இப்போதும் கூட பல நோயாளிகள் ரத்தம் கிடைக்காமல் உயிர் இழக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. ரத்த வங்கிகளில் போதுமான அளவு ரத்தம் கிடைக்காததற்கு முக்கிய காரணம் ரத்த தானம் செய்வதில் காணப்படும் தயக்கம் மற்றும் பயம் தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. சரியான தகவல் அல்லது வழிகாட்டுதல் இல்லாததால் பலர் ரத்த தானம் செய்ய தயக்கம் காட்டுகிறார்கள். அதே போல ரத்த தானம் தொடர்பான பல கட்டுக்கதைகளும் பலரின் பயத்திற்கு காரணமாக இருக்கின்றன.
ரத்த தானம் மூலம் ரத்தம் தேவைப்படும் ஒருவரின் உயிரை எவ்வாறு காப்பாற்ற முடியும் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இன்றை விட சிறந்த நாள் இருக்க முடியுமா.!
ரத்த தானம் செய்ய தகுதி..
* 18 முதல் 65 வயது வரை ஆரோக்கியமாக உள்ள ஒருவர்
* குறைந்தபட்சம் 50 கிலோ அல்லது அதற்கு மேற்பட்ட எடை கொண்டவர்கள் ரத்த தானம் செய்யலாம். சில நாடுகளில் ரத்த தானம் செய்பவர்கள் குறைந்தபட்சம் 45 கிலோ எடையுடன் இருக்க வேண்டும்.
* ரத்த தானம் செய்பவர்களுக்கு எச்ஐவி, ஹெபடைடிஸ் பி அல்லது சி போன்ற நோய்கள் இருக்கக்கூடாது.
* சளி, காய்ச்சல், தொண்டை வலி, சளி, வயிற்றுப் புழுக்கள் அல்லது வேறு ஏதேனும் தொற்று இருந்தால் அந்த நேரத்தில் ஒருவர் ரத்த தானம் செய்ய கூடாது.
Read More : உங்களுக்கு இரத்த அழுத்தம் சார்ந்த நோய் பாதிப்பு உள்ளதா..? அப்போ அவசியம் இதை படிங்க..
* ரத்த தானம் செய்ய குறைந்தபட்ச ஹீமோகுளோபின் அளவை பூர்த்தி செய்வது அவசியம். ரத்தம் கொடுக்க விரும்புவோருக்கு டொனேஷன் சென்டரில் டெஸ்ட்கள் செய்யப்படுகின்றன.
ரத்தம் வழங்க நீங்கள் விருப்பினால் செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை..
* மேலே ஏற்கனவே குறிப்பிட்டபடி ரத்த தானம் செய்ய, நீங்கள் 18 முதல் 65 வயதிற்குள் இருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 45 - 50 கிலோ எடையுடன் இருக்க வேண்டும். அபப்டி இல்லாத பட்சத்தில் நீங்கள் ரத்த தானம் செய்தால் பலவீனமாகவும் மயக்கமாகவும் உணரலாம்.
* ரத்த தானம் செய்வதற்கான இரண்டாவது மற்றும் மிக முக்கியமான நிபந்தனை என்னவென்றால், ஒருவர் ரத்த கொடுப்பதற்கு 2 மணிநேரம் முன் வரை சிகரெட் பிடித்திருக்க கூடாது மற்றும் சுமார் 24 மணி நேரத்திற்கு முன்பு வரை மது அருந்தி இருக்க கூடாது. புகை அல்லது மதுப்பழக்கம் அறவே இல்லாதவர்கள் ரத்த தானம் செய்வதற்கு சிறந்த நபர்கள் ஆவர்.
* ரத்த தானம் செய்வதற்கு முன் ஒருவர் பசியோடு இருக்க கூடாது. ரத்த தானம் செய்யும் முன் வெறும் வயிற்றில் இல்லாமல் ஏதாவது சாப்பிடுவது அவசியம். மேலும் இரவு 8 மணி நேரம் வரை தூங்கி இருந்தால் நல்லது.
* ரத்த தானம் செய்வதற்கு முன் ஒரு நபரின் ரத்த அழுத்தம் அளவிடப்படும் அதே நேரத்தில் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினும் சோதிக்கப்படுகிறது. ரத்த தானம் செய்பவர்களின் ஹீமோகுளோபின் எண்ணிக்கை 12.5g/dL வரை இருக்க வேண்டும்.
* சிலருக்குத் தங்கள் ரத்தத்தையே பார்ப்பதில் பயம் இருக்கும். எனவே ரத்த தானம் செய்யும் போது பயம் மற்றும் பதற்றம் இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும். பிளட் பேக்-ல் உள்ள ரத்தத்தை கண்டு பயப்பட கூடாது.
* ரத்த தானம் செய்த பிறகு ஒரு நபர் சுமார் 10 நிமிடங்கள் நன்றாக வசதியாக படுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவர் பரிசோதித்த பின்னரே படுக்கையில் இருந்து எழ வேண்டும்.ரத்த தானத்திற்கு பிறகு ஃப்ரெஷ் ஜூஸ் போன்ற ஆரோக்கிய பானங்களை குடிக்க வேண்டும்.
* ரத்த தானம் செய்த பிறகு ஃப்ரெஷ் ஜூஸ் மட்டுமின்றி லேசான உணவை சாப்பிடவும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். ரத்த தானம் செய்த அன்று உடற்பயிற்சிகள் செய்வதை தவிர்க்கவும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.