• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • 3% குழந்தைகளை பாதிக்கும் Obstructive Sleep Apnea.. எதனால் ஏற்படுகிறது? எப்படி சிகிச்சை அளிக்கலாம் ?

3% குழந்தைகளை பாதிக்கும் Obstructive Sleep Apnea.. எதனால் ஏற்படுகிறது? எப்படி சிகிச்சை அளிக்கலாம் ?

காட்சி படம்

காட்சி படம்

Obstructive Sleep Apnea : குழந்தைகளுக்கு OSA பாதிப்பு ஏன் ஏற்படுகிறது ?

  • Share this:
சிலருக்கு தூக்கத்தின் போது மூச்சுத்திணறல் ஏற்படுதை பார்த்திருப்போம் அல்லது கேள்விப்பட்டிருப்போம். இதனை அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் ஆப்னியா (Obstructive sleep apnea - OSA) என்று குறிப்பிடுகிறார்கள். பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளுக்கும் கூட தூக்கத்தில் கோளாறை ஏற்படுத்தும் இந்த மெடிக்கல் கண்டிஷன் காணப்படுகிறது. ஒரு குழந்தை தூங்கும் போது OSA ஏற்பட்டால் அவர்களது சுவாசம் சிறிது நேரம் தடைபடுகிறது.

அவர்களின் மேல் சுவாசப்பாதையில் அடைப்பு ஏற்படுவதால் இது நிகழ்கிறது. மேல்சுவாச பாதை என்பது, மூக்கு மற்றும் வாய் வழியே மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலுக்கு செல்லும் பாதையாகும். குழந்தைகளின் தூக்கத்தை முற்றிலும் சீர்குலைக்கும் வகையில் OSA ஒரே இரவில் பலமுறை நிகழலாம்.

இதன் போது பெரும்பாலான குழந்தைகள் குறட்டை விடுவார்கள் என்றாலும் படுக்கையை ஈரம் செய்வது அல்லது தூக்கத்தில் நடப்பது, காலை எழுந்ததும் தலைவலி, அமைதியின்மை, பகலில் தூக்கம், தவறான நிலையில் தூங்குவது, சத்தமாக குறட்டை, பசியின்மை, இரவில் வாய் வழியே சுவாசிப்பது, மூச்சுத் திணறல் அல்லது விழுங்குவதில் பிரச்சனைகள் போன்ற மற்ற அறிகுறிகளையும் சில குழந்தைகள் வெளிக்காட்டலாம்.

தவிர குழந்தைகள் குறட்டை விடுவது மிகவும் பொதுவானதாக நம்பப்படுகிறது. ஏனெனில் சுமார் 15 முதல் 20% குழந்தைகள் குறட்டை விடுகிறார்கள். ஆனால் ஸ்லீப் ஆப்னியா 2 - 3% குழந்தைகளை மட்டுமே பாதிக்கும். இந்த நிலை பொதுவாக 3 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளில் காணப்படுகிறது.

எதனால் ஏற்படுகிறது?

தலை மற்றும் கழுத்தில் உள்ள தசைகள் மேல் சுவாசப்பாதையை திறந்து வைக்க உதவுகின்றன. ஒரு குழந்தை தூங்கும் போது, இந்த தசைகள் ஓய்வெடுக்க முனைகின்றன. அப்போது திசுக்கள் நெருக்கமாக மடிகின்றன. ஒருவேளை குழந்தைகள் விழித்திருக்கும் போது அவர்களின் மேல் சுவாசப்பாதை முழுவதும் திறக்காமல் பகுதியளவு தான் திறக்கிறது என்றால், உறங்கும் போது மேல் சுவாசப்பாதை முழுவதுமாக மூடப்படும்.

also read : அழகான சருமத்தை பெற இந்த எண்ணெய்களை பயன்படுத்துங்கள்..

இதனில் தான் அவர்களுக்கு OSA கோளாறு ஏற்படுகிறது. தொண்டையின் பின்புறத்தில் உள்ள டான்சில்ஸ், மூக்கின் பின்பகுதியில் உள்ள அடினாய்டுகள் மற்றும் சுவாசப் பாதையில் உள்ள டர்பைனேட்ஸ் (turbinates) உள்ளிட்டவை குழந்தைகளுக்கு OSA ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களாக கூறப்படுகிறது.

பருமனாக இருத்தல், காற்று பாதையில் அசாதாரணமாக காணப்படும் ஒரு கட்டி அல்லது வளர்ச்சி, டவுன் சிண்ட்ரோம் மற்றும் பியர்-ராபின் சிண்ட்ரோம் போன்ற சில நோய்க்குறிகள் அல்லது பிறப்பு குறைபாடுகளும் குழந்தைகளுக்கு OSA ஏற்பட காரணமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

எவ்வாறு கண்டறியலாம்?

குழந்தைகளை தூக்க ஆய்விற்கு உட்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு OSA கோளாறு இருக்கிறதா என்பதை கண்டறியலாம். அப்போது அவர்களின் உடல் ஒரு மானிட்டருடன் இணைக்கப்படும். மூளை செயல்பாடு, இதயத்தின் மின் செயல்பாடு, ரத்தத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடின் அளவு, தசை செயல்பாடு, மூக்கு மற்றும் வாய் வழியே செல்லும் காற்றின் அளவு உள்ளிட்டவை மதிப்பீடு செய்யப்படும்.

also read : குழந்தைகளின் கோபத்தை சமாளிக்க பெற்றோர் கடைபிடிக்க வேண்டிய எளிய வழிகள்..

சிகிச்சை என்ன?

பிரச்சனையின் தீவிரம் மற்றும் காரணங்களை பொறுத்தே சிகிச்சை முடிவு செய்யப்படுகிறது. அடினாய்டுகள் மற்றும் டான்சில்கள் பெரிதாக இருந்தால் ஆப்ரேஷன் செய்து அகற்ற வேண்டியிருக்கும். உடல்பருமன் காரணம் என்றால் உடற்பயிற்சி மற்றும் எடை மேலாண்மை திட்டம் பரிந்துரைக்கப்படும். கடும் OSA இருந்தால் இரவில் சுவாசிக்க உதவும் வகையில் CPAP மெஷினை பயன்படுத்த பரிந்துரைக்கப்படும். இன்ஹேல்ட் ஸ்டெராய்டுகள் பெரிய அளவிலான டான்சில்களால் ஏற்படும் லேசான அல்லது மிதமான OSA உள்ள குழந்தைகளுக்கு உதவ கூடும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: