சமீபத்தில் பல இந்திய மற்றும் வெளிநாட்டு பிரபலங்கள் தாங்கள் சந்தித்து வரும் உடல்நிலை பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். இதன் மூலம் அந்த நோய்கள் பற்றிய அறிவும் விழிப்புணர்வும் மக்களிடம் அதிகம் வருவதை காணமுடிகிறது.
அந்த வகையில் பிரபலமான உலக சினிமாவான டைட்டானிக் பட பாடகி செலின் டியானும் தற்போது ஒரு புதிய செய்தியாக மாறியுள்ளார்.
டைட்டானிக் படத்தில் பாடிய செலின் டியான் தற்போது அவரது பல பாடல் நிகழ்ச்சிகளை ரத்து செய்து வருகிறார். காரணம் அவர் ஸ்டிஃப்-பர்சன் சிண்ட்ரோம் (எஸ்பிஎஸ்) நோயால் பாதிக்கப்பட்டிருப்பதுதான். இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் ஒரு உணர்ச்சிகரமான வீடியோஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், தனக்கு எஸ்பிஎஸ் இருப்பது கண்டறியப்பட்டதால் பிப்ரவரியில் தனது தொடர் நிகழ்ச்சிகளை மீண்டும் தொடங்க முடியாது என்று கூறினார்.
" மில்லியனில் ஒருவரை தாக்கும் ஸ்டிஃப்-பர்சன் சிண்ட்ரோம் எனப்படும் அரிய நரம்பியல் கோளாறு தாக்கியதால் அதற்கு சிகிச்சை பெற வேண்டிய நிலையில் இருக்கிறேன் அதனால் என் நிகழ்ச்சிகளை ரத்து செய்கிறேன்” என்றார்.
View this post on Instagram
ஸ்டிஃப்-பெர்சன் சிண்ட்ரோம் என்றால் என்ன?
நரம்பியல் கோளாறுகளுக்கான தேசிய நிறுவன அறிக்கைபடி , மோர்ஷ்-வோல்ட்மேன் நோய்க்குறி என்றும் அழைக்கப்படும் ஸ்டிஃப்-பர்சன் சிண்ட்ரோம் (எஸ்பிஎஸ்) என்பது ஒரு அரிய, நரம்பியல் கோளாறு ஆகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடற்பகுதி, கைகள் மற்றும் கால்களில் உள்ள தசைகளில் விறைப்பினால் பாதிக்கப்படுகிறார். இதனால் சதை பகுதிகளில் வலி, விறைப்பு தன்மை, அசைக்க முடியாத நிலை இருக்கும் என்று சொல்கின்றனர்.
இது உடலின் மைய நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. காலப்போக்கில், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நேராக நிற்பது நடப்பது உள்ளிட்ட அன்றாட பணிகளை சிலவே சிரமப்படுவர். மூளைக்கும் தசைகளுக்கும் இடையிலான தொடர்புக்கான இயல்பான பாதைகளை சீர்குலைவைத்தால் இது நிகழ்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அறிகுறிகள்
இந்த நோய் வருதற்கான சரியான காரணம் என்ன என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், பொதுவாக விறைப்பு, கடுமையான தசை பிடிப்புகள் மற்றும் அனிச்சை செயல்களை பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. செலின் தனது குரல்நாண்களை அவள் பழகிய விதத்தில் பயன்படுத்த தனது தசைகள் அனுமதிக்கவில்லை என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க :நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் வித்தியாசம் என்ன..? கட்டுப்படுத்தும் வழிகள்...
அதேபோல் சாலையில் நடந்து செல்லும்போது காதில் கேட்கும் மற்ற சத்தத்தினால் தசை பிடிப்புகள் அதிகம் ஆகலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதுவரை 30-60 வயதிற்கு உள்ளன மக்களைதான் இது அதிகளவு பாதித்துள்ளது.
சிகிச்சை
இந்த நோய் உருவாகும் காரணம் சரியாக தெரியாததால் இதன் சிகிசை என்பதும் சிரமமே. இந்த நோய்க்கு என்று தனியாக மருந்துகளோ மருத்துவ சிகிச்சைகளோ கிடையாது. Glutamic acid decarboxylase (GAD) ஆன்டிபாடிகளின் அளவிடும் ரத்தப் பரிசோதனை மூலம் SPS நோயைக் கண்டறியலாம். தசை தளர்த்திகள் மற்றும் வலி நிவாரணிகள் மூலம் வலிகளை குறைக்க சிகிச்சை அளிக்கப்படும். சிகிச்சை அளிக்காவிட்டால் நோய் தீவிரம் அடையும்.
உடல் அசைவுகள் கொடுத்து பயிற்சி கொடுத்துக்கொண்டே இருந்தால் தசைகள் செயலிலேயே இருக்க வாய்ப்புண்டு. அதை தான் முக்கிய சிகிச்சையாக கூறுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Disease