ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

யாரெல்லாம் விந்தணு தானம் செய்யலாம்..? மருத்துவ ரீதியான தகுதிகள் என்ன..? முழுமையான தகவல்..!

யாரெல்லாம் விந்தணு தானம் செய்யலாம்..? மருத்துவ ரீதியான தகுதிகள் என்ன..? முழுமையான தகவல்..!

விந்தணு தானம்

விந்தணு தானம்

விந்தணு தானம் செய்வதற்கு வயது கட்டுப்பாடு இருக்கிறது. இதற்காக விந்தணு வங்கிகள் இயங்குகின்றன. பெரும்பாலான வங்கிகள் 18 வயது முதல் 39 வயது வரை உள்ள ஆண்களிடமிருந்து விந்தணுவை தானமாக பெறும்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விந்தணு தானம் செய்வது தற்பொழுது அதிகரித்து வரும் நிலையில், யாரெல்லாம் விந்தணு தானம் செய்யலாம், அதற்கான மருத்துவத் தகுதிகள் என்ன, கட்டுப்பாடுகள் ஏதேனும் இருக்கிறதா என்பது பற்றி பலரும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். அதை பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

ஆரோக்கியமாக இருக்கும் ஒரு ஆண், இயற்கையாக கருத்தரிக்க முடியாத ஒரு தம்பதிக்கு அல்லது ஒரு தனி நபருக்கு / மருத்துவமனைக்கு, தனது விந்தணுவைப் பயன்படுத்தி குழந்தை பெற்றுக் கொள்வதற்காக, விந்தணுவை தானம் செய்யலாம். கருமுட்டை தானத்தைப் போல இதற்கு அதிக தடைகள் மற்றும் அதிக கட்டுப்பாடுகள் கிடையாது. விந்தணு தானம் செய்பவர் அதை பெறுபவர்களுக்கு தெரிந்த நபராகவும் இருக்கலாம் அல்லது அடையாளத்தை மறைத்துக்கொண்டும் விந்தணு தானம் செய்யலாம். ஆனால் எல்லோருமே விந்தணு தானம் செய்ய முடியாது.

விந்தணு தானம் செய்ய விரும்புபவர்கள் முழு மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டு அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். விந்து தானம் செய்ய விரும்புபவர்கள் செய்துக்கொள்ள வேண்டிய மருத்துவ பரிசோதனை பற்றிய விவரங்கள் இங்கே.

வயது வரம்பு:

விந்தணு தானம் செய்வதற்கு வயது கட்டுப்பாடு இருக்கிறது. இதற்காக விந்தணு வங்கிகள் இயங்குகின்றன. பெரும்பாலான வங்கிகள் 18 வயது முதல் 39 வயது வரை உள்ள ஆண்களிடமிருந்து விந்தணுவை தானமாக பெறும். ஒரு சில வங்கிகள் அதிகபட்ச வயது வரம்பை 34 என்று நிர்ணயித்துள்ளது. எனவே, சராசரியாக ஒரு ஆண் 18 வயதிலிருந்து 35 வயது வரை விந்தணுவை தானமாக கொடுக்கலாம்.

உளவியல் ரீதியான மதிப்பீடு:

விந்தணு தானம் செய்யப் போகிறோம் அதில் பெரிதாக என்ன இருக்கிறது என்று பொதுவான கண்ணோட்டத்தில் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு விந்தணுவை தானம் செய்ய ஒரு நபர் முன் வரும் பொழுது அவர்கள் உளவியல் ரீதியாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் பலவிதமான பாதிக்கப்படலாம். ஒரு நபரின் விந்தணு பயன்படுத்தி ஒரு குழந்தை உருவாகிறது என்னும் பொழுது அந்த குழந்தைக்கும் அந்த விந்தணு தானம் செய்த நபருக்கும் உறவு இருப்பதை மறுக்க முடியாது. ஆனால் அதை தானம் செய்தவரால் கோர முடியாது.

Also Read : 30 வயதை நெருங்கிட்டீங்களா..? உங்கள் உடலில் நடக்கப்போகும் இந்த மாற்றங்களை தெரிஞ்சுக்கோங்க..!

எனவே இந்த வகையில் ஒரு நபர் விந்தணுவை தானம் செய்வதற்கு எந்த அளவுக்கு மன ரீதியாக, உளவியல் ரீதியாக தயாராக இருக்கிறார் என்பதை உளவியல் மருத்துவர்கள் ஆய்வு செய்வார்கள். அதுமட்டுமில்லாமல் தானம் செய்பவர் அதை பெறுபவருக்கு தெரிந்தவராக இருந்தால் அது பின்னாளில் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே இதை சார்ந்த பலவித கேள்விகள் கேட்டு தானம் செய்வோர் மன உறுதியுடன் இருக்கிறார் என்பதை மருத்துவர்கள் மதிப்பீடு செய்து, பிறகு தானம் கொடுப்பதற்கு அனுமதிப்பார்கள்.

உடல் ஆரோக்கியம் மற்றும் நோய் பாதிப்புகள்

பொதுவாக ஒரு தம்பதிக்கு குழந்தை இல்லாத பட்சத்தில், கருமுட்டையோ அல்லது விந்தணுவோ, தானம் கொடுப்பவர்கள் மிக மிக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது அவசியம். எனவே தானம் செய்பவரின் முழு உடல் பரிசோதனை செய்யப்படும் மற்றும் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நோய், பரம்பரையாக உள்ள பாதிப்புகள் ஏதேனும் என்று எல்லாமே கேட்கப்படும். அதுமட்டுமில்லாமல் தானம் செய்பவரின் மெடிக்கல் மிஸ்ட்ரியும் மருத்துவரால் ஆய்வு செய்யப்படும். விபத்து, முன்பு நோய்வாய்ப்பட்டிருந்து, நோயில் இருந்து மீண்டது, நாட்பட்ட மருந்துகள் எடுத்துக் கொண்டது என்று பலவிதமான ஆய்வுகள் செய்யப்படும்.

Also Read : 30 வயதிற்கு பின் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடும் தம்பதிகளுக்கு நிபுணர்களின் ஆலோசனை..!

மேலும், பரிசோதனை செய்யப்பட்டு அவருக்கு எந்த விதமான நோய் தொற்று, உடல் நல பாதிப்பு, ஹார்மோன் குறைபாடு என்று எதுவும் இல்லாமல் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்பதை உறுதி செய்த பின்புதான் அவர் விந்து தானம் செய்வதற்கு தேர்வு செய்யப்படுவார்

சமீபத்தில், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விந்தணுவின் தரம் மற்றும் அதன் டிஎன்ஏ ஆகிய இரண்டுமே பாதிக்கப்பட்டு உள்ளது என்பதை பாட்னாவில் இருக்கும் AIIMS மருத்துவமனையில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே கோவிட் தொற்று பாதிக்கப்பட்ட ஆண்கள் விந்தணு தானம் செய்ய முன்வந்தால் அவர்களுடைய விந்தணுவை பரிசோதனை செய்து அந்த தானம் கொடுப்பதற்கு தகுதியானதாக இருக்கிறதா என்று உறுதி செய்ய வேண்டும் என்று எய்ம்ஸ் வலியுறுத்தியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல், தானம் செய்பவரின் விந்தணுவின் தரம் ஆரோக்கியமாக மாறும் வரை தானம் செய்வதை தடுக்க வேண்டும் என்பதும் கூறியுள்ளனர்.

விந்தணுவின் தரம்

அதிகாரப்பூர்வமாக ஒரு நபர் விந்து தானம் செய்பவராக மாற வேண்டும் என்றால், எல்லா பரிசோதனைகளிலும் தேர்வு செய்யப்பட்டு, மருத்துவரால் அவர் தகுதியானவர் என்று கூறப்பட்டாலும், விந்தணுவின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்படும். அதில் விந்தணுக்களின் எண்ணிக்கை, அது கரு உண்டாக்கும் அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறதா மற்றும் தரமாக இருக்கிறதா, அதன் வடிவம், அமைப்பு என பல விஷயங்களின் அடிப்படையில் அவை பரிசோதனை செய்யப்படும். இந்த தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்தால் விந்தணு தரமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் உறுதி அளித்த பின்பு தான் தானம் கொடுப்பவராக மாற முடியும்.

இதைத் தவிர்த்து, ஒரு நபரின் ரத்த சாம்பிள், மரபணு சோதனைகளும் நடைபெறும். மரபணு ரீதியாக ஏதேனும் குறைபாடு இருந்தால், அவர் விந்தணு தானம் செய்ய முடியாது.

உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், பாலியல் ரீதியான ஆரோக்கியம் மற்றும் பாலியல் உறவு பற்றிய விவரங்களையும் பகிர வேண்டும். க்ரானிக் நோய் அல்லது பால்வினை நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளவர்கள் தகுதி இழக்கிறார்கள். மேலும், தனிப்பட்ட பழக்க வழக்கங்கள், கல்வி, விருப்பங்கள் ஆகிய விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.

First published:

Tags: Pregnan, Sperm