முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / எதிர்காலத்தில் தொற்றுகளை ஏற்படுத்தக்கூடிய நோய்க்கிருமிகளின் பட்டியலை தயார் செய்தது WHO

எதிர்காலத்தில் தொற்றுகளை ஏற்படுத்தக்கூடிய நோய்க்கிருமிகளின் பட்டியலை தயார் செய்தது WHO

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

நோய் கிருமிகளின் பட்டியலில் கோவிட்-19, கிரிமியன்-காங் ரத்தக்கசிவு காய்ச்சல், எபோலா வைரஸ் டிசிஸ் மற்றும் மார்பர்க் வைரஸ் டிசிஸ், லாசா காய்ச்சல், மெர்ஸ், சார்ஸ், நிபா மற்றும் ஹெனிபவைரல் டிசிஸ், ஜிகா காய்ச்சல் மற்றும் டிசிஸ் X ஆகியவை அடங்கும்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

மனித குலத்திற்கு அழிவை ஏற்படுத்தும் புதிய வைரஸ்கள் மற்றும் நோய் கிருமிகளை உலகம் ஏற்கனவே எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென வெடித்த கோவிட்-19 வைரஸின் பாதிப்புக்களும், தாக்கங்களும் சுமார் 3 ஆண்டுகளாகியும் இன்னும் முழுவதுமாக மறையவில்லை.

கொரோனாவின் இன்னல்கள் இன்னும் தீராத நிலையில், முன்னரே அடையாளம் காணப்பட்டுள்ள X என்ற ஒரு நோய் கிருமி பற்றி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறியப்படாத நோய் கிருமி சர்வதேச அளவில் கடுமையான தொற்றை ஏற்படுத்தும் திறன் கொண்டவை என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. தனது சமீபத்திய அறிக்கையில் WHO அமைப்பானது உலகம் முழுவதும் தொற்று நோய்கள் மற்றும் எதிர்பாரா அவசர நிலையை ஏற்படுத்தும் திறன்களை கொண்ட முன்னுரிமை நோய்க்கிருமிகளின் பட்டியலை விரைவில் புதுப்பிக்க போவதாக கூறி இருக்கிறது.

ஆபத்தை கருத்தில் கொண்டு நோய் X இந்த பட்டியலில் ஒரு பகுதியாக இருக்கும். பட்டியலிடப்படும் நோய்க்கிருமிகள் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்படும். திருத்தப்பட்ட பட்டியல் வரும் 2023-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான செயல்முறையை விரைவில் தொடங்க உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து இருக்கிறது. WHO-வின் கூற்றுப்படி உலகளாவிய முதலீடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D), குறிப்பாக தடுப்பூசிகள், டெஸ்டிங்ஸ் மற்றும் ட்ரீட்மென்ட்ஸ் ஆகியவற்றில் நேரடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் முறையாக நோய்க்கிருமிகளின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டது.

Read Moe : இந்தியாவில் மனித உயிரிழப்புக்கு 2வது முக்கிய காரணம் பாக்டீரியா தொற்று : 2019-ல் 6.8 லட்சம் பேர் இறப்பு..!

 இதனை தொடர்ந்து அடுத்த வருடம் இதே போன்றதொரு முயற்சி எடுக்கப்பட்டது. தற்போதைய நோய் கிருமிகளின் பட்டியலில் கோவிட்-19, கிரிமியன்-காங் ரத்தக்கசிவு காய்ச்சல், எபோலா வைரஸ் டிசிஸ் மற்றும் மார்பர்க் வைரஸ் டிசிஸ், லாசா காய்ச்சல், மெர்ஸ், சார்ஸ், நிபா மற்றும் ஹெனிபவைரல் டிசிஸ், ஜிகா காய்ச்சல் மற்றும் டிசிஸ் X ஆகியவை அடங்கும்.

தீவிரமான சர்வதேச தொற்றுநோயாக மாற கூடும் என எதிர்பார்க்கப்படும் அறியப்படாத நோய்க்கிருமியை குறிக்க, டிசிஸ் X பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், முன்னுரிமை நோய்க்கிருமிகளின் பட்டியலை புதுப்பிப்பதற்கான நடைமுறை சமீபத்தில் தொடங்கியது. இதன் ஒரு கட்டமாக தற்போது வரை சுமார் 300-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் தோராயமாக இரண்டு டஜன் வைரஸ் குடும்பங்கள் மற்றும் பாக்டீரியாக்களின் ஸ்ட்ரெயின்ஸ்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் "Disease X" பற்றிய டேட்டாக்களையும் விஞ்ஞானிகள் மதிப்பாய்வு செய்து வருகின்றனர்.

இதற்கிடையே WHO-ன் ஹெல்த் எமர்ஜென்சிஸ் திட்டத்தின் நிர்வாக இயக்குனரான மைக்கேல் ரியான் பேசுகையில், தொற்றுகளுக்கு எதிரான துரித பதிலுக்கு முக்கிய நோய்க்கிருமிகள் மற்றும் வைரஸ் குடும்பங்கள் ஆய்வுக்கு உட்படுத்தபட வேண்டும். பெரும் ஆபத்துகளை ஏற்படுத்தும் முதன்மையான நோய்க்கிருமிகள் மற்றும் வைரஸ் குடும்பங்களை ஆராய்ச்சி செய்வது இக்கட்டான நேரத்தில் விரைவாக தடுப்பூசிகளை உருவாக்க உதவும் என்று கூறினார். கோவிட்-19 தொற்றுக்கு முன்னர் குறிப்பிடத்தக்க R&D முதலீடுகள் இல்லாமல், பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகளை விரைவாகவும் சாதனை நேரத்திலும் உருவாக்கியிருக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

top videos

    WHO தலைமை விஞ்ஞானியான டாக்டர் சௌமியா சுவாமிநாதன் பேசுகையில் அடுத்த அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் என்ன முயற்சிகளை செய்ய வேண்டும் என்பதற்கான வழிகாட்டியாக இப்போது முன்னுரிமை நோய்களின் பட்டியலை அறிவியல் மற்றும் மருத்துவ நிபுணர்களின் சமூகம் பயன்படுத்துகிறது என்று குறிப்பிட்டார். துறையில் உள்ள வல்லுநர்களுடன் இணைந்து உருவாக்கப்படும் இந்த பட்டியல் எதிர்காலத்தில் தொற்றுகளால் ஏற்படும் நெருக்கடி நிலைமைகளை சமாளிக்க அல்லது விரைந்து நடவடிக்கை எடுக்க உதவும் என குறிப்பிட்டார்.

    First published:

    Tags: CoronaVirus, Virus, WHO