கொரோனா காலத்தில் ஆரோக்கியமாக இருக்க எந்த மாதிரி உணவுகளை சாப்பிடலாம் ?

காட்சி படம்

நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடுவது எப்போதுமே முக்கியம்.

  • Share this:
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் நம்மில் பலரது வாழ்வை புரட்டி போட்டுள்ளது. ஏராளமானோர் தொற்றுக்கு ஆளாகி மீண்டும்  இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கின்றனர். தொற்று பாதிப்பு ஏற்பட கூடாது என்பதற்கு எப்படி சில நோயெதிர்ப்பு உணவு முறைகளை பின்பற்ற நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்களோ, அதே போல தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீளும் கட்டத்தில் உள்ளவர்கள், மீண்டவர்கள் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை பெற முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர். தொற்று பாதிப்பிற்கு உள்ளான மக்கள் அதிக புரதம் நிறைந்த மற்றும் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடுவது எப்போதுமே முக்கியம்.

அதிலும் குறிப்பாக இந்த தொற்று நோய் காலத்தில் இது இன்னும் மிக முக்கியமானது. ஏனென்றால் ஊட்டச்சத்துள்ள உணவுகளை நன்கு சீரான முறையில் உட்கொள்வது வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதற்கு முன் எப்படியோ இந்த பெருந்தொற்று தற்போது வரை நீடிக்கும் நிலையில் ஆரோக்கியமான உணவுகளை நாம் இப்போது சாப்பிடுவது கோவிட் -19 தொற்றை தடுப்பது, தொற்று வந்தவுடன் அதிலிருந்து மீள போராடுவது மற்றும் வெற்றிகரமாக இயல்பு நிலைக்கு திரும்புவது ஆகியவற்றுடன் தொடர்புடையது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த உணவுகளை சாப்பிட்டால் தொற்று நிச்சயம் ஏற்படாது என்று எந்த உத்தரவாத உணவுகளும் இல்லை. ஆனால் தொற்றை தடுக்க தேவையான நோயெதிர்ப்பு சக்தியால் அதிகரிக்க செய்யும் உணவு பழக்கத்தை பின்பற்றுவது இந்த இக்கட்டான நேரத்தில் நமக்கு கை கொடுக்கும்.

தானியங்கள், பருப்பு வகைகள், பால் மற்றும் பால் பொருட்கள், அதிக அளவிலான பழங்கள் மற்றும் காய்கறிகள், தேவையான அளவு கொழுப்புகள் மற்றும் எண்ணெய்கள் ஆகியவற்றுடன் கூடிய உணவுமுறை தற்போது நாம் பின்பற்ற சரியான டயட் தேர்வாக இருக்கும். பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஊட்டச்சத்து அவசியம். தொற்று காலத்தில் அனைவரும் பின்பற்ற வேண்டிய சில ஆரோக்கியமான உணவை குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

* காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிக நார்ச்சத்து உள்ளதால் இவற்றை தினமும் தவறாமல் சேர்த்து கொள்வதை பழக்கமாக்கி கொள்ளுங்கள்.

Also read : கொரோனாவால் லேசாக பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம்..

* முழு தானிய, அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடலாம். இதில் பழங்கள், காய்கறிகள் மற்றும் பீன்ஸ் வகைகள் கோதுமை, ஓட்ஸ்/, கம்பு, பார்லி, பிரவுன் ரைஸ், தினை உள்ளிட்டவை அடங்கும்.

* கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் அதில் செய்யப்பட்ட பொருட்கள், பசும்பால், பருப்பு வகைகள், முழு தானியங்கள், முட்டையின் வெள்ளை, கோழி மற்றும் மீன் போன்ற புரத சத்து அதிகம் காணப்படும் உணவுகளை எடுத்து கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

* ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளான மீன் உணவுகள், பாதாம், அக்ரூட் பருப்புகள், ஆளி விதைகளை சாப்பிட்டு வரலாம்.

* உணவுகளில் அதிகமாக உப்பு சேர்ப்பதை தவிர்ப்பது, ரெடி டூ ஈட் மற்றும் ரெடி டூ குக் உள்ளிட்ட தயாரிப்புகளை அறவே தவிர்த்து விடுங்கள்.

Also read : உடல் எடையை குறைக்க போராடுறீங்களா ? கவலைய விடுங்க.. இத டீடாக்ஸ் பானத்தை குடிங்க..

* பேக்கரி பொருட்கள், கேக்குகள், பேக் செய்யப்பட்ட உணவுகள், வறுத்த பொருட்கள், நெய், வெண்ணெய், டால்டா உள்ளிட்ட பொருட்களை வழக்கத்தை விட மிக குறைவாக சாப்பிடுவது மிகவும் நல்லது.

* சமையலில் அதிக எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ளுங்கள். குறிப்பாக சொல்வதென்றால் ஒருநபர் மாதம் ஒன்றுக்கு அரை லிட்டருக்கு மேல் எண்ணெயை பயன்படுத்த வேண்டாம் என்பது நிபுணர்களின் அறிவுரை.

* வறுத்த உணவுகளை விட வேகவைப்பது, கொதிக்க வைப்பது, டோஸ்டிங் செய்வது போன்ற சமையல் முறைகளை பயன்படுத்தி தயார் செய்வது உணவுகளை ஆரோக்கியமாக சாப்பிட உதவும் வழிகளாகும். எல்லாவற்றுக்கும் மேலாக வழக்கமான உடற்பயிற்சி மற்றும் உடல் செயல்பாடு உள்ளிட்டவை இல்லாமல் ஆரோக்கியமான உணவு மட்டுமே சாப்பிடுவது உண்மையில் உதவாது என்றும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: