• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகள் என்னென்ன ? வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகள் என்னென்ன ? வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

காட்சி படம்

காட்சி படம்

உலகெங்கிலும் மற்றும் இந்தியாவிலும் ஆண்களிடையே 3-வது மிகப் பொதுவான புற்றுநோயாக பெருங்குடல் புற்றுநோய் இருக்கிறது.

  • Share this:
    பல ஆண்டுகளாக உலக அளவில் மிகப்பெரிய நோய் ஒன்று வயதி வித்தியாசமின்றி பாதிப்பை ஏற்படுத்தி அச்சுறுத்தி வருகிறது என்றால் அது புற்றுநோய் தான். புற்றுநோயில் ஏராளமான வகைகள் இருக்கின்றன. இதில் உலகெங்கிலும் மற்றும் இந்தியாவிலும் ஆண்களிடையே 3-வது மிகப் பொதுவான புற்றுநோயாக பெருங்குடல் புற்றுநோய் இருக்கிறது. இது பெரிய குடலில் ஏற்படும் புற்றுநோயை குறிக்கிறது. மேலும் இந்த வகை புற்றுநோயானது குடல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் அல்லது மலக்குடல் புற்றுநோய் என்றும் குறிப்பிடப்படுகிறது.

    இந்த வகை புற்றுநோய் செல்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து பொதுவாக இது குடலின் உட்புறத்தில் தோன்றி பெருங்குடல் முழுவதும் பரவி மலக்குடல் வரை பாதிப்பை ஏற்படுத்தும். ஆண்டுதோறும் பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக மார்ச் மாதம் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெருங்குடல் புற்றுநோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. எனவே இந்த நோயின் அறிகுறிகள், நோயை தடுக்க தேவையான வாழ்க்கை முறை மாற்றங்களின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள்

    பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகள்

    பெருங்குடல் புற்றுநோய் அறிகுறிகளை அடையாளம் காண்பது சற்று கடினம் என்பதால், பெரும்பாலானோருக்கு நோய் இருப்பதையே கண்டறிய முடியாமல் போகும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. எனவே குடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் போது நாம் சற்று கவனமாக இருக்க வேண்டும். பிற புற்றுநோய்களை போல துவக்கத்திலேயே கண்டறிந்து விட்டால் பெருங்குடல் புற்றுநோயை எளிதில் குணப்படுத்திவிட முடியும்.

    இதற்கு சரியான நேரத்தில் பரிசோதனை செய்வதும், நோய் இருப்பதை கண்டறிவதும் அவசியம். மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, மலத்தின் மாறுபட்ட நிறம், மலத்துடன் ரத்தம் வருவது, மலக்குடல் ரத்த போக்கு, அதிகப்படியான வாயு, வயிற்றுப் பிடிப்பு மற்றும் வயிற்று வலி உள்ளிட்டவை கூட இந்நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.

    also read : பெண்களும்… மார்பக புற்றுநோயும்… மார்பக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்..!

    சிகிச்சை.

    சமீப காலமாக புதிய நோயறிதல் மற்றும் சிகிச்சை விருப்பங்கள் உள்ளன. அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை மற்றும் கீமோதெரபி போன்ற பன்மடங்கு அணுகுமுறைகளுடன் அளிக்கப்படும் சிகிச்சை இப்போது நோயாளியின் நல்வாழ்வில் கவனம் செலுத்தி அவர்களை நோயில் இருந்து விரைவாக மீட்கிறது. ஆனால் சிகிச்சைக்கு முன் நினைவில் நாம் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், சிகிச்சையானது பெரும்பாலும் புற்றுநோய் இருக்குமிடம் , அதன் ஸ்டேஜ் மற்றும் பிற உடல்நலக் பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை பொறுத்தது என்பதே.

    பரிசோதனை முறைகள்:

    மல ரத்த பரிசோதனை (FOBT) மற்றும் கொலோனோஸ்கோபி ஆகியவை பெருங்குடல் புற்றுநோய் கண்டறிவதற்கான பரிசோதனையின் 2முறைகள். நோய் துவக்க கட்டத்தில் இருப்பின் கொலோனோஸ்கோபியின் போது கட்டியை முழுவதுமாக அகற்ற முடியும். அறுவை சிகிச்சை முடிந்ததும், தொடர்ந்து கீமோதெரபி, கதிர்வீச்சு, மற்றும் நோயெதிர்ப்பு சிகிச்சை தரப்படும். பொதுவாக இந்நோய் வயதானவர்களுக்கு அதிக வருவதால் வலி நிவாரண சிகிச்சையும் ஒரு சிகிச்சையாக பரிந்துரைக்கப்படுகிறது. தேவையான அனைத்து சிகிச்சைகளுடனும் வலி நிவாரண சிகிச்சை அளிக்கும் போது நோயாளிகளுக்கு நன்றாக இருக்கும்.

    சமீப ஆண்டுகளில் இந்நோயால் பாதிக்கப்படும் இளம்வயதினரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இது பெரும்பாலும் மோசமான வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், உடல் பருமன் மற்றும் குறைவான உடல் உழைப்பு உள்ளிட்டவற்றாலும் ஏற்படுகிறது. இந்த புற்றுநோயை தடுக்க தவறாமல் உடற்பயிற்சி செய்து, சுறுசுறுப்பான வாழ்க்கை முறை வாழ மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக அதிக உடல் எடை பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்க முக்கிய காரணமாக கூறப்படுவதால் ஆரோக்கிய உணவு மற்றும் உடற்பயிற்சி முக்கியம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: