முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / குழந்தை பெற்றுகொள்ள திட்டமிடுவதற்கு ஏற்ற வயது என்ன? நிபுணரின் பதில் இங்கே!

குழந்தை பெற்றுகொள்ள திட்டமிடுவதற்கு ஏற்ற வயது என்ன? நிபுணரின் பதில் இங்கே!

குழந்தை பெற்று கொள்ள ஏற்ற வயது

குழந்தை பெற்று கொள்ள ஏற்ற வயது

தகுந்த வயதை தாண்டி கருத்தரிக்கும் முயற்ச்சியில் ஈடுபடும் போது கீழ்காணும் கர்ப்பகால சிக்கல்கள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

திருமணமான சில தம்பதிகள் சில சூழல்களை கருத்தில் கொண்டு குழந்தைக்கு பெற்று கொள்ளும் திட்டத்தை சில ஆண்டுகள் தள்ளி வைக்கின்றனர். ஆனால் அவர்கள் ஒரு விஷயத்தை கருத்தில் கொள்வதில்லை. அது என்னவென்றால் கருவுறுதல் விகிதம் இயற்கையாகவே வயதுக்கு ஏற்ப குறைகிறது.

வயது ஏற ஏற கர்ப்ப கால சிக்கல்களின் அபாயம் அதிகரிப்பதோடு, கருவுறுத்தலுக்கான வாய்ப்பும் கேள்விக்குறியாகிறது. திருமணமான பல தம்பதியரின் மனதில் எழும் கேள்வி கர்ப்பத்தைத் திட்டமிட சிறந்த வயது எது? என்பதாக இருக்கிறது. பல நிபுணர்களின் கூற்றுப்படி கர்ப்பத்தை திட்டமிடுவதற்கான சிறந்த வயது 21 - 35 ஆண்டுகள் வரை ஆகும். அதற்காக 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கருத்தரிக்கவே முடியாது என்பது அர்த்தமல்ல.

தற்போதைய காலகட்டத்தில் பல பெண்கள் 35 வயதிற்கு பிறகு குழந்தை பெற்று கொள்ள திட்டமிட தொடங்கி அவர்களில் பெரும்பாலோர் வெற்றிகரமாக கருத்தரிக்கிறார்கள். ஆனால் 35 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் கர்ப்பகால பயணம் அல்லது அனுபவம் என்பது எல்லோருக்கும் எளிதாக அமைவதில்லை. இது பற்றி சில தகவல்களை ஷேர் செய்துள்ள பிரபல ஆயுர்வேத மகப்பேறு மருத்துவர் மற்றும் கருவுறுதல் நிபுணரான டாக்டர் ரேஷ்மா, தம்பதிகளுக்கு வயதாகும்போது இயல்பாகவே கருத்தரிப்புடன் தொடர்புடைய மன அழுத்தம் மற்றும் கவலை அதிகமாகிறது. அவர்கள் கர்ப்பம் தரிப்பதற்கான முயற்சிகளை துவக்கி 2 மாதங்களுக்குள் பாசிட்டிவ் ரிசல்ட் வராவிட்டால் கவலை இன்னும் அதிகமாகும்.

இதன் விளைவாக அவர்கள் திடீரென கருவுறுதல் சிகிச்சையின் செயற்கை முறைகளான ஃபோலிகுலர் சிமுலேஷன்ஸ், இன்ட்ராயுட்டரைன் இன்செமினேஷன் போன்ற வழிகளை தேர்வு செய்கிறார்கள். அதே போல 35 வயதிற்கு பிறகு கருத்தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் மற்றொரு முக்கிய மருத்துவ காரணியாக கருவுறுதல் குறியீடு அதாவது fertility index இருக்கிறது. பெண்களுக்கு வயது ஏறும் போது இயற்கையாகவே ஓவலேஷனின் போது கிடைக்கக்கூடிய ஃபாலிக்கில்ஸ் (follicles) அதாவது நுண்ணறைகளின் எண்ணிக்கை குறைகிறது. இதன் விளைவாக முறையற்ற ஓவலேஷன் ஏற்படுகிறது மற்றும் கரு முட்டையின் தரம் குறைகிறது. இதன் காரணமாக பெண் ஹார்மோன்கள் போதுமான அளவு உற்பத்தி செய்யப்படுவதில்லை, இது கருப்பையின் புறணி மற்றும் ஏற்பு திறனில் மேலும் சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்று விளக்கி உள்ளார் டாக்டர் ரேஷ்மா.

மேலும் தகுந்த வயதை தாண்டி கருத்தரிக்கும் முயற்சியில் ஈடுபடும் போது கீழ்காணும் கர்ப்பகால சிக்கல்கள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. இதில் 3 மாதத்திற்குள் கருச்சிதைவு ஏற்படுவது, கர்ப்பத்தால் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கருவின் எடையில் குறைபாடு, வளர்ச்சியில் குறைபாடு, குரோமோசோமால் ஏற்படும் பிறவி சிக்கல்கள், உரிய நாட்களுக்கு முன்கூட்டியே குழந்தை பிறப்பது, குழந்தை பிறக்கும்போது ஏற்படும் ஆபத்து உள்ளிட்ட பல அபாயங்கள் தாமதமாக கருத்தரிப்பதில் ஏற்பட கூடும்.

Also Read : கர்ப்ப காலத்தில் தைராய்ட் டெஸ்ட் தேவையா? மாத்திரை எடுக்கலாமா.?

இதை போன்ற ஆபத்துகளை குறைக்க அல்லது தவிர்க்கவே தம்பதிகள் தங்கள் இருபதுகளின் பிற்பகுதியிலும் முப்பதுகளின் முற்பகுதியிலும் கர்ப்பத்தை திட்டமிடுவது சிறந்த நேரமாக பரிந்துரைக்கப்படுகிறது. எனினும் கர்ப்பம் தரிக்க திட்டமிடும் முன் உடல் ரீதியாக மற்றும் மன ரீதியாக ஒருவர் தனது ஆரோக்கியத்தை பராமரிப்பது மிகவும் முக்கியம் என்று வலியுறுத்தி இருக்கிறார் ஆயுர்வேத நிபுணரான ரேஷ்மா.

First published:

Tags: Pregnancy, Pregnancy care, Pregnancy Plan