Home /News /lifestyle /

இரண்டாம் குழந்தை பெற்றுக் கொள்ள எவ்வளவு கால இடைவெளி அவசியம்..? தெரிந்துகொள்ளுங்கள்

இரண்டாம் குழந்தை பெற்றுக் கொள்ள எவ்வளவு கால இடைவெளி அவசியம்..? தெரிந்துகொள்ளுங்கள்

இரண்டாம் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டம்

இரண்டாம் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டம்

முதல் குழந்தையை பெற்றெடுத்த தருணத்தில் இருந்து மறு குழந்தைக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு இயற்கையாக வந்து விடும் என்றாலும் கூட, தாய்ப்பால் ஊட்டும் ஒருவர் உடனடியாக கர்ப்பம் தரிப்பது ஆரோக்கியமானதாக இருக்காது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மக்கள் தொகை பெருக்கத்தால் குடும்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ள நிலையிலும், இன்றைய காலகட்டத்தில் ஒரு பிள்ளையை பெற்றெடுத்து வளர்த்து, ஆளாக்குவதற்கான செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையிலும், பெரும்பாலான தம்பதியர்கள் ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்கின்றனர்.

அதாவது, நாம் இருவர், நமக்கு இருவர் என்ற கொள்கை மாறி, இப்போது நாம் இருவர், நமக்கு ஒருவர் என்ற கொள்கை பரவலாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம், நமது குழந்தைக்கு மற்றொரு துணை அல்லது உறவு வேண்டும் என்று கருதும் பல தம்பதியர்கள் இரண்டாம் குழந்தையை பெற்றுக் கொள்ள திட்டமிடுகின்றனர்.

முதல் குழந்தையை பெற்றெடுத்த தருணத்தில் இருந்து மறு குழந்தைக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு இயற்கையாக வந்து விடும் என்றாலும் கூட, தாய்ப்பால் ஊட்டும் தாய்மார் ஒருவர் உடனடியாக கர்ப்பம் தரிப்பது ஆரோக்கியமானதாக இருக்காது.

அதாவது பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதற்கான சக்தி உடலில் வேண்டும் என்ற அதே சூழலில், மற்றொரு குழந்தையை வயிற்றில் சுமக்கத் தொடங்கினால் பெருமளவிலான ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படும். இதனால் தாய் மற்றும் சேய் அனைவருமே உடல் ஆரோக்கியத்தை இழக்கத் தொடங்குவார்கள்.



முதல் குழந்தை பெற்ற குறுகிய காலத்திற்குள்ளாக அடுத்த குழந்தைக்கு கருத்தரிப்பது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று மகப்பேறு மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதுகுறித்து பெங்களூருவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் சங்கீதா கோம்ஸ் கூறுகையில், “குடும்ப திட்டமிடுதலில், ஒரு குழந்தைக்கும், மற்றொரு குழந்தைக்கும் இடையே இடைவெளி அளிப்பது மிக முக்கியமானது. குறுகிய காலத்தில் கர்ப்பம் அடைந்தால் தாய் மற்றும் சேய் நலன் பாதிக்கப்படும்.

குழந்தைக்கு காய்ச்சல் இருக்கும் போது அவர்களை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும்..?

அடுத்த குழந்தையை பெற்றுக் கொள்ளும்போது ஆரோக்கியமான கர்ப்பிணியாக இருக்க வேண்டும் என்றால் எவ்வளவு காலம் இடைவெளி தேவை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் ஒரு குழந்தை பிறந்த சமயத்தில் இருந்து ஓராண்டு இடைவெளியாவது இருக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.



என்னென்ன விளைவுகள் ஏற்படும்

குறுகிய காலத்தில் இரண்டாம் குழந்தை பெற்றுக் கொள்பவர்கள் சில பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

  • குறைப்பிரசவம்,

  • மரபுரீதியான பிரச்சினைகள்

  • குறைவான எடை,

  • கர்ப்பகால ரத்தச்சோகை,

  • நஞ்சுக்கொடி சீர்குலைவு.


தம்பதியர் கவனிக்க வேண்டியவை

இரண்டாம் குழந்தை பெற்றுக் கொள்ள தயாராகும் முன்பாக, ஒரு தாய் முந்தைய பிரசவத்தின் விளைவுகளில் இருந்து மீண்டு, முழு ஆரோக்கியம் நிறைந்தவராக இருக்கிறாரா என்பதை கவனிக்க வேண்டும். சுமார் 18 மாதங்கள் முதல் 24 மாத இடைவெளி இருக்க வேண்டும்.

கரு முட்டை வெளிப்படுவதை கண்டறிய உதவும் முக்கியமான 5 அறிகுறிகள் இதோ! 

அதே சமயம், 5 ஆண்டு இடைவெளியை தாண்டக் கூடாது. தம்பதியர்களின் வயது 35க்கு மேல் இருப்பின், அவர்கள் 12 மாத இடைவெளியை கடைப்பிடிக்கலாம்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Pregnancy

அடுத்த செய்தி