ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மகப்பேறுக்கு பிறகான மனச்சோர்வு என்றால் என்ன? பிரசவத்திற்குப் பிறகு எப்போது உடற்பயிற்சியை தொடங்கலாம்? மருத்துவர் அட்வைஸ்

மகப்பேறுக்கு பிறகான மனச்சோர்வு என்றால் என்ன? பிரசவத்திற்குப் பிறகு எப்போது உடற்பயிற்சியை தொடங்கலாம்? மருத்துவர் அட்வைஸ்

சுகப்பிரசவம் மற்றும் சி-பிரிவு ஆகிய இரண்டிற்குமே, ஆறு வார காலம் என்பது குணப்படுத்தும் காலமாகும். அதன் பிறகு ஒருவர் உடற்பயிற்சி செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்.

சுகப்பிரசவம் மற்றும் சி-பிரிவு ஆகிய இரண்டிற்குமே, ஆறு வார காலம் என்பது குணப்படுத்தும் காலமாகும். அதன் பிறகு ஒருவர் உடற்பயிற்சி செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்.

சுகப்பிரசவம் மற்றும் சி-பிரிவு ஆகிய இரண்டிற்குமே, ஆறு வார காலம் என்பது குணப்படுத்தும் காலமாகும். அதன் பிறகு ஒருவர் உடற்பயிற்சி செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கர்ப்ப காலம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் சவாலான அதே சமயத்தில் அழகான கட்டங்களில் ஒன்றாகும். கர்ப்பம் உங்களுக்கு என்ன மாதிரியான மாற்றத்தை கொடுக்க காத்திருக்கிறது என்ற கேள்விகள் எழுவது அந்த நேரத்தில் இயற்கையானது. இணையத்தில் ஏராளமான தரவுகள் உள்ளன, அதுமட்டுமின்றி குடும்ப ஆலோசனைகள் தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டு வருகின்றன. நீங்கள் சந்திக்கும் தகவலை எப்போதும் சரிபார்க்க வேண்டியது அவசியம். இவை பற்றி மகப்பேறு மருத்துவரான டாக்டர் ரஞ்சனா தானு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதிலளித்தார். அதுகுறித்து பார்க்கலாம்.

மகப்பேறுக்கு பிறகான மனச்சோர்வு (postpartum depression) என்றால் என்ன?

பிரசவத்திற்குப் பிறகு திடீரென ஹார்மோன்கள் திரும்பப் பெறுதல், பால் ஹார்மோன் இருப்பு மற்றும் தூக்கமின்மை போன்ற காரணிகள் பிரசவத்திற்குப் பின் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். இதனால் ஒரு பெண் தான் பின்வாங்குவதை உணர்ந்து அழத் தொடங்குவார். பல விஷயங்களில் பிடிப்பற்று இருக்க நேரிடும். இதற்கு சில வகையான மருத்துவ ஆலோசனைகள் தேவை. உணவுமுறையில் கவனமாய் இருப்பது உதவும் என்கிறார் டாக்டர் ரஞ்சனா.

இதையும் படிங்க | ‘40 வயதினிலே’… 40 வயதிலும் உங்கள் எடையை குறைப்பது சாத்தியமே… 5 எஃபெக்டிவ் டிப்ஸ்!

பிரசவத்திற்குப் பிறகு ஒருவர் எவ்வளவு சீக்கிரம் உடற்பயிற்சியை தொடங்கலாம்?

சுகப்பிரசவம் மற்றும் சி-பிரிவு ஆகிய இரண்டிற்குமே, ஆறு வார காலம் என்பது குணப்படுத்தும் காலமாகும். அதன் பிறகு ஒருவர் உடற்பயிற்சி செய்ய ஊக்குவிக்கப்படுகிறார். முறையான உடற்பயிற்சி இல்லையெனில் கர்ப்பத்தின் மொத்த அளவு அதிகரித்து, உடல் எடையை குறைப்பதில் மிகவும் சிக்கலாகிவிடும் என்கிறார் ரஞ்சனா. உடற்பயிற்சி செய்ய முதலில் மருத்துவரிடன் ஆலோசனைகளை பெற்று பின்னர் படிப்படியாக தொடங்க வேண்டும்.

சில பழக்கங்கள் கர்ப்பத்தை பாதிக்குமா?

புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியவை குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும் என்று பலர் கூற கேட்டிருப்போம். ஏன் பல ஆய்வுகளும் கூட இதைப்பற்றி வந்திருக்கின்றன. உங்கள் உடலை சுத்தப்படுத்துவது முக்கியம். நீங்கள் அரை சுத்திகரிக்கப்பட்ட முறையில் கர்ப்பம் அடைந்தால், அது குழந்தையின் கருப்பையின் உள் வளர்ச்சி, நஞ்சுக்கொடி அல்லது வளர்ச்சி தாமதத்திற்கு வழிவகுக்கும். கர்ப்பத்திற்கு குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்பு உங்கள் உடலை சுத்தப்படுத்த வேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரை. குழந்தை பேறுக்கு பிறகும் இது போன்ற தேவையற்ற, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை முழுமையாக நிறுத்தி விடுவது சிறந்தது என்கிறார் மருத்துவர்.

இதையும் படிங்க | பல் சுத்தம் முதல் டீடாக்ஸ் வரை… ஆயில் புல்லிங்கின் அசரவைக்கும் நன்மைகள்!

தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த கர்ப்பத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றுவது எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது.

Published by:Archana R
First published:

Tags: Post Pregnancy Depression, Pregnancy