்தான் பந்தயத்துடன் ஒப்பிட்ட டெட்ரோஸ், ஃபினிஷிங் லைனை நெருங்கும் நேரம் இது என்று வைத்து கொண்டால் மாரத்தான் வீரர் இப்போது ஓடுவதை நிறுத்த ஓடாது மாறாக கடினமாக ஓட வேண்டிய நேரம். அது போல தான் நம்முடைய நிலைமையும், மேலும் கடின உழைப்பின் அனைத்துப் பலன்களையும் இப்போது பெறுகிறோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் எனவும் கூறினார்.

உங்கள் ரத்த அழுத்தம் மிகவும் குறைவாக உள்ளதா..? பயனுள்ள சில வீட்டுக்குறிப்புகள்..!

இதற்கிடையே கொரோனா தொற்று பற்றிய வாராந்திர அறிக்கையில், கடந்த வாரத்தில் இறப்புகள் 22% குறைந்து, உலகளவில் 11,000-க்கும் அதிகமாக பதிவாகியுள்ளதாக ஐ.நா சுகாதார நிறுவனம் கூறி இருக்கிறது. மேலும் புதிதாக 31 லட்சம் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய வாரத்தை விட 28% குறைவு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் பெரும்பாலான பகுதிகளில் மொத்தமாக தொற்று பாதிப்புகள் குறைந்துள்ளதை வாராந்திர அறிக்கை உறுதிப்படுத்தி உள்ளது.

கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம்!

எனினும் பல நாடுகளில் ரிலாக்ஸாக செய்யப்படும் கோவிட் டெஸ்ட் மற்றும் கண்காணிப்பு என்பது பல பாதிப்புகள் கவனிக்கப்படாமல் போவதற்கு வழிவகுப்பதாகவும் WHO எச்சரித்து உள்ளது. வரவிருக்கும் குளிர்காலத்தில் வைரஸ் உருமாற்றமடைந்து தீவிரமாக பரவும் வாய்ப்புகள் இருக்கிறது. தற்போது பாதிப்புகள் குறைந்து வரும் இந்த நிலையை நீடித்து மேலும் பாதிப்புகளை குறைப்பதில் கவனம் செலுத்தாவிட்டால் தொற்று பாதிப்புகள் மற்றும் உயிரிழப்பு மீண்டும் அதிகரிக்க கூடும்.

9 - 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு HPV தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் என்ன..?

எனவே உலக நாடுகள் மிகவும் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் செயலாற்ற வேண்டிய நேரம் இது என்றும் கூறி இருக்கிறார் டெட்ரோஸ் அதானோம். இதற்கிடையே WHO-ன் டெக்னிக்கல் லீடான மரியா வான் கெர்கோவ் கூறுகையில், எதிர்காலத்தில் கோவிட்-டின் அடுத்தடுத்த அலைகள் உருவாக்கலாம் என்றாலும் அதிகஇறப்புகளை ஏற்படுத்தாது என்று நம்புவதாக கூறி இருக்கிறார்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Corona death, Corona spread, WHO

அடுத்த செய்தி