முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / 2-DG : கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க DRDO-ன் 2-DG மருந்து இந்தியாவில் எப்போது கிடைக்கும்?

2-DG : கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க DRDO-ன் 2-DG மருந்து இந்தியாவில் எப்போது கிடைக்கும்?

DRDO-ன் 2-DG மருந்து

DRDO-ன் 2-DG மருந்து

ரெட்டீஸ் லேபரேட்டரீஸ் (DRL)" இணைந்து உருவாக்கிய கொரோனா எதிர்ப்பு மருந்து "2-டியோக்ஸி-டி-குளுக்கோஸாகும். 2 டிஜி என்ற பெயரில் போலி அல்லது சட்டவிரோத தயாரிப்புகளை விற்கும் முகவர்கள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

டெல்லியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) ஆய்வகமான "அணு மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் நிறுவனம் (INMAS) மற்றும் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட மருந்து நிறுவனமான டாக்டர் ரெட்டீஸ் லேபரேட்டரீஸ் (DRL)" இணைந்து உருவாக்கிய கொரோனா எதிர்ப்பு மருந்து "2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-Deoxy-D-glucose)".

இது கொடிய கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மருந்துகளில் ஒன்றாகும். நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நேரத்தில், மருத்துவ சந்தைகளில் இதன் கிடைக்கும் தன்மையை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

மக்களின் பயன்பாட்டிற்கு இந்த மருந்து வந்துவிட்டதா?

கடந்த புதன்கிழமை, டாக்டர் ரெட்டி ஒரு அறிக்கையில் தெரிவித்தாவது, கொரோனா எதிர்ப்பு மருந்தான 2-DG-யின் விநியோகம் வருகிற ஜூன் மாத நடுப்பகுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தது. மேலும் ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த மருந்து இன்னும் சந்தையில் அறிமுகப்படுத்தப்படவில்லை என்றும், 2 டிஜி என்ற பெயரில் போலி அல்லது சட்டவிரோத தயாரிப்புகளை விற்கும் முகவர்கள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

2-DG எவ்வாறு செயல்படுகிறது?

அறிக்கையின்படி, கொரோனவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 2-DG மருந்து மகத்தான நன்மையை தரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்கம் கூறியுள்ளது. மேலும் இந்த மருந்து, உடலில் வைரஸ் பாதிக்கப்பட்ட உயிரணுக்களில் குவிந்து வைரஸ் வளர்ச்சியைத் தடுக்கிறது. இதன் காரணமாக, அவை வைரஸ் தொகுப்பு மற்றும் வைரஸின் ஆற்றல் உற்பத்தியை நிறுத்தலாம். வைரஸ் பாதிக்கப்பட்ட உயிரணுக்களில் மட்டுமே குவிந்து இருப்பதால் இந்த மருந்து தனித்துவமானதாக இருக்கிறது.

2-DG : கொரோனாவை கட்டுப்படுத்த பவுடர் வடிவிலான 2-டியோக்ஸி-டி- குளுக்கோஸ் : முழுமையான தகவல்..!

கொரோனா எதிர்ப்பு மருந்து "2-DG"-ன் நன்மைகள்:

மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, 2-DG, ஒரு பொதுவான மூலக்கூறு மற்றும் குளுக்கோஸின் அனலாக் என்பதால், எளிதில் தயாரிக்கப்பட்டு பெரிய அளவில் கிடைக்கச் செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா எதிர்ப்பு மருந்து தூள் வடிவில் ஒரு சச்செட்டில் கிடைக்கும் என்றும், இதனை தண்ணீரில் கரைத்து பின் வாய்வழியாக எடுத்துக்கொள்ளலாம். இதற்கிடையில் மருத்துவ சோதனை முடிவுகளின்படி, இந்த மருந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளை விரைவாக மீட்டெடுக்க உதவுகிறது மற்றும் துணை ஆக்ஸிஜன் சார்புநிலையை குறைக்கிறது என்பதைக் எடுத்துக்காட்டுகிறது.

கொரோனா பாதிக்கப்படாதவர்களுக்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பு வருமா?

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனாவின் முதல் அலை பரவிய சமயத்தில் ஹைதராபாத்தில் உள்ள செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (CCMB), ஐ.என்.எம்.ஏ.எஸ் மற்றும் டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகளுடன் இணைந்து 2டிஜி மருந்தின் மூலக்கூறுகளை சார்ஸ்கோவிட் 2-வுக்கு எதிராக பயன்படுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் 2DG மூலக்கூறு கோவிட் வைரஸ் வளர்ச்சியை தடுத்து திறம்பட செயலாற்றியதை கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: 2-DG, CoronaVirus, DRDO