• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • தொற்று அச்சத்தில் அடிக்கடி கைகளை கழுவுதால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள்..

தொற்று அச்சத்தில் அடிக்கடி கைகளை கழுவுதால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள்..

காட்சி படம்

காட்சி படம்

சோப்பில் இருக்கும் கடும் ரசாயனங்கள் சருமத்தின் இயற்கை ஈரப்பதத்தை இழக்க செய்கிறது.

  • Share this:
கடந்த 20 மாதங்களுக்கும் மேலாக உலகில் நீடித்து வரும் கோவிட்-19 தொற்றுக்கு முதன்மையான பாதுகாப்பு சுகாதார உத்தியாக கருதப்படுவது கை சுகாதாரம். நம் வாழ்க்கையை கோவிட் தொற்று முற்றிலும் மாற்றிவிட்டது போலவே, நமது கை சுகாதார நடைமுறைகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை இந்த தொற்று கொண்டு வந்துள்ளது. பேரிடரை கொண்டு வந்த கொரோனா வைரஸை எதிர்த்து போராட ஒரு சிறந்த வழியாக தொடர்ந்து கை கழுவும் பழக்கம் நிபுணர்களால் வலியுறுத்தப்பட்டது. இது நாம் அனைவருமே வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு பெற்று அடிக்கடி கைகளை கழுவ வழிவகுத்தது.

எனினும் சிலர் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்து கொண்டு சானிடைஸர் கொண்டு அடிக்கடி கைகளை கழுவி கொண்டே இருக்கின்றனர். இப்படி அடிக்கடி கைகளை சுத்தம் செய்த பலரும் வறட்சி, அரிப்பு மற்றும் பிற தோல் பிரச்சனைகள் காரணமாக பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். தோல் அழற்சியைத் தூண்டக்கூடிய பொருட்கள் பல சோப்களில் காணப்படுகிறன. நினைத்த போதெல்லாம் கைகளை கழுவி சுத்தம் செய்வதால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது பற்றி நிபுணர்கள் கூறியுள்ளவை பற்றி கீழே பார்க்கலாம்.

* அடிக்கடி கைகளை கழுவும் பழக்கத்தால் தோல் வறண்டு அரிப்பு அல்லது செதில்கள் ஏற்படும். தடிப்புகளும் தோன்றும்

* சருமத்தின் லிப்பிடுகள் சேதமாகும்

* சோப்பில் இருக்கும் கடும் ரசாயனங்கள் சருமத்தின் இயற்கை ஈரப்பதத்தை இழக்க செய்கிறது. எனவே சோப் வாட்டரில் அடிக்கடி கைகளை கழுவுவது அடோபிக் டெர்மடிடிஸ், சொரியாசிஸ், முதலிய எக்ஸிமா கண்டிஷன்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோல் நிலைகளை மேலும் மோசமாக்கும்.

* சோடியம் லாரில் சல்பேட், சோடியம் லாரத் சல்பேட், ட்ரைக்ளோசன் ஆகியவற்றைக் கொண்ட சோப் சருமத்திற்கு உண்மையில் தீங்கு விளைவிக்கும். எபிடெர்மல் தோல் தடை மற்றும் தோலின் PH-ஐ அதிகரிக்க செய்யும்.

also read : நீண்ட விவாதத்திற்கு பிறகு மனதை அமைதிப்படுத்துவது எப்படி? இதோ டிப்ஸ்..

அடிக்கடி கை கழுவுவதால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க டிப்ஸ்..

* கை சருமத்தை மென்மையாக வைத்திருக்க ஒவ்வொரு முறையும் கைகளை கழுவும் போது மாய்ஸ்ட்ரைசர் பயன்படுத்துவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். இதற்காக கைகளை கழுவிய பிறகு ஒருவர் லைட் வெயிட் மாய்ஸ்ட்ரைஸிங் க்ரீமை பயன்படுத்தலாம். இது சருமத்தை புத்துணர்ச்சியூட்டவும் உதவுகிறது.

* தூங்குவதற்கு முன் கைகளை கழுவி விட்டு உடனடியாக டீப் மாய்ஸ்ட்ரைஸிங் லோஷனைப் பயன்படுத்துவது சருமத்திற்கு போதுமான ஈரப்பதம், ஊட்டத்தை வழங்கும்.

* மைல்ட் ஹேண்ட்வாஷ் அல்லது மைல்ட் சோப்பு மற்றும் வாசனையற்ற ஹேண்ட் வாஷை பயன்படுத்தலாம்.

* தோல் எரிச்சலை தவிர்க்க கழுவிய உடனேயே ஈரமான கைகளை உலர வைக்க வேண்டும்

* கைகளை உலர வைக்கும் முயற்சியின் போது கைகளை அதிகமாக தேய்க்காமல் தனிப்பட்ட மற்றும் மென்மையான டவலை பயன்படுத்த வேண்டும்.

* அலர்ஜியை தவிர்க்க செராமைடு அடிப்படையிலான மாய்ஸ்ட்சரைசர்கள், ஹைட்ரோபோனிக் ஆசிட், வைட்டமின் ஈ, கோகோ பட்டர், ஷியா பட்டர் சார்ந்த திக் மாய்ஸ்ட்சரைசர்கள், முபிரோசின் க்ரீம் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

தொற்று பரவுவதை தவிர்க்க கை கழுவுவது சிறந்த வழி என்றாலும், சருமத்தின் ஊட்டச்சத்தை தக்க வைத்து கொள்ளவும், நல்ல கை சுகாதாரத்தை பராமரிக்கவும் ஒருவர் கைகளை கழுவிய பின் மாய்ஸ்ட்ரைஸ் செய்து கொள்வது நன்மையை தரும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: