ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Low Sugar ஆகிட்டா உடனே என்ன சாப்பிட வேண்டும்..?

Low Sugar ஆகிட்டா உடனே என்ன சாப்பிட வேண்டும்..?

Low Sugar

Low Sugar

low blood sugar level : சர்க்கரை அளவு குறைதல் என்பது உடலில் குளுக்கோஸ் அளவு 70 mg/dL க்கும் குறைவாக இருக்கும். இது அதிகமாக டைப் 1 நீரிழிவு நோயாளிகளு உண்டாகும். பெரும்பாலும் இன்சுலினை அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது சர்க்கரை அளவு குறைகிறது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சிலருக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து நிலை தடுமாறி போவார்கள். அந்த சமயத்தில் அருகில் இருப்பவர்களுக்கும் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது. இதுபோன்ற சமயத்தில் உங்களை நீங்களே தற்காத்துக்கொள்ள இந்த விஷயங்களை கடைபிடியுங்கள்.

  சர்க்கரை அளவு குறைய என்ன காரணம்..?

  சர்க்கரை அளவு குறைதல் என்பது உடலில் குளுக்கோஸ் அளவு 70 mg/dL க்கும் குறைவாக இருக்கும். இது அதிகமாக டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு உண்டாகும். பெரும்பாலும் இன்சுலினை அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது சர்க்கரை அளவு குறைகிறது. அதோடு சரியான நேரத்தின் உணவு உண்ணாதது, புரோட்டீன் குறைவாக எடுத்துக்கொள்ளுதல், சரியான நேரத்தில் இன்சுலின் மாத்திரைகளை உட்கொள்ளாதது, அதிக வேலை அழுத்தம் அல்லது மன அழுத்தம் , தூக்கமின்மை, பருவநிலை மாற்றம், பெண்களுக்கு மாதவிடாய் சமயம் போன்ற காரணங்களால் சர்க்கரை அளவு குறைகிறது.

  சர்க்கரை அளவு குறையும் போது என்ன செய்ய வேண்டும்..?

  சர்க்கரை அளவு அடிக்கடி குறைகிறது எனில் எப்போதும் கையில் சாக்லெட் வைத்துக்கொள்வது நல்லது என மருத்துவர்களே பரிந்துரைப்பதுண்டு. காரணம் இதன் இனிப்பு தன்மை உடனே இன்சுலின் அளவை அதிகரித்துவிடும். சாக்லெட் மட்டுமின்றி ஃபிரெஷ் ஜூஸ் அருந்துவது, பழங்கள் சாப்பிடலாம், தேன் குடிப்பதும் நல்லது.

  Also Read : மிளகு முதல் இஞ்சி வரை... நீரழிவு நோயைக் கட்டுப்படுத்த கிட்சனில் இருக்கும் ஆயுர்வேத மூலிகைகள்

  இந்த தற்காலிக விஷயங்களை செய்த பின் உங்களுக்கு இரத்த சர்க்கரை அளவு இயல்பு நிலைக்கு திரும்பிய பின் நார்ச்சத்து, புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது. உணவு முறையை சீராக வைத்துக்கொண்டாலே சர்க்கரை அளவு குறைவதை தவிர்க்கலாம்.

  அதேபோல் எந்த மாதிரியான நேரத்தில் இரத்த சர்க்கரை அளவு குறைகிறது என்பது கண்டறிவது அவசியம். அப்போதுதான் இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும். அந்த வகையில் நீங்கள் கார்ப் உணவுகளை சாப்பிட்ட பின் எவ்வளவு இருக்கிறது என கண்டறியுங்கள். அதேபோல் அளவை பொறுத்தும் அதன் மாறுபாட்டை கண்கானியுங்கள். இப்படி சாப்பிடுவதற்கு முன் அல்லது பின் என நீங்கள் ட்ராக்கிங் செய்தால் எதனால், எந்த உணவால் உங்களுக்கு குறைகிறது என்பதை கண்டறிந்துவிடலாம்.

  அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்துகொண்டு உரிய மருந்து , மாத்திரைகளை உட்கொள்ளவும் தவறாதீர்கள்.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Low Blood Sugar, Low Sugar