பிரசவத்திற்குப் பின் உண்ண வேண்டிய உணவுகள் - மருத்துவர் ஆலோசனை

குழந்தைக்கு கட்டாயம் ஆறுமாத காலமாவது தாய் பால் கொடுக்கவேண்டும். பால்தான் குழந்தையின் அடிப்படை நோய் எதிர்ப்பு சக்தியையும், ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கும்.

பிரசவத்திற்குப் பின் உண்ண வேண்டிய உணவுகள் - மருத்துவர் ஆலோசனை
பிரசவத்திற்குப் பின் பெண்களின் ஆரோக்கியம்
  • News18
  • Last Updated: August 10, 2019, 9:14 AM IST
  • Share this:
கர்ப்ப காலத்தில் பெண்கள் உடலளவிலும் மனதளவிலும் பல மாற்றங்களைக் கொண்டிருப்பார்கள். குழந்தை பெற்றெடுத்தபின் மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டுமெனில் சில மருத்துவக் குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும்.

”கர்ப்ப காலத்தைக் காட்டிலும் பிரசவத்திற்குப் பின் தான், பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தைக் கூடுதல் கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் உட்கொள்ளும் உணவுகள் அவர்களுக்காக மட்டுமல்ல. தன் குழந்தைக்கும் சேர்த்துதான். அவர்கள் ஊட்டும் பால்தான் அந்தக் குழந்தையின் அடிப்படை நோய் எதிர்ப்பு சக்தியையும், ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கிறது “ என்கிறார் மகப்பேறு மருத்துவர் மனுலக்‌ஷ்மி.
மேலும் அவர் “குழந்தைக்கு கட்டாயம் ஆறுமாத காலமாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதுவரை தண்ணீர் கூட கொடுக்கக்கூடாது. தாய் பால் மட்டும்தான் அந்தக் குழந்தைக்கு உணவாகக் கொடுக்க வேண்டும். அதுவரையிலும் பெண்கள் தங்கள் உணவு விஷயத்தில் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில் அதன் பாதிப்பு குழந்தைக்குத்தான்.’’

அதற்காக என்ன மாதிரியான உணவுகளை உட்கொள்ளலாம்:

வைட்டமின் நிறைந்த உணவுகள்:வைட்டமின் நிறைந்த உணவுகளை பிரசவத்திற்குப் பின் உட்கொள்வது அவசியம். அவை உங்கள் உடலுக்கு புது செல்களை உற்பத்தி செய்து தோள்களை புதுபிக்க உதவுகிறது. இதற்கு காய்கறிகள், வைட்டமின் A வைட்டமின் C நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். இதற்கு ஆரஞ்சு, திராட்சை, தர்பூசணி என பழங்களை அதிகமாக உண்ணலாம். இவ்வாறு உண்பதால் அவை நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இந்தச் சமயத்தில் உங்களை நோய் தாக்காமல் கவனித்துக்கொள்வது அவசியம்.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள்:

பெண்களுக்கு இந்தச் சமயத்தில் மலச்சிக்கல் பிரச்னைகள் இருக்கலாம். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண்களுக்கு இந்த மலச்சிக்கல் பிரச்னை, அறுவைசிகிச்சை செய்த இடத்தில் வலியை ஏற்படுத்தும். இதற்கு பச்சைக் காய்கறிகள், பழங்களை அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள். நாம் தினசரி உண்ணும் ஆரோக்கியமான உணவுகளிலேயே நார்ச்சத்து இருக்கும்.தானிய உணவுகள்:

மைதா அல்லாமல் கோதுமை, சிவப்பு அரிசி, கடலை, பயிறு போன்ற உணவுகளை உட்கொள்ளலாம். இது இரும்புச் சத்தை அதிகரிக்கும். இதனால் குழந்தைக்கான பால் சுரத்தலும் அதிகரிக்கும்.

ப்ரோடின், காலிசியம் மற்றும் மினரல் நிறைந்த உணவுகள்:

ப்ரோடின் உணவுகள் உங்கள் உடலை இயல்பு நிலைக்குக் கொண்டுவர உதவும். கால்சியம் எலும்பை உறுதியாக்க உதவும். உடல் தசைகளும் வலுபெறும். இலகுத் தன்மையைப் பெறும். இந்த கால்சியம் சத்து, உங்களுக்கு மட்டுமல்லாமல் குழந்தையின் எலும்பையும் உறுதியாக்கும். மினரல் சத்துக்களும் உங்கள் உடல் வலிமைக்கும், உடல் ஆற்றலுக்கும் உதவும்.

 

இரும்பு சத்து நிறைந்த உணவு:

பிரசவத்தின்போது குறைந்தது ஒரு லிட்டர் இரத்தமாவது வெளியேறும். அது ஆப்ரேஷன் செய்தவர்களுக்கு அதிகமாக இருக்கும். இதை ஈடுகட்ட அதிகமான இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். குழந்தைகளுக்கு பால் சுரக்கவும் இரும்புச் சத்துதான் அவசியம். அதனால் தினமும் கட்டாயம் இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வது நல்லது.

பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும்:

எண்ணெய் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், எளிதில் ஜீரணமாகாத உணவுகள் உண்பதைத் தவிர்க்கவும். அவை குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். உங்கள் உடலுக்கும் நல்லதல்ல. குறைந்தது ஆறுமாதமாவது இந்த உணவுகளைத் தவிர்க்கவும். அதிகமாக திரவ உணவுகளை உட்கொள்ளுங்கள். ஜூஸ் அருந்துங்கள். அவை உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கும். எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். இவை பால் சுரத்தலையும் அதிகரிக்க உதவும்’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் மனுலக்‌ஷ்மி.

.

Also Read :    உங்களைச் சுற்றிலும் சூழல் சரியாக இல்லாதபோதும் மகிழ்ச்சியாக இருக்க சில வழிகள்!

First published: April 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading