வெளியில் சென்று வீடு திரும்புவோர் என்ன செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது ?

உடைகளை கிருமி நாசினி ஊற்றப்பட்ட நீரில் நனைத்து காய வைக்கலாம். ஒருமுறை வெளியே அணிந்து சென்ற உடையை மீண்டும் அணியக்கூடாது

வெளியில் சென்று வீடு திரும்புவோர் என்ன செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது ?
கொரோனா பாதுகாப்பு
  • Share this:
கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், வெளியில் சென்று வீடு திரும்புவோர் என்னென்ன செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என பார்க்கலாம்.

உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், ஒரு மனிதரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவக் கூடியது என்று மருத்துவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதனால் பொது இடங்களுக்குச் சென்றுவிட்டு வீட்டுத் திரும்பியவுடன், வெளியிலேயே முகம், கை மற்றும் கால்களை சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தமாக கழுவ வேண்டும். குறிப்பாக, விரல் இடுக்குகளில் அதிக கவனம் செலுத்தி, குறைந்தபட்சம் 20 நொடிகள் கழுவுவது அவசியம்.

சோப்பு இல்லாத பட்சத்தில், ஆல்கஹால் அடங்கிய சானிடைசர்களை பயன்படுத்தலாம். ஆனால் சானிடைசர்களை பயன்படுத்திய பிறகு, அடுப்பின் அருகில் நிற்பதையோ, சிகரெட் லைட்டர்கள் பயன்படுத்துவதையோ தவிர்க்க வேண்டும்.


வெளியில் சென்றபோது அணிந்திருந்த உடைகளை உடனடியாக கிருமி நாசினி ஊற்றப்பட்ட தண்ணீரில் சிறிது நேரம் நனைத்து வைத்திருந்து, காயப் போடலாம். அல்லது துவைத்துவிடலாம். ஒருமுறை வெளியில் அணிந்து சென்ற உடைகளை துவைக்காமல் மீண்டும் உடுத்துவதை தவிர்க்க வேண்டும். அதேபோல், மற்ற துணிகளோடு, ஆங்கரில் தொங்கவிடவும் கூடாது.

வெளியில் சென்று வந்தபிறகு, முகம், கை, கால்களை கழுவாமல் குழந்தைகளை தூக்குவது, வயது முதிர்ந்தவர்களின் அருகில் அமர்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதேபோல், வெளியில் சென்று திரும்பும்போது அணிந்திருக்கும் வாட்ச், செல்ஃபோன் ஆகியவற்றின் மீதும் சானிடைசர் மூலம் துடைத்துக் கொள்வதும் கட்டாயம்.

இந்த முறைகளை பின்பற்றினால் வெளியில் இருந்து கொரோனா வைரஸ் வீட்டுக்குள் பரவுவதை கட்டாயம் தவிர்க்கலாம். 

 
First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading