நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் வெள்ளை பூஞ்சை தாக்குமா? கொரோனா நோயாளிகள் இதிலிருந்து தப்பிக்க என்ன வழி ? மருத்துவர்கள் விளக்கம்..!

வெள்ளை பூஞ்சை

இது அசுத்தம் நிறைந்த தண்ணீர், சுற்றுச்சூழலிலிருந்து பரவும் எனக் கூறுகிறார். எனவே எப்போதும் உங்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்துக்கொள்வது அவசியம்.

 • Share this:
  கொரோனா தொற்றை அடுத்து கருப்பு பூஞ்சை மக்களை வேகமாக தாக்கிவரும் நிலையில் தற்போது வெள்ளை பூஞ்சை தொற்றும் கொரோனா நோயாளிகளை தாக்கத் தொடங்கியுள்ளது. இது கருப்பு பூஞ்சையைக் காட்டிலும் அதிக ஆபத்தைக் கொண்டது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த வெள்ளை பூஞ்சை பாட்னா , பீகார் மாநிலத்தில் பரவத் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

  வெள்ளை பூஞ்சை தாக்க என்ன காரணம்..?

  நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் வெள்ளை பூஞ்சை தொற்று தாக்கும் என மருத்துவர் அருணேஷ் குமார் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்திற்கு பேட்டி அளித்துள்ளார். இவர் பாராஸ் மருத்துவமனையில் மூத்த ஆலோசகர் மற்றும் தலை சுவாச மருத்துவம் / நுரையீரல் மருத்துவராக இருக்கிறார். இது அசுத்தம் நிறைந்த தண்ணீர், சுற்றுச்சூழலிலிருந்து பரவும் எனக் கூறுகிறார். எனவே எப்போதும் உங்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்துக்கொள்வது அவசியம் என கூறுகிறார். அதோடு வீட்டை சுற்றிலும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்.  கொரோனா பாதித்தவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் வீட்டை சுற்றிலும் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். அடிக்கடி வீட்டை கிருமிநாசினி கொண்டு துடையுங்கள். நீண்ட நாட்களுக்கு நீரை தேக்கி வைப்பதை தவிருங்கள். இதனால் அதன் மூலம் வெள்ளை பூஞ்சை உருவாகி தாக்கக் கூடும்.

  அறிகுறி மற்றும் பாதிப்புகள் எப்படி இருக்கும்..?

  கொரோனா பாதித்தவர்களில் சிலருக்கு அறிகுறியே இல்லாமல் இந்த வெள்ளைப் பூஞ்சை தாக்குவதாகவும், சிடி ஸ்கேன், எக்ஸரே எடுத்தால் மட்டுமே அதை அடையாளம் காண முடிகிறது எனக் கூறுகிறார். இந்த வெள்ளைப் பூஞ்சையானது நுரையீரல் மட்டுமன்றி உடலின் மற்ற உறுப்புகளான வயிறு, சிறுநீரகம், மூளை, அந்தரங்கப் பகுதி, வாய் , தோல் , நகம் என தாக்குகிறது.  மருத்துவர் கூற்றுப்படி கொரோனா நோயாளிகள் பலர் வெள்ளைப் பூஞ்சையால்தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதன் அறிகுறிகளும் கொரோனா வைரஸ் அறிகுறிகளைப் போன்றுதான் இருக்கும்.

  சுவாசப்பாதையை சுத்தப்படுத்தி நுரையீரலை பலமாக்கும் சுவாசப்பயிற்சிகள் : வீட்டில் நீங்களே செய்யலாம்..!

  குறிப்பாக நீரிழிவு நோய், புற்றுநோய் என ஏற்கெனவே நோயால் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை உடனடியாக வெள்ளைப் பூஞ்சை தாக்குகிறது. அதேபோல் கொரோனா நோயாளிகளில் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கும் வெள்ளைப்பூஞ்சை தாக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர் கூறியுள்ளார்.

   

   
  Published by:Sivaranjani E
  First published: