Home /News /lifestyle /

இனி உஷாரா இருங்க..! ஷவர்மா சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட காரணம் இதுதான்..

இனி உஷாரா இருங்க..! ஷவர்மா சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட காரணம் இதுதான்..

ஷவர்மா

ஷவர்மா

what is shigella bacteria : ஷிகெல்லா பாக்டீரியாவானது நமது செரிமான மண்டலத்தில் நோய்த்தொற்றை ஏற்படுத்தக் கூடியது .

நீங்கள் டிவியில் தினசரி செய்தி பார்க்காதவராக இருக்கலாம் அல்லது தினசரி செய்தித்தாள் வாசிக்காதவராக இருக்கலாம். ஆனால், சமூக வலைதளங்கள் மூலமாகவது இந்தச் செய்தி உங்கள் செவிகளை எட்டியிருக்கும். அதாவது, கேரள மாநிலம், காஸர்கோடு மாவட்டத்தில் உள்ள ரெஸ்டாரண்ட் ஒன்றில் அண்மையில் ஷவர்மா சாப்பிட்ட 58 பேருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டன. 16 வயது இளம்பெண் அங்கு ஷவர்மா சாப்பிட்ட பின் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, நாடெங்கிலும் ஷவர்மா உணவுப் பாதுகாப்பு குறித்த கேள்விக்குறி எழுந்துள்ளது. குறிப்பாக, கேரளத்தை ஒட்டி அமைந்துள்ள தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ஷவர்மா பிரியர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தும் செய்தியாக அமைந்துள்ளது.

ஒரு பக்கம் கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருந்தாலும், பிள்ளைகளுக்கு விடுமுறை காலமான மே மாதத்தில் பலரும் சுற்றுலா செல்வதையோ அல்லது குடும்பத்துடன் வெளியே சென்று சாப்பிடுவதையோ வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

வீடுகளில் வழக்கமாக இட்லி, தோசை, சோறு போன்ற உணவு வகைகளை சாப்பிட்டு சற்று அலுத்துப் போய்விட்டதால், ரெஸ்டாரண்ட்களில் நாம் டேஸ்ட் பார்க்கும் பல வித உணவுகளில் இந்த ஷவர்மாவும் ஒன்று. அத்தகைய ஷவர்மா விஷமாக மாறுகிறது என்ற தகவல் நமக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அதற்கான காரணம் என்ன என்பதை நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

also read : கோடையிலும் ஜலதோஷம், கரகரப்பான தொண்டை பிரச்சனையா..? இதை கட்டாயம் செய்ய மறந்துடாதீங்க..!ஷிகெல்லா பாக்டீரியா : 

கேரளாவில் உணவுப் பிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய ஷவர்மாவை எடுத்து பரிசோதனை செய்தபோது, அதில் ஷிகெல்லா என்னும் பாக்டீரியா இருந்தது தெரிய வந்தது. ஷிகோலெசிஸ் என்னும் ஷிகெல்லா பாக்டீரியாவானது நமது செரிமான மண்டலத்தில் நோய்த்தொற்றை ஏற்படுத்தக் கூடியது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உலகெங்கிலும் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 188 மில்லியன் மக்கள் இந்த பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்படுகிறார்களாம். குறிப்பாக, இந்த தொற்று காரணமாக 1 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர் என்ற தகவல் நமக்கு அதிர்ச்சியை தருவதாக அமைந்துள்ளது.காரணமும், அறிகுறிகளும் : 

ஷிகெல்லா பாக்டீரியா தொற்று பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு ஏற்படுவதே இந்த பாதிப்புக்கு முதன்மையான காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குடலுக்குள் நுழையும் இந்த பாக்டீரியா நமது சிறு குடலில் பெருகி, பெருங்குடலுக்கும் பரவி விடுகிறது. இதற்கு பிறகு, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

also read : பெண்களை அதிகம் தாக்கும் சிறுநீரக நோய்.. அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறை இதோ!

சாதாரணமாக, நீங்கள் உணவை சாப்பிட்ட பிறகு பின்வரும் அறிகுறிகள் இருந்தால் நீங்கள் உஷாராக இருக்க வேண்டும். குறிப்பாக, வெளியிடங்களில் சாப்பிட்ட பிறகு இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.

* வயிற்றுப்போக்கு - ரத்தம் அல்லது சளி சேர்ந்து வருவது
* வயிற்று வலி
* காய்ச்சல்
* குமட்டல்
* வாந்திதடுப்பு நடவடிக்கைகள் :

* கைகளை அவ்வபோது 20 நொடிகளுக்கு குறையாமல் சோப் வைத்து கழுவ வேண்டும்.
* பயன்படுத்தப்பட்ட டயப்பர்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.
உங்களுக்கு வயிற்றுப்போக்கு பிரச்சினை இருந்தால், மற்றவர்களுக்கு உணவு தயாரிக்கக் கூடாது.
* குளம், ஏரி போன்ற சுத்திகரிக்கப்படாத இடங்களில் இருந்து தண்ணீர் பருகக் கூடாது.
* தண்ணீரை கொதிக்க வைத்து, வடிகட்டி பருகலாம்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Chicken

அடுத்த செய்தி