டிரெட் மில்லில் ஓடுவது போல்தான் இன்று பலருடைய வாழ்க்கையும் இருக்கிறது. இதற்கு இடையில் உடற்பயிற்சியையும் நமது வாழ்க்கைமுறையில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணமும் பலரிடம் உள்ளது. ஆனால் பலருக்கும் அதை எப்போது செய்வது என்றுதான் புரியவில்லை. உடற்பயிற்சி செய்வதற்கு குறிப்பிட்ட நேரம் இல்லை என்றாலும், ஒவ்வொரு நாளும் சரியான நேரத்தில் செய்தால், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பொதுவாக காலையில் சீக்கிரம் எழுபவர்களுக்கு காலை நேரமே சிறந்தது, ஆனால் மாலையில் ஓய்வாக இருப்பவர்களுக்கு மாலையே சிறந்த நேரம். ஆனால் நம் உடலின் நன்மைகளைப் பற்றி யோசித்தால், வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன. பகலில் எப்போது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதுதான் பெரும்பாலானோரின் முன் உள்ள கேள்வி.
இதற்காக நியூயார்க் விஞ்ஞானிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆய்வு செய்து வருவதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் காலையில் உடற்பயிற்சி செய்வதால், கொழுப்பு அதிகம் எரிந்து, உடல் பருமன் குறைகிறது என்பது தெரியவந்துள்ளது.
ஆய்வில் என்ன நடந்தது..?
2020 ஆம் ஆண்டின் ஆய்வின்படி, டைப்-2 நீரிழிவு நோயாளிகளில், ஒரு நாளைக்கு மூன்று முறை உடற்பயிற்சி செய்வது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. அதே நேரத்தில் அதே நபர்கள் மதியம் மற்றும் மாலையில் உடற்பயிற்சி செய்யும் போது, அவர்களின் இரத்தத்தில் சர்க்கரை அளவு இன்னும் குறைந்தது.
இந்த உணவுகளை சாப்பிட்ட பிறகு தவறி கூட தண்ணீர் குடிச்சிடாதீங்க... அதனால் பல பிரச்சனைகளை சந்திப்பீர்கள்..
விஞ்ஞானிகளின் இந்த ஆய்வு மனித குழுக்கள் மற்றும் எலிகளை அடிப்படையாகக் கொண்டது. மினசோட்டா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் லிசா சோவ் கூறுகையில், ஆய்வு இன்னும் நடந்து வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், காலையில் உடற்பயிற்சி செய்வதுதான் நல்லது என்கிறார். செய்யுங்கள்.
செல்கள் பகலில் இருந்து இரவு வரை வித்தியாசமாக வேலை செய்கின்றன. பேராசிரியர் லிசா சோவின் கூற்றுப்படி, உடலின் செல்கள் இரவும் பகலும் வித்தியாசமாக வேலை செய்கின்றன. உடலில் உள்ள வளர்சிதை மாற்றம் ஒவ்வொரு செயலிலும் வேறுபட்டவையாக உள்ளன. இது எப்படி சாத்தியம் என்னும் ஆய்வையும் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இறுதியாக இந்த ஆய்வின் கூற்றுப்படி காலை வேலையில் உடற்பயிற்சி செய்வது உங்கள் கலோரிகளை எரிக்க உதவும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.