உடற்பயிற்சி செய்வது என்பது ஆண் பெண் என்ற பேதமின்றி அனைவருக்கும் பொதுவான மற்றும் ஆரோக்கியமான ஒரு பழக்கம் தான். ஆனால் உடற்பயிற்சி செய்வதிலும் சில குறிப்பிட்ட வரைமுறைகள் கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அதிலும் பெண்கள் தங்கள் மாதவிடாய் காலங்களில் போது உடற்பயிற்சி செய்பவர்களாக இருந்தால் சில குறிப்பிட்ட விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
நீங்கள் மாதவிடாய் காலங்களிலும் உடற்பயிற்சி செய்ய விரும்பினால் எவ்வளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதும் அந்த நேரங்களில் எப்படி பாதுகாப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்.
ஒவ்வொரு மாதமும் உடல்நிலை ஒவ்வொரு விதமாக இருக்கும்:
மாதவிடாய் காலங்கள் எப்போதும் ஒரே மாதிரி இருப்பது கிடையாது. மாதவிடாய் நீடிக்கும் நாட்களும், அதனால் உங்களுக்கு உடல் அளவிலும் மனதளவிலும் உண்டாகும் மாற்றங்களும் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஆனால் இவற்றைப் பற்றி கவலை கொள்ள தேவையில்லை. இது இயற்கையானதும் மற்றும் ஆரோக்கியமானதும் கூட. ஆனால் மாதவிடாய் காலங்களில் நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது உங்களது உடல் நிலையை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
ஒருவேளை நீங்கள் மிகவும் களைப்பாக உணர்ந்தால் கண்டிப்பாக ஓய்வெடுத்துக் கொள்வது சிறந்த தேர்வாக இருக்கும். உடலில் இருக்கும் சக்தியை விட, அதிக அளவு சக்தியை செலவு செய்து உடற்பயிற்சி செய்யும்போது அதனால் நன்மை விளைவதற்கு பதிலாக, பல கெடுதல்கள் உண்டாகக்கூடும். எனவே இதற்கு பதிலாக மாதவிடாய் நடக்கும் நாட்கள் முழுதும் ஓய்வெடுத்து விட்டு உடல் நிலை சீரானதும் கூட உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.
உடல்நிலை கேட்ப உடற்பயிற்சியில் மாற்றம்:
உங்களது உடல்நிலைக்கு ஏற்ப செய்வதும் உடற்பயிற்சி செய்யும் நேரத்தில் மாற்றம் செய்வதும் அவசியம். சிலருக்கு இவை சரியாக பொருந்திவிடும். ஆனால் சில பெண்களுக்கோ திடீரென உடற்பயிற்சி செய்யும் நேரத்தில் மாற்றம் ஏற்பட்டால் அவர்களுக்கு சிறிய பிரச்சனைகள் உண்டாக்கலாம். எனவே உடற்பயிற்சி செய்யும் போது நமது உடல் எவ்வாறு ஒத்துழைக்கிறது என்பதை அறிந்து அதற்கு ஏற்ப உடற்பயிற்சி செய்வது அவசியம்.
Also Read : Mehndi Remove Tips : கைகளில் வைத்த மெஹந்தியை அழிக்க டிப்ஸ்..!
இதைப் பற்றி பேசிய மிட்டன் காக்காயா என்று ஃபிட்னஸ் கோச் கூறுகையில் “நான் எப்போதும் மாதவிடாய் காலங்களை கணக்கில் வைத்து உடற்பயிற்சி செய்வதை திட்டமிடுவதில்லை. ஏனெனில் ஒவ்வொரு விதமான பெண்களும் ஒவ்வொரு வகையில் மாதவிடாய் காலங்களில் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு பதிலாக உங்களது வாடிக்கையாளர்களிடம் அவர்கள் மாதவிடாய் காலங்களின் போது எந்த விதமான மனநிலையில் உள்ளார்கள் என்பதை பற்றியும் மற்றும் அவர்களது உடல்நிலை எவ்வாறு உள்ளது என்பதையும் அறிந்து அதற்கு ஏற்ப அவர்களுக்கான உடற்பயிற்சி அட்டவணையை அளிக்கிறோம்.
சில நேரங்களில் அவர்களது உடல்நிலை ஒத்துழைக்காமலும், அட்டவணையில் மாற்றம் தேவைப்பட்டாலும் அதற்கு ஏற்ப நாங்கள் அவர்களுக்கு உதவி செய்வோம். ஒருவேளை அவர்களுக்கு ஓய்வு தேவைப்படும் என்றால் அந்த நாளில் ஓய்வெடுப்பது சரியான தீர்வாக இருக்கும். அவர்கள் விருப்பத்திற்கும் உடல் நிலைக்கும் ஏற்ப மாற்றங்களை செய்வது சரியான தீர்வாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Periods pain, Workout