ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குளிர்காலத்தில் தூங்கிக்கொண்டே இருக்க தோனுதா..? இதுதான் காரணம்..!

குளிர்காலத்தில் தூங்கிக்கொண்டே இருக்க தோனுதா..? இதுதான் காரணம்..!

குளிர்காலத்தில் தூக்கம் அதிகமாக வர காரணம்

குளிர்காலத்தில் தூக்கம் அதிகமாக வர காரணம்

சர்க்காடியன் தூக்க சுழற்சி என்பது நமது உடலின் தூக்க நிலையை முக்கியமாக குறிக்கிறது. இது எப்போது தூங்க வேண்டும் மற்றும் எழுந்திருக்க வேண்டும் என்று நமக்கு உணர்த்துகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

குளிர்காலங்களில் வானிலை என்பது குளிர்ச்சியாக இருக்கும்போது, நம்மில் பெரும்பாலோர் சோம்பேறித்தனமாகவும், அதிக தூக்கமாகவும் உணர்கிறோம். மேலும் சோர்வாகவும் மந்தமாகவும் உணர்கிறோம். நிபுணர்களின் கூற்றுப்படி, குளிர் காலநிலையில் சூரிய ஒளி என்பது குறைவாக இருக்கிறது மற்றும் உங்களின் இயக்க நேரத்தையும் பாதிக்கிறது.

இதனால் உங்கள் உடல் அதிக மெலடோனின் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது, இது ஒரு தூக்க ஹார்மோன் என்பதால் அதிகப்படியான தூக்கத்தை ஏற்படுத்துகிறது. எதனால் இது போன்று ஏற்படுகிறது, இதை எப்படி சமாளிப்பது என்பதை பற்றி இனி தெரிந்து கொள்ளலாம்.

அதிக தூக்கம் :

சர்க்காடியன் தூக்க சுழற்சி என்பது நமது உடலின் தூக்க நிலையை முக்கியமாக குறிக்கிறது. இது எப்போது தூங்க வேண்டும் மற்றும் எழுந்திருக்க வேண்டும் என்று நமக்கு உணர்த்துகிறது. மனிதர்கள் பெரும்பாலும் சூரிய ஒளி இல்லாத நேரங்களில் அதிகம் தூங்குவார்கள். மேலும், இருள் என்பது தூக்க ஹார்மோனான, மெலடோனின் உற்பத்தியை அதிகரிக்கிறது, இது நமது தூக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது. அதே போன்று, ஒளியின் இருப்பு என்பது நமது செயல்முறையை மெதுவாக்குகிறது. எனவே, குளிர்காலத்தில் செரோடோனின் ஹார்மோன் அளவுகள் குறைந்து, கவலை தர கூடிய ஹார்மோன் அளவுகள் அதிகரித்து மனச்சோர்வு கூடுகிறது. இதனால், நமது உடலின் வேகமும் குறைகிறது.

வைட்டமின் டி குறைபாடு :

குறைவான சூரிய ஒளியானது வைட்டமின் டி-இன் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இது சூரிய ஒளியில் இருந்து கிடைக்க கூடிய முக்கிய வைட்டமினாகும். வைட்டமின் டி குடலில் கால்சியம் உறிஞ்சுதலை ஊக்குவிக்கிறது. மேலும், கால்சியம் மற்றும் பாஸ்பேட் செறிவுகளை போதுமான அளவு பராமரிக்கிறது, இது சாதாரண எலும்பு கனிம மயமாக்கலை செயல்படுத்துகிறது. இது தசைகளின் தன்னிச்சையான சுருக்கத்தைத் தடுக்கிறது. வைட்டமின் டி என்பது குழந்தைகளுக்கு ரிக்கெட்ஸ் நோய் பாதிப்பை தடுக்கிறது மற்றும் பெரும்பாலும் பெண்களுக்கு ஆஸ்டியோமலாசியா பாதிப்பையும் தடுக்கிறது.

Also Read : குளிர்காலத்தில் அடிக்கடி கண்கள் வறண்டு போகிறதா..? சரி செய்வதற்கான டிப்ஸ்..!

கீழ்வாதம் :

குளிர்காலங்களில் காற்று அழுத்தத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கம் காரணமாக உடலில் சில பாதிப்புகள் ஏற்படலாம். இதன் காரணமாக மூட்டுவலி வலி அதிகரிக்கும் அபாயம் இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, கீழ்வாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்பதால் குளிர் காலங்களில் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

குளிர்கால சோம்பலை போக்கும் வழிகள் :

குளிர்காலத்தில் சோம்பலை தவிர்க்க, பகல் நேரத்தில் உங்கள் அறைகளை பிரகாசமாக வைத்திருங்கள். எவ்வளவு குளிராக இருந்தாலும் எப்போதும் சாப்பாட்டு மேசையில் சாப்பிடுங்கள். நீங்கள் அலுவலகத்தில் இருந்தால், ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும், குறிப்பாக மதிய உணவு நேரத்திற்குப் பிறகு குறைந்தது 5-10 நிமிடங்கள் நடக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். விடுமுறை நாட்களில் கூட, 8 மணிநேர தூக்க சுழற்சியை மட்டுமே கடைப்பிடிக்க முயற்சியுங்கள்.

குளிர்காலத்தில் லேசான உணவை உண்ணுங்கள். பதப்படுத்தப்பட்ட, சர்க்கரை மற்றும் வறுத்த உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்த்து விடுங்கள். அதிகாலை அல்லது மாலை நேரத்தில் வெளியே சென்று உடற்பயிற்சி செய்வதை உறுதி செய்ய வேண்டும். குளிர்காலத்தில் தாகம் ஏற்படாது என்பதால் தண்ணீர் குடிப்பதை மறவாமல் செய்யுங்கள். பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்.வெளியே சென்று நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுங்கள். உங்களால் முடிந்தவரை வெயிலில் உட்கார்ந்து இயற்கையாகவே வைட்டமின் டி-யை எடுத்துக் கொள்ளுங்கள்.

Also Read :  18 வயதிற்கு பிறகும் உயரமாக வளர முடியுமா..? உயரத்தை அதிகரிக்க உதவும் வழிகள்...

பொறுப்பு துறப்பு:

கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள உதவிக்குறிப்புகள் மற்றும் பரிந்துரைகள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தவொரு உடற்பயிற்சி திட்டத்தையும் தொடங்குவதற்கு முன் அல்லது உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுகவும்.

First published:

Tags: Sleep, Winter