ஒற்றைத் தலைவலி என்பது ஒரு பொதுவான நரம்பியல் பிரச்சனையாகும்; பொதுவாக ஏற்படும் தலைவலியின் ஒரு வகையாகும். மதிப்பீடுகளின்படி, ஒற்றைத் தலைவலியின் பொதுவான பாதிப்பானது 15% - 25% க்கு இடையில் உள்ளது, குறிப்பாக பெண்களுக்கு இவ்வகை தலைவலி அதிகம் ஏற்படுகிறது.
சுமார் 4 மணி முதல் 72 மணி வரை நீடிக்கும் இந்த ஒற்றை தலைவலியின் போது நோயாளிகள் குமட்டல், வாந்தி, லைட் சென்சிடிவ் மற்றும் சவுண்ட் சென்சிடிவ் ஆகியவற்றாலும் பாதிக்கப்படுகின்றனர். க்ளோபல் டிசீஸ் பர்டன் (Global disease burden) ஆய்வின்படி, ஒற்றைத் தலைவலி உலகில் மூன்றாவது பொதுவான உடல்நலப் பிரச்சினையாகும்.
தூக்கமின்மை, சரியாக உணவு உண்ணாமல் இருப்பது, அதிகப்படியான உடற்பயிற்சி, உணர்ச்சிகளால் ஏற்படும் மன அழுத்தம், பிரகாசமான விளக்குகள், உரத்த ஒலிகள், குறிப்பிட்ட வாசனை, ஹார்மோன் மாற்றங்கள், மாதவிடாய், நீர்ப்போக்கு, காஃபின், சாக்லேட், சீஸ், ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட இறைச்சி போன்ற சில உணவுகள் ஒற்றைத் தலைவலியை தூண்டும் முக்கிய காரணங்கள் ஆகும். சில ஆய்வுகள் கோடை காலத்தின் போது ஒற்றைத் தலைவலி அடிக்கடி ஏற்படும் என்கிறது. அப்படியாக இந்த கோடையில் ஒற்றைத் தலைவலி இருந்து தப்பிக்க இதோ சில டிப்ஸ்.
உங்களை ஹைட்ரேடட் ஆக வைத்துக்கொள்ளவும்:
வெளியில் செல்லும்போது எப்போதும் தண்ணீர் பாட்டிலை எடுத்து செல்லுங்கள். தினமும் 2.5 - 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம்.
also read : பாத்ரூமில் துர்நாற்றம் வீசுகிறதா ? இந்த குளியலறை செடிகளை வளர்க்கலாம்..
எதை சாப்பிடலாம், எதை தவிர்க்கலாம்:
காபி, ரெட் ஒயின், சாக்லேட்கள், சீஸ் ஆகியவைகளுக்கு பதிலாக கோடைகால பழங்களான மாம்பழங்கள், தர்பூசணிகள், வெள்ளரிகள் போன்றவைகளை உட்கொள்ளுங்கள்.
தொப்பிகள் மற்றும் கூலர்ஸ்களை மறந்துவிடாதீர்கள்:
தொப்பிகள் நம்மை குளிர்ச்சியாக வைத்திருப்பதையும், கூலர்ஸ் பிரகாசமான வெளிச்சங்களை தவிர்ப்பதையும் உறுதி செய்கின்றன. மேற்கண்ட இரண்டுமே ஒற்றைத் தலைவலியை தூண்டும் மிகவும் பொதுவான காரணங்கள் ஆகும்.
அழகுசாதனப் பொருட்களின் தேர்வில் கவனம் தேவை:
* சன்ஸ்க்ரீன் போன்ற பொருட்களை வாங்கும் போது நறுமணம் இல்லாத ஒன்றை தேர்வு செய்வது நல்லது.
* ஏசி-யில் மிதமான வெப்பநிலையை பராமரிக்க வேண்டும்:
* 25 - 27 டிகிரி செல்சியஸ் தான் மனித உடலுக்கு ஏற்ற வெப்பநிலை ஆகும். இதை பராமரிப்பது நல்லது.
சரியான நேரத்தில் தூக்கம் மற்றும் உணவு:
உங்களின் தூக்கம் மற்றும் உணவுக்கான அட்டவணையை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். விடுமுறையில் இருக்கும்போது கூட சரியான நேரத்தில் உணவை உட்கொள்ள மறக்க வேண்டாம்.
சூரியனுக்கு கொஞ்சம் மரியாதை கொடுங்கள்:
முடிந்தவரை, வெயிலால் உடலில் ஏற்படும் வறட்சியைத் தவிர்க்க காலை அல்லது மாலையில் உடற்பயிற்சி செய்வது மற்றும் வெளியே செல்வதை திட்டமிடுங்கள்.
also read : மலேரியா என்றால் என்ன ? இன்று உலக மலேரியா தினம் 2022...
மன அழுத்தத்தை கையாள வேண்டும்:
வேலையையும், நேரத்தையும் புத்திசாலித்தனமாக நிர்வகிக்க பழகுங்கள். ஸ்ட்ரெஸ் ஆக உணரும்போது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.
இதெல்லாம் மீறி ஒற்றைத் தலைவலி வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
ஓய்வெடுக்க அமைதியான, இருண்ட இடத்தை கண்டுபிடிக்கவும், போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும், உங்கள் தலையில் கோல்ட் கம்ப்ரெஸ்-ஐ வைக்கவும், உங்கள் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட பாராசிட்டமால், டிக்ளோஃபெனாக் அல்லது நாப்ராக்ஸன் போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்ளவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Headache, Migraine Headache