வசீகரமான தோற்றம் மற்றும் உடல் அமைப்பு கொண்ட பிரபல பாலிவுட் நடிகர்களில் வருண் தவானும் ஒருவர் ஆவார். தனித்துவமான புன்னகை கொண்ட நடிகர் வருண் தவான் கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படம் மூலம் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு பாலிவுட்டில் அறிமுகம் ஆனார்.
தற்போது பாக்ஸ் ஆபிஸில் ஹிட் கொடுக்கும் முக்கிய நடிகர்களின் பட்டியலில் தவிர்க்க முடியாத ஒருவராக இருந்து வருகிறார் நடிகர் வருண் தவான். இவர் பல வருடமாக மெயின்டைன் செய்து வரும் ஃபிட்னஸ் பெண் ரசிகைகளை கவர்ந்துள்ளதோடு, அவரது ஆண் ரசிகர்களுக்கு ஃபிட்னஸ் மீதான உத்வேகத்தை அதிகரித்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
வருண் தனது அழகான உடலமைப்பை பல ஆண்டுகளாக பராமரித்து வருவது மட்டுமல்லாமல், ஸ்கிரிப்ட்களுக்கு ஏற்ப தேவைப்படும் போதெல்லாம் இன்னும் கடினமாக பயிற்சி செய்து ஃபிட்னஸின் அடுத்த கட்டத்திற்கு செல்கிறார். மேலும் இவர் தான் நடிக்கும் கேரக்டர்களுக்கு ஏற்ப ஜிம் வொர்கவுட்களை மாற்றி கொள்கிறார். இது பற்றி கூறும் நடிகர் வருண், கேரக்டர்களுக்காக வொர்கவுட் முறைகளை மாற்றுவது ஜிம் செல்லும் நேரத்தை எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக்குகிறது என்கிறார்.
இளைஞர்கள் பலரும் வருண் தவானை போல உடலமைப்பை பெற நினைக்கிறார்கள். இங்கே நடிகர் வருணின் வழக்கமான ஃபிட்னஸ் நடைமுறையை பார்க்கலாம்.
இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்:
இதை இடைப்பட்ட விரத முறை என்று குறிப்பிடுகிறோம். வருண் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க சுமார் 14 முதல் 16 மணி நேரம் இடைப்பட்ட விரத முறையை கடைபிடிக்கிறார். இதன் மூலம் நாளொன்றுக்கு அவர் தனது சாப்பிடுவதற்கான நேரத்தை 8 முதல் 10 மணி நேரமாக சுருக்கி உள்ளார். என்ன சாப்பிடுவதாக இருந்தாலும் 8 - 10 மணி நேரங்களுக்குள் சாப்பிட்டு கொள்கிறார். அதன் பின் தொடர்ச்சியாக 14 முதல் 16 மணி நேரம் இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கை கடைபிடிக்கிறார்.
சத்தான உணவு பழக்கம்:
நடிகர் வருண் தவான் தனது தினசரி டயட்டில் ஃபைபர் , புரோட்டீன், கால்சியம் மற்றும் மினரல்ஸ் நிறைந்த சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சேர்த்து கொள்கிறார். மேலும் இவர் தனது நாளை ஒரு கப் காஃபியுடன் துவக்குகிறார்.
வாய் துர்நாற்றம், செரிமானமின்மை... உங்கள் குடல் ஆரோக்கியமாக இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள்...
காலை மற்றும் மதிய உணவு:
நடிகர் வருண் தவானின் காலை உணவில் ஆம்லெட் அல்லது ஒரு பவுல் ஓட்ஸ் நிச்சயம் இருக்கும். மதிய உணவில் பெரும்பாலும் அவர் நிறைய காய்கறிகள் மற்றும் சிக்கனை சேர்த்து கொள்கிறார்.
ஸ்னாக்ஸ் மற்றும் டின்னர்:
இவருக்கு பிடித்த ஸ்னாக்ஸ் ரோஸ்ட்டட் மக்கானாஸ். இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் இல்லாத நேரங்களில் அல்லது இரவு உணவு சாப்பிட விரும்பினால் அதில் ஊட்டச்சத்து மிக்க காய்கறிகள் மற்றும் கோழி இறைச்சி இடம்பெறும். பீட்ஸா, சீஸ் கேக் மற்றும் சாக்லேட் மில்க் ஷேக்குகள் அடங்கிய தனது சீட் மீல் (cheat meal) பற்றி சோஷியல் மீடியாக்களில் சமீபத்தில் வெளிப்படுத்தினார் நடிகர் வருண் தவான்.
எப்போதும் ஹைட்ரேட்டாக இருப்பார்..
அவர் எப்போதுமே தன் உடலில் போதுமான நீர்சத்து இருக்குமாறு பார்த்து கொள்வார். தன்னை ஹைட்ரேட்டாக வைத்திருக்கவும், தேவையற்ற சிற்றுண்டிகளை தவிர்க்கவும் அடிக்கடி நிறைய தண்ணீரை குடிக்கிறார்.
பிடித்த வொர்கவுட்:
இவர் நிறைய ஸ்ட்ரென்த் ட்ரெயினிங் மற்றும் கலிஸ்தெனிக்ஸ் செய்தாலும் அவர் Pilates பயிற்சிகளையே தனது விருப்பமான உடற்பயிற்சிகளாக கருதுகிறார்.
பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் 5 அற்புத நன்மைகள்..!
கடும் பயிற்சி அமர்வுகள்:
பீர்பால் ட்ரெயினரான பிரசாந்த் சவந்த் வாரத்தில் 5 நாட்கள் நடிகர் வருணுக்கு பயிற்சி அளிக்கிறார். அவர் எடை தூக்குதல், தற்காப்பு கலைகள் மற்றும் ஹெவி-டியூட்டி கார்டியோ ஆகியவற்றை ஒன்றுக்கொன்று மாற்றாக பயிற்சி செய்கிறார்.
யோகா முதல் சைக்கிளிங் வரை
நடிகர் தனது ஓய்வு நேரத்தில் மன அழுத்தம் இல்லாமல் இருக்க யோகா செய்கிறார் மற்றும் அவரது ஆற்றல் அளவை அதிகரிக்க நீச்சல் செய்கிறார். மேலும் இவர் சைக்கிளிங் செய்ய மிகவும் விரும்புகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.