Home /News /lifestyle /

சருமத்தில் வெண் புள்ளிகள் தோன்றுவதற்கு இந்த 3 பிரச்சனைகள்தான் காரணமா? 

சருமத்தில் வெண் புள்ளிகள் தோன்றுவதற்கு இந்த 3 பிரச்சனைகள்தான் காரணமா? 

சருமத்தில் வெண் புள்ளிகள்

சருமத்தில் வெண் புள்ளிகள்

சருமத்தில் வெண் புள்ளிகள் காணப்படுகிறது எனில், அது விட்டிலிகோ, பிட்ரியாசிஸ் ஆல்பா (பிஏ) மற்றும் பாலிமார்பிக் லைட் எப்ஷன் (பிஎல்இ) ஆகியவையாக இருக்கலாம்.

இந்திய மக்களிடம் அதிகம் கவலையளிக்க கூடிய விஷயமாக தோல் பிரச்சனைகள் உள்ளன. சருமத்தில் வெண் புள்ளிகள் காணப்படுகிறது எனில், அது விட்டிலிகோ, பிட்ரியாசிஸ் ஆல்பா (பிஏ) மற்றும் பாலிமார்பிக் லைட் எப்ஷன் (பிஎல்இ) ஆகியவையாக இருக்கலாம். எனவே கோடை காலத்தில் ஏற்படக்கூடிய சரும பிரச்சனைகளை சமாளிப்பது குறித்து தோல் மருத்துவர் டாக்டர் விதுஷி ஜெயின் கொடுத்துள்ள விளக்கத்தை பார்க்கலாம்.

1. பிட்ரியாசிஸ் ஆல்பா:

பொதுவாக 1 முதல் 3 வயதுக் குழந்தைகளிடையே பிட்ரியாசிஸ் ஆல்பா என்ற தோல் நோய் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த பிரச்சனை சருமத்தில் சிவத்தல், அரிப்பு மற்றும் வெள்ளை திட்டுக்களை உருவாக்க கூடியது. சில சமயங்களில் சிவப்பு, இளஞ்சிவப்பு அல்லது வெள்ளை நிறத்துடன் வட்ட ம், ஓவல் அல்லது ஒழுங்கற்ற வடிவத்தில் இந்த தோல் பிரச்சனை பரவலாம். பொதுவாக, முகம் மற்றும் கைகளில், ஒரே நேரத்தில் பல திட்டுகள் காணப்படும். சில மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை, என்று இந்த காலம் மாறுபடும்.

அடர் நிறத்தில் சருமம் கொண்டவர்களுக்கு இது வெளிப்படையாக காண்பிக்கும். இந்த பாதிப்பால் சிறு குழந்தைகள் பலரும் பாதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த பிரச்சனை விட்டிலிகோ எனப்படும் வெண்குஷ்டத்தை போல் இல்லாமல், நிறமி இழப்பால் ஏற்படக்கூடிய வெள்ளை நிறம் காலப்போக்கில் குணமடையக்கூடியது.சிகிச்சை முறைகள்: பிட்ரியாசிஸ் ஆல்பாவை குணப்படுத்த சில சமயங்களில் மருந்துகள் தேவையில்லை, ஏனெனில் இது தானாகவே சரியாகக்கூடிய சரும பிரச்சனையாகும். இந்த பிரச்சனையை சமாளிக்க சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க மாய்ஸ்சரைசர் கிரீம் அல்லது லோஷன்களை பயன்படுத்தலாம். வீக்கம் மற்றும் அசௌகரியத்தைக் குறைக்க, மேற்பூச்சாக குறைந்த அளவிலான கார்டிகோஸ்டீராய்டு பயன்படுத்தலாம்.

சொரியாசிஸ் தொற்றக்கூடியதா..? ஆயுர்வேத நிபுணர் சொல்லும் விளக்கம்...

2. பாலிமார்பிக் லைட் எப்ஷன்:

பாலிமார்பிக் லைட் வெடிப்பு என்பது சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படக்கூடிய ஒவ்வாமை ஆகும். இது உடலின் முன்கைகள் மற்றும் கழுத்து போன்ற அடிக்கடி ஒளிப்படும் பகுதிகளை பாதிக்கும். இந்த பிரச்சனை தீவிரம் அடையும் போது, ​​தோல்களில் சிறிய வெண்புள்ளிகள் தோன்று,ம். இந்த சரும பிரச்சனையால் ஏற்படும் திட்டுகள் தனித்துவமான விளிம்புகள் இல்லாதவை மற்றும் மிகவும் வெளிர் பழுப்பு நிறத்தில் காணப்படும்.

சிகிச்சை முறை: இந்த சரும பிரச்சனை ஒவ்வொரு கோடைகாலத்திலும் மீண்டும், ஏற்படக்கூடியது. இதனால் சருமம் சிவந்து போதலை தடுக்க, ஸ்டீராய்டு கிரீம்களை பயன்படுத்தலாம்.3. விட்டிலிகோ (அ) வெண்குஷ்டம்:

விட்டிலிகோ என்ற வெண்குஷ்டம் தோல், வாய், பிறப்புறுப்புகள் மற்றும் வெள்ளை முடிகள் போன்ற பிரச்சனைகளை உருவாக்க கூடியது. தோலில் சிறிய மற்றும் பெரிய திட்டுகள், நன்கு வரையறுக்கப்பட்ட, நிறமிழந்த தோல் காயங்களை ஏற்படுத்தும். குழந்தைகளிடையே மிகவும் பொதுவான தொடர்பு ஹாஷிமோட்டோவின் தைராய்டிடிஸ் ஆகும்.

இது 0.1 சதவிகிதம் முதல் 2 சதவிகிதம் வரையில் உடலின் அனைத்து பகுதிகளிலும் ஏற்படக்கூடியதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கோடை காலத்திற்கு ஏற்ற பிரா வகைகள் என்ன..? எவ்வாறு தேர்ந்தெடுப்பது..? 

விட்டிலிகோவால் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நோய்க்குறியின் சரியான காரணங்கள் தெரியவில்லை என்றாலும், மரபணு, நோயெதிர்ப்பு மற்றும் நரம்பியல் காரணிகள் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இது பொதுவாக சூரியனில் வெளிப்படும் தோலின் பகுதிகளை மட்டுமே பாதிக்கிறது.

சிகிச்சை முறைகள்: விட்டிலிகோ சிகிச்சைக்கு முன்பு இளம் நோயாளிகள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு நோய் குறித்து விளக்குவது அவசியம். தைராய்டு பரிசோதனை, தூண்டுதல் காரணிகளைத் தவிர்ப்பது, மேற்பூச்சு மருந்துகள் மற்றும் சரியான வழிமுறைகளை பின்பற்ற பயிற்சியளித்தல் ஆகியவை முக்கியமாகும். விட்டிலிகோ நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடலில் தோன்றும் வெண் புள்ளிகள் 10 முதல் 20 சதவீதம் வரை தானாகவே குணமாக வாய்ப்புள்ளது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Skincare, Vitiligo

அடுத்த செய்தி