ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

யராவது திடீரென இரத்த அழுத்தம் குறைவாகி மயக்கம் போட்டால் உடனே நீங்கள் என்ன செய்ய வேண்டும்..?

யராவது திடீரென இரத்த அழுத்தம் குறைவாகி மயக்கம் போட்டால் உடனே நீங்கள் என்ன செய்ய வேண்டும்..?

குறை இரத்த அழுத்தம்

குறை இரத்த அழுத்தம்

இதை மருத்துவ முறையில் ஹைப்போடென்ஷன் என்பார்கள். அதாவது குறை இரத்த அழுத்தம் (low blood pressure). இந்த சமயத்தில் நம் உடலுக்கு பாயும் இரத்தம் திடீரென குறையத்தொடங்கும். இதனால் இதயத்திற்கும் செல்லக்கூடிய இரத்தம் தடைபட்டு மயக்கம் உண்டாகும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நீங்கள் வெளி இடங்களில் சிலர் திடீரென மயக்கமாகி கீழே விழும்போது உடனே அவர்களை தாங்கி முதலுதவி செய்திருப்பீர்கள். ஏன்.. வீட்டிலும் கூட வயதானவர்கள் இருந்தால் அவர்கள் மயக்கம் போட்டிருக்கலாம். அந்த சமயத்தில் நீங்கள் என்ன செய்வதென்று பதறாமல் இந்த முதலுதவிகளை செய்யுங்கள். அதற்கு முன் அவர்கள் ஏன் மயக்கம் போட்டார்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

ஏன் மயக்கம் உண்டாகிறது..?

இதை மருத்துவ முறையில் ஹைப்போடென்ஷன் என்பார்கள். அதாவது குறை இரத்த அழுத்தம் (low blood pressure). இந்த சமயத்தில் நம் உடலுக்கு பாயும் இரத்தம் திடீரென குறையத்தொடங்கும். இதனால் இதயத்திற்கும் செல்லக்கூடிய இரத்தம் தடைபட்டு மயக்கம் உண்டாகும். இது பொதுவாக நீண்ட நேரம் அமர்ந்திருந்து திடீரென எழுந்து நிற்கும்போதோ அல்லது கீழே படுத்திருந்து உடனே எழுந்து நிற்கும்போதோ அல்லது அமரும்போதோ இப்படி தோன்றலாம்.

குறை இரத்த அழுத்தம் என்பதை எப்படி கண்டறிவது..?

இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் திடீரென மயக்கம், தலை சுற்றுதல், சோர்வு, உடல் பலவீனம், பார்வை மங்குதல், எதையும் சரியாக காண இயலாமை மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளை உணரக்கூடும்.

குறைவான இரத்த அழுத்தம் யாருக்கெல்லாம் வரலாம்..?

உடலில் நீரேற்றம் குறைதல், கர்ப்பிணிகள், சில மருத்துவக் காரணங்கள், நீண்ட நாட்களாக பெட் ரெஸ்டில் இருப்பது போன்ற பல காரணங்கள் குறை இரத்த அழுத்தம் வருவதற்கு ஆதாரங்களாக இருக்கின்றன.

உறைந்த இறைச்சியில் 30 நாட்கள் வரை கோவிட் வைரஸ் உயிர்வாழலாம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ஹைப்போடென்ஷனால் மயக்கம் , தலைசுற்றுதல் :

ஹைப்போ டென்ஷனில் பல வகைகள் உள்ளன. அதில் பலருக்கும் பொதுவாக வருவது ஆர்தோஸ்டாடிக் ஹைப்போ டென்ஷன். இது மயக்கம், தலைசுற்றுதல், தலை பாரம் போன்ற அறிகுறிகளை தரும். இந்த அறிகுறிகள் இருப்பின் அவர்களுக்கு உடனடி சிகிச்சை அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

சரி... மயக்கம் போட்டவர்களுக்கு உடனே செய்ய வேண்டிய முதலுதவி என்ன..?

5 ரிவர் ஹார் அசோசியேஷனின் தலைவர் ஸ்வாய்மன் சிங் பகோக் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் இது குறித்த வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில்

தலைசுற்றல் அல்லது மயக்கம் வருவது போல் உணர்ந்தால் அது இரத்த அழுத்தம் குறைவதால் உண்டாகலாம். அப்போது உடனே போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

வார இறுதி நாட்களில் மட்டும் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமானதா?

அருகில் இருப்பவர்களும் அவர்களுக்கு தண்ணீர் நிறைய கொடுத்து குடிக்க வைக்க வேண்டும்.

பின் உடனே அவர்களை நாற்காலியில் அமர வைப்பது மிகவும் தவறு. அவர்களை அப்படி உட்கார வைக்காமல் தரையில் மல்லாந்து படுக்க வைத்து இரண்டு கால்களை மேலே தூக்க வைக்க வேண்டும். இதனால் இரத்த ஓட்டம் வேகமாக இதயத்திற்கு பாய்ந்து அறிகுறிகளை குறைக்கும் என்கிறார்.

உப்பு உதவியாக இருக்கும் :

அடுத்ததாக இரத்த அழுத்தத்தை சமன் செய்ய உப்பு உதவி செய்யும். உப்பு அளவை சற்று அதிகமாக எடுத்துக்கொண்டால் இரத்த அழுத்தம் உயரும்.

அழுத்தம் :

கால்கள் வழியாக செல்லும் இரத்தம் மேல் நோக்கி விரைவாக பாய கால்களுக்கு அழுத்தம் தர சொல்கிறார்.

மாத்திரைகள் :

அந்த சமயத்தில் மருத்துவர்கள் உங்களுக்காக பரிந்துரைத்த மாத்திரைகளை போட்டாலும் இரத்த அழுத்தம் குறைந்ததை சரி செய்யலாம்.

இரத்த அழுத்தத்தை எப்படி அளவிடுவது..?

மருத்துவர் , நீங்கள் இரத்த அழுத்தம் பரிசோதனை செய்யும்போது நிமிர்ந்தவாறு அமர்ந்திருக்க வேண்டும். கால் பாதங்கள் அணைத்தபடி தரையில் படும்படி இருக்க வேண்டும்.

இரத்த அழுத்தத்தை கணக்கிடும் மிஷினின் கஃப் கைகளில் சுற்றும்போது உங்கள் மார்பக உயரத்தில் வைத்து சுற்ற வேண்டும்.

First published:

Tags: Low Blood Pressure