• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Hypothyroidism : குழந்தைகளுக்கு ஏற்படும் ஹைப்போ தைராய்டு பாதிப்புக்கான அறிகுறிகள்..

Hypothyroidism : குழந்தைகளுக்கு ஏற்படும் ஹைப்போ தைராய்டு பாதிப்புக்கான அறிகுறிகள்..

காட்சி படம்

காட்சி படம்

Hypothyroidism Symptoms : ஹைப்போதைராய்டு பாதிப்பு பிறக்கும் போதே எல்லா குழந்தைகளுக்கும் ஏற்படாது.

  • Share this:
தொண்டைப் பகுதியில் இருக்கும் பட்டாம்பூச்சி வடிவ கிளாண்டு தான் தைராய்ட் சுரப்பு. கடந்த சில ஆண்டுகளாக தைராய்டு சுரப்பி குறைபாட்டால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக பெண்களை அதிகமாக பாதிக்கும் இந்த ஹார்மோன் குறைபாடு, தற்போது டீன் ஏஜ் பிள்ளைகள், வளரும் குழந்தைகள் மற்றும் கைக்குழந்தைகளையும் கூட பாதித்து வருகிறது. ஹைப்போதைராய்டிசம் என்பது தைராய்டு சுரப்பி சரியாக செயல்படாமல், குறைவான அளவு தைராய்டு சுரப்பதைக் குறிக்கும் ஹார்மோன் கோளாறு.

தைராய்டு ஹார்மோன் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் முக்கியமான ஹார்மோனாக இருப்பதால், குறைவான தைராய்டு சுரக்கும் போது, உங்கள் குழந்தையின் உடல்வளர்ச்சி முதல் கற்றுக்கொள்ளும் திறன் வரை பல்வேறு செயல்பாடுகளும் பாதிக்கப்படலாம். குழந்தைகளுக்கு ஹைபோதைராய்டு பாதிப்பு இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி?

குழந்தைகளுக்கு ஹைபோதைராய்டிசம் ஏன் ஏற்படுகிறது?

மெடிக்கல் ஹிஸ்டரி எனப்படும் குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு இந்த ஹார்மோன் குறைபாடு இருந்தால் குழந்தைகளுக்கு ஹைபோதைராய்டிசம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பெற்றோர்களுக்கு, தாத்தா பாட்டிக்கு, மற்றும் சகோதர சகோதரிகளுக்கு இந்த எண்டோகிரைன் குறைபாடு பாதிப்பு ஏற்பட்டால், குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

ஹைப்போதைராய்டு பாதிப்பு பிறக்கும் போதே எல்லா குழந்தைகளுக்கும் ஏற்படாது. இருப்பினும், வளர வளர உடலுக்கு தேவையான தைராய்டு ஹார்மோன் சுரக்காமல் போகும்.

ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளில் ஹைபோதைராய்டிசம் பாதிப்பு இருந்தால், எடை அதிகரிப்பு, குளிரைத் தாங்க முடியாத தன்மை, வளர்ச்சி விகிதத்தில் குறைவு, கற்றல் திறன் குறைவு மற்றும் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு ஆகியவை பொதுவாக காணப்படும் அறிகுறிகள் ஆகும்.

also read : குளிர்காலத்தில் குழந்தைகளின் சருமத்தை பாதுகாக்க உதவும் 5 ஸ்கின்கேர் டிப்ஸ்..

யாருக்கு பாதிப்பு அதிகமாக உள்ளது?

ஒரு சில குழந்தைகளுக்கு பிறக்கும் பொழுதே ஹைப்போதைராய்டு குறைபாடு இருக்கும். வேறு சில நோய்களால் அல்லது உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந்தைகள், வளரும்போது இந்த தைராய்டு குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள்.

பின்வரும் உடல்நலக் கோளாறுகள் உள்ள குழந்தைகளுக்கு, அவர்கள் வளரும் போது அல்லது டீனேஜ் பருவத்தில் ஹைபோதைராய்டிசம் உருவாகக்கூடிய ஆபத்து அதிகம் உள்ளது.

குரோமோசோம் குறைபாடு :

* உடலில் வேறு ஏதாவது ஆட்டோ-இம்யூன் குறைபாடு
* கர்ப்ப காலத்தில் தாய் தைராய்டு குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்து, சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது
* தலை மற்றும் கழுத்துப் பகுதியில் ரேடியேஷன் சிகிச்சை
* தைராய்டு சுரப்பியில் காயம்
* ஊட்டச்சத்துக் குறைபாடு, குறிப்பாக ஐயோடின் உப்பு குறைபாடு போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.

பிறந்த குழந்தைகளுக்கு தைராய்டு பாதிப்பு இருப்பதை எவ்வாறு கண்டறிவது?

ஹைபோதைராய்டிசம் பாதிப்பு, ஒவ்வொரு வயதினருக்கும் ஒவ்வொரு விதமாக அறிகுறிகளை வெளிப்படுத்தும். சிறுவர்களை விட, பிறந்த குழந்தைகளுக்கு காணப்படும் அறிகுறிகள் வேறுபாடும். பொதுவான அறிகுறிகள்.,

* கண்கள் மற்றும் சருமம் மஞ்சள் நிறத்தில் காணப்படும்
* மலச்சிக்கல்
* பசியின்மை
* குழந்தை அமைதியாகவே இருக்கும்
* குழந்தை சில்லென்று இருக்கும்
* மூச்சு விடுவதில் சிரமம்
* பெரிய‌ நாக்கு

சிறுவர்களில் காணப்படும் ஹைப்போதைராய்டிசம் அறிகுறிகள் :

ஹைப்போதைராய்டு பாதிப்பு இருக்கும் சிறுவர்களுக்கு, பின்வரும் அறிகுறிகள் காணப்படும்.,

* உடல் ரீதியான வளர்ச்சி குறைபாடு
* வயதுக்கு ஏற்ற கற்றல் திறன், மன வளர்ச்சி இருக்காது
* வீக்கமான முகம்
* எப்போதுமே சோர்வாக இருப்பார்கள்
* மலச்சிக்கல்
* கவனச்சிதறல், ஞாபகம் வைத்துக் கொள்வதில் தடுமாற்றம்
* வறண்ட சருமம், முடி

ஹைப்போதைராய்டிசம் சிகிச்சை :

தைராய்டு குறைபாட்டுக்கு சிகிச்சை என்று வரும் போது, கைக்குழந்தைகள் மற்றும் வளரும் குழந்தைகளுக்கு சிகிச்சை முறைகள் மாறுபடும். தைராய்டு குறைபாடு எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கிறது என்பதன் அடிப்படையில், மருத்துவர்கள் மருந்துகள் மற்றும் ஹார்மோன் தெரபியை பரிந்துரைக்கலாம். உடலின் அனைத்து இயக்கங்களையும் தைராய்டு ஹார்மோன் பாதிப்பதால், முறையான சிகிச்சையை மேற்கொள்வது மிகவும் முக்கியம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: