Home /News /lifestyle /

ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு இவையெல்லாம் கூட காரணமாக இருக்கலாம்..!

ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு இவையெல்லாம் கூட காரணமாக இருக்கலாம்..!

காட்சி படம்

காட்சி படம்

Reason For Irregular Periods | ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படுவதற்கான காரணங்களை பற்றி மருத்துவர்கள் சொல்வதை தெரிந்துக்கொள்ளுங்கள்..

குளிர்காலம் உடல்நலத்தில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும். மாதவிடாய் சுழற்சி சீராக இருப்பவர்களுக்கு கூட ஒரு சில நாட்கள் மாதவிடாய் தாமதமாகலாம். ஆனால், சில பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீராகவே இருக்காது. இருபத்தி எட்டு நாட்கள் என்பது பொதுவான ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி ஆக கூறப்படுகிறது. ஒரு சிலருக்கு இயல்பாகவே 30 நாள் அல்லது 35 நாள் என்பது இயல்பான மாதவிடாய் சுழற்சியாக ஏற்படுகிறது. அவ்வபோது ஒருமுறை மாதவிடாய் தாமதமானால் பிரச்சினைகள் இல்லை. ஆனால் அடிக்கடி மாதவிடாய் சுழற்சி சீராக இல்லை என்னும் போது, உங்கள் மகப்பேறு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி நடைபெற வேண்டும், ஒழுங்கான மாதவிடாய் மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி என்றால் என்ன, மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்று இருந்தால் அதற்கு என்னவெல்லாம் காரணங்களாக இருக்கலாம் என்பதைப் பற்றி மகப்பேறு நிபுணர், பெண்கள் சிறப்பு மருத்துவரான பூமிகா பன்சால் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு பெண்ணும் தனித்துவமானவர், ஒவ்வொருவரின் உடல் கூறுகளும் வேறுபடும், அதே போல அனைவருக்கும் மாதவிடாய் என்பது ஒரே மாதிரியான காலகட்டத்தில் ஒரே சுழற்சியில் ஏற்படாது. கடிகாரம் சீராக சுற்றுவது போல, சில பெண்களுக்கு மாதவிடாய் துல்லியமாக, குறிப்பிட்ட நாட்களில் ஏற்படும். சிலருக்கு அவ்வப்போது முன்னும் பின்னும் தாமதமாகலாம். ஓரளவுக்கு ஆரோக்கியமாக இருக்கும் பெண்களுக்கு 25 நாட்கள் முதல் 35 நாட்களுக்கு ஒரு முறை என்று மாதவிடாய் சுழற்சி ஏற்படலாம் என்று கூறியுள்ளார்.

உங்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படுவதற்கான காரணங்களை பற்றி மருத்துவர்கள் தெரிவித்துள்ள காரணங்கள் இங்கே:

also read : மனதை அமைதியாக வைத்திருக்க உதவும் டிஜிட்டல் டிடாக்ஸ்..

* ஒவ்வொரு முறை மாதவிடாய் ஏற்படும் போதும் உங்களுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ரத்தப்போக்கு ஏற்பட்டால், மாதவிடாய் சுழற்சியின் காலம் மாறுபடும்.



* எத்தனை நாட்களுக்கு மாதவிடாய் இரத்தப்போக்கு இருக்கிறது என்பதைப் பொறுத்து அடுத்த மாதவிடாய் சுழற்சி தாமதமாக ஏற்படலாம். ஒரு சிலருக்கு இரண்டு நாட்கள் வரை இரத்தப் போக்கு இருக்கும். ஒரு சிலருக்கு 4 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும். இதைப்போல் அது மாதவிடாய் சுழற்சி காலமும் வேறுபடலாம்.

* IUD எனப்படும் கருத்தடை சாதனத்தை நீங்கள் பொறுத்தியிருந்தால் உங்களுக்கு மாதவிடாய் சீராக இருக்காது.

* கருத்தரிக்காமல் இருப்பதற்காக மாத்திரைகளை அல்லது மருந்துகளை எடுத்துக் கொண்டால் அது ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்தும். இதனால் மாதவிடாய் தாமதம் ஆகலாம்

* அதிகப்படியான உடற்பயிற்சி செய்வது மாதவிடாய் சுழற்சியை மாற்றும்.

also read : கோவிட் தொற்றின் மூன்றாவது அலையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படலாம் : ஆய்வு



* PCOS எனப்படும் கருப்பைக்குள் இருக்கும் நீர்க்கட்டிகள் காரணத்தால் மாதவிடாய் ஒழுங்கற்று இருக்கும்.

* அதிகப்படியான மன அழுத்தம் ஏற்படும் போது கார்டிசால் என்ற ஹார்மோன் சுரக்கும். இது உடலுக்கு தேவையான மற்ற ஹார்மோன்களை கட்டுப்படுத்தி உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்.

* சம்மந்தப்பட்ட ஹார்மோன்களையும் இது பாதிப்பதும் மாதவிடாய் சுழற்சி தாமதமாக்கும்.



* கார்டிசால் ஹார்மோன் போலவே தைராய்டு பாதிப்பு இருந்தாலும், அது ஒட்டுமொத்த உடலின் செயல்பாடுகளையும் பாதிக்கிறது. இதில் மாதவிடாய் சுழற்சியும் அடங்கும். தைராய்டு பாதிப்பு மாதவிடாயை மிகவும் தீவிரமாக பாதிக்கும்.

also read : நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை...

* எண்டோமெட்ரியோசிஸ் எனப்படும் கர்ப்பப்பைக்குள் இருக்கும் மெல்லிய லைனிங் தடிமன் ஆவது மாதவிடாயை பாதிக்கும்.

மாதவிடாய் சுழற்சி சீராக இருப்பது அல்லது மாதவிடாய் ஏற்படுவது தள்ளிப் போவது ஒரு சில சூழல்களில், வாழ்க்கைமுறையால் ஏற்படும்; ஒரு சில நேரங்களில் உடல்நல குறைபாடுகளால் ஏற்படும். இதற்கு என்ன காரணம் என்பதை சரியாக கண்டறிந்து நீங்கள் மருத்துவரிடம் அதற்கான ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Irregular periods, Periods, Women Health

அடுத்த செய்தி