‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பது போல், உடல் சீராக இயங்க கொழுப்பு எரிசக்தி பயன்படுகிறது. ஆனால் இதன் அளவு அதிகரிக்கும் போது இருதய நோய், பக்கவாதம், உடல் பருமன் போன்ற அதிதீவிரமான பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது. ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு கூடும் போது அவை ரத்த நாளங்களில் படிய ஆரம்பிக்கிறது, இதனால் தமனிகளில் அடைப்பு ஏற்படுகிறது. இந்த அடைப்பு சில சமயங்களில் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களை உருவாக்குகிறது.
மேலும் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதை எந்தவிதமான அறிகுறி மூலமாகவும் கண்டறிய முடியாது என்பது மற்றொரு அச்சுறுத்தலாகும். எனவே ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் கண்டறிய ஒரே வழி, ரத்த பரிசோதனை மட்டுமே ஆகும். எந்தெந்த வயதைச் சார்ந்தவர்கள் ரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்...
கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்ய வேண்டிய வயது எது?
அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் ஒருவர் 20 வயதிலிருந்தை எட்டியதில் இரத்தக் கொழுப்பின் அளவைப் பரிசோதிக்க வேண்டும் என பரிந்துரைக்கிறது. குழந்தைகளைப் பொறுத்தவரை 9 வயதை அடைந்ததும் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை பரிசோதிக்க வேண்டும்.
தற்போது வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் கொலஸ்ட்ராலால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. எனவே குழந்தைகள் வளர்ந்து பதின்ம வயதை அடையும் போது, 17 முதல் 20 வயதிற்குள் ஒருமுறை ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை பரிசோதித்து பார்க்க வேண்டும்.
ஆராய்ச்சி ஆய்வுகளின்படி, இந்தியாவில் 25 முதல் 30 சதவீதம் வரை நகர்ப்புறங்களில் வசிப்பவர்களிடையேயும், 15 முதல் 20 சதவீதம் வரை கிராமப்புறங்களில் வசிப்போருக்கும் அதிக கொலஸ்ட்ரால் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, நகர்ப்புற மக்களின் 20 வருட மொத்த கொலஸ்ட்ரால் அளவில், எல்டிஎல் கொழுப்பு (கெட்ட கொழுப்பு) மற்றும் ட்ரைகிளிசரைடுகள் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வாரியாக கொலஸ்ட்ரால் அளவு என்ன?
19 வயது வரை, மொத்த கொலஸ்ட்ரால் அளவு டெசிலிட்டருக்கு 170 மில்லிகிராம் குறைவாக இருக்க வேண்டும். பெரியவர்களில் கொழுப்பின் இயல்பான அளவு 200 க்கும் குறைவாக இருக்க வேண்டும். ரத்தத்தில் 200 மற்றும் 239க்கும் மேற்பட்ட அளவிற்கு கொலஸ்ட்ரால் கொண்ட நபரின் வாழ்நாள் முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதைக் குறிக்கிறது.
கொலஸ்ட்ரால் அதிகரிக்க மரபியல் காரணம் என்ன?
ரத்தத்தில் கெட்ட கொழுப்பை அதிகரிக்க வைக்கும் ஹைபர் கொலஸ்டிரோலீமியா என்ற பிரச்சனை குடும்பத்தில் யாருக்காவது இருந்தால், அதனால் நீங்களும் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. இதன் விளைவாக, ஒரு நபர் சிறுவயதிலிருந்தே மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன. நெருங்கிய உறவினர்கள் மாரடைப்பு போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், உடனடியாக உங்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவை பரிசோதனை மூலமாக கண்டறிவது நல்லது.
கொலஸ்ட்ராலால் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான நோய்கள்:
அதிக கொலஸ்ட்ரால் பல கடுமையான உடல் நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. நெஞ்சு வலி அல்லது ஆஞ்சினா, மாரடைப்பு, பக்கவாதம் இவற்றுடன் சிறுநீரக நோய், நீரிழிவு, எய்ட்ஸ், ஹைப்போ தைராய்டிசம் போன்ற சில மருத்துவ பிரச்சனைகளும், உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க காரணமாகின்றன.
காலையில் எழுந்ததுமே சோர்வா இருக்கா..? அப்ப இந்த வைட்டமின் குறைபாடு ஏற்பட்டிருக்கலாம்..!
அதிக கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது எப்படி?
முறையான உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சி, நிம்மதியான உறக்கம், மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய செயல்களில் இருந்து விலகி இருப்பது உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த உதவும். குறிப்பிட்ட வயதிற்கு பிற்கு உடலில் உள்ள அளவுக்கு அதிகமான கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது சுலபமான காரியம் அல்ல, எனவே இளம் வயது முதலே கொலஸ்ட்ராலைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளக்கூடிய வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது நல்லது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cholesterol