பெண்களை அதிகம் பாதிக்கும் சிறுநீர் கசிவு பிரச்னை..! எப்படி உண்டாகிறது..? சிக்கிச்சை முறைகள் என்ன?

பெண்களை அதிகம் பாதிக்கும் சிறுநீர் கசிவு பிரச்னை..! எப்படி உண்டாகிறது..? சிக்கிச்சை முறைகள் என்ன?

சிறுநீர் கசிவு பிரச்னை

சிறுநீர் கசிவு அதிக எடை தூக்கும் போது, சிரிக்கும் போது, தும்மும் போது, விளையாடும் போது, உடலுறவு கொள்ளும் போது என பல சாதாரண சந்தர்ப்பங்கள் போது ஏற்பட்டு பெண்களை அவதிப்பட வைக்கிறது.

  • Share this:
விவரமறியா குழந்தை பருவத்தில் பலரும் அனுபவிக்கும் சிறுநீர் கசிவு பிரச்சனை என்பது தற்போதைய காலகட்டத்தில் பல பெண்களுக்கு உள்ளது. இது மருத்துவ ரீதியாக சிறுநீர் அடங்காமை ( urinary incontinence) என்று குறிப்பிடப்படுகிறது. இதனால் பல பெண்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், உடல்நலப் பிரச்சனைகளைப் பற்றி மிகவும் மோசமாக புரிந்து கொள்ளப்பட்ட ஒன்றாக சிறுநீர் கசிவு பிரச்சனை உள்ளது.

சிறுநீர் கசிவு என்றால் என்ன.?

சிறுநீர் கசிவு என்பது தூங்கும் போது படுக்கையில் மட்டும் ஏற்படுவது இல்லை. மாறாக அதிக எடை தூக்கும் போது, சிரிக்கும் போது, தும்மும் போது, விளையாடும் போது, உடலுறவு கொள்ளும் போது என பல சாதாரண சந்தர்ப்பங்கள் போது ஏற்பட்டு பெண்களை அவதிப்பட வைக்கிறது. சுருக்கமாக சொன்னால் சிறுநீர் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த இயலாத நிலை சிறுநீர் கசிவு ஆகும். பெண்கள் தங்களுக்குள்ள இந்த பிரச்சனை குறித்து பெற்றோர் அல்லது கணவரிடம் சொல்ல கூச்சப்பட்டு சொல்லாமலே விட்டு விடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். சிறுநீர் கசிவால் எங்கே தங்களிடமிருந்து சிறுநீர் வடை வீசுமோ எனறு மனதளவிலும், உடலளவிலும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.ஏன் ஏற்படுகிறது.?

சிறுநீர் கசிவு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் பெரும்பாலும் pelvic floor muscles எனப்படும், கருப்பை மற்றும் சிறுநீர்ப்பையை ஆதரிக்கும் எனப்படும் தசைகளின் பலவீனம் காரணமாக சிறுநீரை கட்டுப்படுத்த முடியாமல் இது நிகழ்கிறது என்றும் கூறுகின்றனர்.

இதற்கு உடல் பருமன், கடினமான யோனி பிரசவம், கர்ப்பத்திற்கு பிந்தைய காலத்தின் விளைவாக இடுப்பு தரையில் அழுத்தம் அதிகரிப்பதே இதற்கு காரணம். குறிப்பாக பிற நரம்பியல் சிக்கல்களை தவிர, குறுகிய கால கர்ப்ப இடைவெளிகள், இடைவிடாத இருமல் அல்லது நாள்பட்ட மலச்சிக்கலுடன் மீண்டும் மீண்டும் கர்ப்பம் தரிக்கும் போது இந்த சிக்கல் வருவதாக கூறுகின்றனர்.

நிர்வகிக்க தேவையான வாழ்க்கை முறை மாற்றங்கள்:

* யூரோ-மகளிர் மருத்துவ நிபுணருடன் விரிவான துவக்க கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் பல நோயாளிகள் தங்கள் அறிகுறிகளின் உடல்தன்மை பற்றி அறிந்திருப்பதில்லை. பிரச்சனை பற்றி விவாதிப்பது மற்றும் ஏற்பட்டுள்ள சிக்கல் உளவியல் ரீதியானது அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

* 24 மணி நேரத்தில் நீங்கள் எடுத்து கொள்ளும் நீர் உட்பட திரவங்களின் சராசரி பட்டியலை பராமரிப்பது, இது இயல்பானது என்று கருதுவது குறித்த உண்மை பார்வையை வழங்கும். மேலும் இதன்படி திரவ உட்கொள்ளும் அளவு மற்றும் வடிவத்தை மாற்றியமைக்கலாம்.* சிறுநீர்ப்பை பயிற்சி முக்கியமான ஒரு படி. இது என்னவென்றால் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வரும்போது உடனடியாக கழிவறை செல்லாமல் அதை சிறிது நேரம் அடக்கி வைத்து சிறுநீர்ப்பைக்கு பயிற்சி கொடுப்பது. 2-5 நிமிடங்களிலிருந்து தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் வரை படிப்படியாக பயிற்சி நேரத்தை அதிகரிக்கலாம். இந்த நேரத்தில் பாட்டு கேட்பது, டிவி பார்ப்பது உள்ளிட்ட மனதை திசை திருப்பும் வேலைகளில் ஈடுபட வேண்டும்.

* உடல் பருமன் என்பது தூண்டுதல் மற்றும் தீவிர மன அழுத்தம் உள்ளிடவற்றுடன் தொடர்புடையது. எனவே உடல் எடையைக் குறைப்பது சிறுநீர் கசிவிற்கான அறிகுறிகளைக் குறைக்க உதவும்.

* சிறுநீர்ப்பை எரிச்சலை தவிர்க்க காஃபின், சாக்லேட், காரமான உணவுகள், அமில சாறுகள், செயற்கை இனிப்புகள் போன்றவற்றை தவிர்க்கலாம்.

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கிறதா? சிறுநீரக பாதிப்பு இருக்க வாய்ப்பு

pelvic floor muscles தசைகளை வலுப்படுத்த கெகல் என்னும் உடற்பயிற்சியை(Kegel exercises) எந்த நேரத்திலும் செய்யலாம். இதை சிறுநீர்ப்பை காலியாக இருக்கும் போது செய்வது நல்ல பலன் தரும். இந்த உடற்பயிற்சி செய்யும் போது மூச்சைப் பிடிக்க கூடாது. சிறுநீர் அடங்காமைக்கு சிகிச்சையளிப்பதற்கும் பாலியல் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கும்இந்த பயிற்சி பயன்படுகிறது. பொதுவாக முதல் கர்ப்பத்தின் போது சிறுநீர் பிரச்சனை பெரும்பாலும் தொடங்குகிறது. அப்போது கெகல் பயிற்சியைத் தொடங்குவது சிறந்தது. எனினும் இப்பிரச்சனை இதற்கு முன்பே இருந்தாலும் உடனடியாக இந்த பயிற்சிகளை தொடங்கலாம்.

 
Published by:Sivaranjani E
First published: